Wednesday, July 26, 2017

திருஷ்டி கயிறு

வீட்டு வாசலில் தொங்கிக்கொண்டு இருப்பது திருஷ்டி கயிறு அல்ல. நம் உயிரை காக்கும் முதலுதவி பெட்டகம்.



நம் வீட்டுவாசலில் கருப்பு கயிற்றில் படிகாரம், எலுமிச்சைபழம், மிளகாய், மிளகு, ஈச்சமுள் மற்றும் மஞ்சள், தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டு இருக்கும்.

கண் திருஷ்டிக்காக என நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம் ஆனால் அது நம்முடைய உயிரைகாக்கதான் தொங்கிக்கொண்டு இருக்கிறது. 

எப்படியென்றால்....

மின் வசதியில்லாத காலங்களில் நம் வீடுகளீல் இரவில் பொருட்களை தேடுவது மிகுந்த சிரமமாக இருந்திருக்கும். இரவில் நம்முடைய முன்னோர்கள் வெளியில் சென்று வரும்போது அக்காலத்தில் தெருக்களிலும் மின்சாரம் இருக்காது,,

அப்பொழுது ஏதேனும் பூச்சியோ, பாம்போ அல்லது மற்ற ஏதேனும் விசபூச்சிகளோ கடித்துவிட்டால் என்ன செய்வது. அந்த சூழ்நிலையில் நம்முடைய பதட்டம் அதிகரிக்கும், முதல் உதவி மிக முக்கியம் அல்லவா?

அதற்காகத்தான் இந்த பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை நம் வீட்டுவாசலில் தொங்கவிட்டு இருப்பார்கள்.

கைகளிலோ அல்லது காலிலோ கடிப்பட்டு இருந்தால் விசம் மேலும் பரவாமல் இருக்க ‪கயிற்றால்‬ கட்டிவிடுவதால் விசம் பரவுவதை தடுக்கலாம்.

கடித்த இடத்தில் எரிச்சல் இருந்தால் ‪படிகாரத்தை‬ தேய்த்துவிடுவதால் எரிச்சல்குறையும், விசக்கடியாக‬ இருந்தால் ‪‎மிளகாய்‬ அல்லது ‪‎மிளகு‬ கடித்தால் காரம் இல்லையென்றால் கடுமையான விசக்கடி என்றும் காரம் இருந்தால் பூச்சிக்கடி என்றும் தெரிந்துகொள்வார்கள்.

கடித்ததால் ஏற்படும் களைப்பை போக்க ‪‎எலுமிச்சை‬ பழத்தை பிழிந்து கொடுப்பார்கள். எந்தமாதிரியான விசக்கடி என்பதை அறிய ‪‎ஈச்ச முள்ளால்‬ அந்த இடத்தை கீரிபார்த்து தெரிந்துகொள்வார்கள்.

‪‎எட்டுகால்‬ பூச்சி போன்றவை கடித்தால் ‪‎தேங்காய்‬ தண்ணிரும் ‪தேங்காய்கீத்தையும்‬ தின்றால் உடனடி விசமுறிவு ஏற்படும்.

சாதாரண‬ ரத்தகட்டி வீக்கமாக இருந்தால் ‪மஞ்சள்‬ தடவி விடுவார்கள். இதுதான் நம் முன்னோர்களின் முதலுதவி பெட்டகம்.

நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல.

தொங்கிக்கொண்டு இருப்பது மூடநம்பிக்கை சின்னம் அல்ல. முதலுதவி பெட்டகம். படித்து பகிரவும்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்?

தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் ஆகிவிட்டது.



சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.சாப்பிடும் பொழுது காலைத் தொங்கவைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.

எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும்படி வலியுறுத்தபட்டது...! சம்மணம் இட்டு சாப்பிட்டால் கௌரவ குறைவு ஏன்!!!

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

தூங்கி எழுந்தவுடன் ஏன் உள்ளங் கையை காண வேண்டும்?


இது அக்காலத்தில் இருந்து வரும் ஒரு மரபு, இதை தமிழர் கிராமத்தில் இன்றும் செய்கின்றனர். ஆனால் நகரத்தில் செய்வதில்லை.


*இதன் விவரம் யாதெனில்*

நாம் உடலில் தினமும் பிராண சக்தி இழப்பு ஏற்படுகிறது.

அதை சரி செய்ய *உணவு மற்றும் உறக்கம்* கொண்டு சரி செய்கிறோம்.

உறங்கும் போது பிரபஞ்ச சக்தி அதிகமாக உடலில் கலந்து பிரணனாக உடலில் தங்குகிறது. அவ்வாறு தங்கும் போது தலையில் அதிகமாக சேமிக்கபடுகிறது.

சேமிக்கபட்ட பிராணன் கண்ணை திறக்கும்போது அதிகமாக வெளியே செல்கிறது. அப்போது பிராண இழப்பு ஏற்படுகிறது.

அந்த பிராண சக்தி மீண்டும் உடலுக்குள் செலுத்த உள்ளங்கையை கண் முன்வைக்கிறேம். உள்ளங்கை இயல்பாக பிராண ஈர்ப்பு செய்யும்.

நாம் நினைத்தால் மட்டுமே உள்ளங்கையிலிருந்து பிராணன் வெளியே செல்லும்.

ஆக உள்ளங்கை பார்க்கும் போது சேமித்த பிராணன் மீண்டும் உள்ளே அனுப்டுகிறது.

பிராணன் பூரணமாக கிடைக்கும். இதை ஆதிகாலம் தொட்டே தமிழர்கள் செய்கிறார்கள்.

உள்ளங்கை என பெயர் ஏன் வைத்தான் தமிழன்!?

*உள்ளங்கை* = உள் அவையங்களோடு தொடர்புடைய பகுதி. இது அனைத்து வர்ம பகுதியோடு தொடர்புள்ளது.

*புறங்கை* = கையின் பின்பகுதி இங்கு பிராணன் இழப்பு இல்லை

அதனால் தான் அடித்தால் புறங்கையால் தட்டு, அடி என்பார்கள்.

புறங்கையால் யாரும் அடிக்க முடியாது. பிறரை துன்பம் அடைய செய்வது தவறு.

அடிப்பவனுக்கு தனது பிராண சலப்பு ஏற்படாமல் இருக்க கையை மூடவேண்டும் இது வர்மத்தில் குத்து என்று வரும்.

*முழங்கை =  சங்கை முழங்க  வாயின் பகுதிக்கு கொண்டு வர, மடங்கும் பகுதியின் கைக்கு முழங்கை* என்றும், அளத்தல் பகுதியில் அளவில் ஒரு முழம் என்றும் பின்னால் அழைக்கப்பட்டது.

*தமிழன் ஒவ்வொரு விசயமும் அறிவு பூர்வமாக செய்தான் என்பதை நினைவில் வைப்போம்*

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...


Thursday, July 20, 2017

குளியல் !

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை. அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!


மாத மளிகை பட்டியலில் சோப்பு டப்பாவை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம்.

சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா... கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும்.

இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பு பயன்படுத்தினார்கள். கப்பலில் மட்டும் அல்ல எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இது பயன்பட்டது.

சோப்பு போடுவதற்கு நாம் எந்த கப்பலில் வேலை பார்த்தோம். எந்த சேறு, சகதி எண்ணெய்க்குள் புரண்டு எழுந்து வந்தோம்.

வணிக பெருமுதலை கும்பல் சும்மா இருப்பார்களா, ஆயிலில் புரண்டெழுந்து வேலை செய்வோர் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த சோப்பை, எல்லோரும் பயன்படுத்தும் படி பல திட்டம் தீட்டி. கிருமி உருவாக்கி, அதன் மேல் பயம் உருவாக்கி நடிகர்களை நடிக்க விட்டு. நம் தலையில் கட்டிவிட்டார்கள்.

இதன் மூலம் என்ன ஆனது..

சோப்பு போட்டு நம் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படலத்தை நீக்கி விட்டேம், இப்பொழுது பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது. இதை திரும்ப சீர் செய்யவே உடல் பெரும்பாடுபடுகிறது.

நமக்கு வாய் முகத்தில் மட்டும் அல்ல தோலின் மேல் இருக்கும் ஒவ்வொறு வியர்வை துவாரங்களும் வாயே. சோப்பை போடுவதன் மூலம் வியர்வை துவாரம் வழியே இரசாயண நச்சு இரத்தத்தில் கலந்து கல்லீரலை பாதிக்கிறது.

சோப்பு போடுவதன் மூலம் தோல் மூலமாக நம் உடல் கிரகிக்கும் பிரபஞ்ச சக்தி தடுக்கப்படுகிறது. இன்னும் இதன் தீமைகள் பல உண்டு. சொல்லி மாளாது.

நாம் சோப்பு போடுவதற்கு எந்த சேறு, சகதி, எண்ணெய் இயந்திரங்களுக்குள் புரண்டு வருவதில்லை.

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?

குளியல் = குளிர்வித்தல்

குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.

காலை எழுந்ததும் இந்த வெப்பக்கழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிர்ந்த நீரில் குளிக்கிறோம்.

வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.

இப்படி காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.

குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா. உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இது எதற்கு...? உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.

எனவே உச்சியில் சிறிது நனைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.

வியக்கவைக்கிறதா... !  நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம்  அர்த்தங்கள் உண்டு.

குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான  பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும்.

பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.

புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.

குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது, குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.

குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்

குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.

குளித்தல் = குளிர்வித்தல்

குளியல் அழுக்கை நீக்க அல்ல

உடலை குளிர்விக்க.

இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.

நலம் நம் கையில்

வாழ்க வளமுடன்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

Wednesday, July 5, 2017

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!

இவ்வாறு வாய்வழி வந்த வார்த்தையை கேட்டு அதற்கு தவறுதலான அர்த்தம்கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்துவிடுகிறார்கள்.

ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு  பூ, காய், இலை, பிசின்,ஆகியவை கிடைக்கிறது. இவைகள் அனைத்தும் உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய மூலிகைப் பொருள்கள்.  இவைகளை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார் என்பதையே முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று சொல்லி வைத்தார்கள் ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா?.....     

வாழ்க வளமுடன்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...