Sunday, February 25, 2018

ஆய கலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா!II

ஆய கலைகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கற்க வேண்டிய கலைகளாக பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 துவாபர யுகத்தில் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணனாக அவதரிக்கிறார். கிருஷ்ணனும் மூத்த சகோதரராகிய பலராமனும் உரிய பருவத்தில் கல்வி கற்பதற்காக "ஸாந்தீபநி' என்ற குருவிடம் குருகுல வாசம் செய்யத் தொடங்கினர். பலராமனும், கிருஷ்ணனும் "கற்பூர புத்தி' உடையவர்களாய், ஒரே ஒருமுறை குருவால் உபதேசிக்கப்பட்ட அனைத்து வித்தைகளையும் நன்றாக உள்வாங்கிக்கொண்டு, அப்படியே திருப்பிச் சொல்லுவர். 64 நாள்களில் 64 கலைகளையும் ஐயந்திரிபறக் கற்றுக் கொண்டனராம். 


உதாரணமாக 

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை- தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பள் வாராதிங்கு இடர்
                                              (சரஸ்வதி அந்தாதி) கம்பர்

ஒவ்வொருவரும் தனக்கென பிடித்தமான ஏதேனும் ஓர் கலைகளை கற்று அறிதல் சிறப்பாகும்.

எண்
கலை
தமிழ் விளக்கம்
1.
அக்க்ஷரவிலக்கணம்
எழுத்திலக்கணம்
2.
இலிகிதம்
எழுத்தாற்றல்
3.
கணிதம்
கணிதவியல்
4.
வேதம்
மறை நூல்
5.
புராணம்
இதிகாசம்
6.
வியாகரணம்
இலக்கண நூல்
7.
சோதிட சாத்திரம்
வான நூல்
8.
தர்ம சாத்திரம்
தர்ம நூல்
9.
நீதி சாத்திரம்
நீதி நூல்
10.
யோக சாத்திரம்
யோக பயிற்சி நூல்
11.
மந்திர சாத்திரம்
மந்திர நூல்
12.
சகுன சாத்திரம்
நிமித்தக் கலை
13.
சிற்ப சாத்திரம்
சிற்பக் கலை
14.
வைத்திய சாத்திரம்
மருத்துவக் கலை
15.
உருவ சாத்திரம்
உடல் கூறு லக்கணம்
16.
இதிகாசம்
மறவனப்பு
17.
காவியம்
காப்பியம்-நாவல்
18.
அலங்காரம்
அணி இலக்கணம்
19.
மதுர பாடனம்
இனிது மொழிதல்
20.
நாடகம்
நாடகக் கலை
21.
நிருத்தம்
ஆடற் கலை
22.
சத்தப்பிரமம்
ஒலிநுட்ப அறிவு
23.
வீணை
யாழ் இயல்
24.
வேணுகானம்
குழலிசை
25.
மிருதங்கம்
மத்தள நூல்
26.
தாளம்
தாள இயல்
27.
அத்திரப்பரீட்சை
வில்லாற்றல்
28.
கனகப்பரீட்சை
பொன் நோட்டம்
29.
இரதப்பரீட்சை
தேர் பயிற்சி
30.
கசப்பரீட்சை
யானையேற்றம்
31.
அசுவப்பரீட்சை
குதிரையேற்றம்
32.
இரத்திரனப்பரீட்சை
மணி நோட்டம்
33.
பூமிப்பரீட்சை
மண்ணியல்
34.
சங்க கிராம இலக்கணம்
போர்ப் பயிற்சி
35.
மல்யுத்தம்
மற்போர் கலை
36.
ஆகரூடணம்
கவிர்ச்சியல்
37.
உச்சாடணம்
ஓட்டுகை
38.
விந்து வேடணம்
நட்பு பிரிக்கை
39.
மதன சாத்திரம்
மதனக் கலை
40.
மோகனம்
மயக்குக் கலை
41.
வசீகரணம்
வசியக் கலை
42.
இரசவாதம்
உலோகக் கலை
43.
காந்தருவ வாதம்
காந்தருவக் கலை
44.
பைபீல வாதம்
பிறவுயிர் மொழி
45.
கவுத்துக வாதம்
மகிழுறுத்தம்
46.
தாது வாதம்
நாடி நூல்
47.
காருடம்
மந்திரத்தால் விஷம்
அகற்றுதல்
48.
நட்டம்
இழப்பறிகை
49.
முட்டி
மறைத்ததையறிதல்
50.
ஆகாய பிரவேசம்
வான்புகுதல்
51.
ஆகாய கமனம்
வான் செல்கை
52.
பரகாயப் பிரவேசம்
கூடுவிட்டு கூடுபாய்தல்
53.
அதிரிசயம்
தன்னுறு மறைத்தல்
54.
இந்திர சாலம்
ஜால வித்தை
55.
மகேந்திர சாலம்
பெருமாயம்
56.
அக்கினித்தம்பம்
அழற் கட்டு
57.
சலத்தம்பம்
நீர்க் கட்டு
58.
வாயுத்தம்பம்
வளிக் கட்டு
59.
நிட்டித்தம்பம்
கண் கட்டு
60.
வாக்குத்தம்பம்
நாவுக் கட்டு
61.
சுக்கிலத்தம்பம்
விந்துக் கட்டு
62.
கன்னத்தம்பம்
புதையற் கட்டு
63.
கட்கத் தம்பம்
வாட் கட்டு
64.
அவத்தைப் பிரயோகம்
சூனியம்

 "சைவ தந்த்ரம்' எனும் நூல் விளக்குகிறது. சைவ பரமாகவோ அல்லது வைணவ பரமாகவோ எழுதப்பட்ட சில நூல்களில் 64 என்ற எண்ணிக்கையில் மாற்றம் எதுவும் இல்லை. ஆனால், கலைகளின் பெயர்களில் சிற்சில மாற்றங்கள் காணப்படுகின்றன.

1. இராகத்துடன் பாடுதல், 
2.இசைக் கருவிகளை இயக்குதல்,
3. நாட்டியம், 
4.நடிப்பது – அபிநயம் பிடித்தல், விகடம் செய்தல்,
5. படம் வரைதல் – வர்ணம் பூசுதல், 
6. தொய்யில் எழுதுதல் - உடலின் பல பாகங்களில் கலவை, வாசனைப்      பொடிகளால் எழுதுவது,
7.வழிபாட்டுக்காக பல வகைகளில் மாவு, பூக்களைக்கொண்டு அலங்காரம்           செய்வது,
8.மலர்ப்படுக்கை செய்வது, 
9.கற்களுக்கும், உடல் அங்கங்களுக்கும்,ஆடைகளுக்கும் வண்ணம் பூசுதல்,
10. உயர்ந்த கற்களைக் கொண்டு தரை அமைப்பது,
11. படுக்கை தயார் செய்வது,
12.பானையில் நீர் நிரப்பி இசைக் கருவியாக்கி, இசை எழுப்புவது(ஜலதரங்கம்),நீரில் நடக்கப் படி அமைப்பது,
13. மாயா ஜாலங்களை நிகழ்த்திக் காட்டுவது,
14. மாலை,தோரணங்கள் அமைப்பது,
15.மலர் அலங்காரம் செய்வது,
16. உடைகளாலும், ஆபரணங்களாலும் உடலை அழகுபடுத்துதல், 
17. தேர் போன்ற வாகனங்களின் பலவித அழகுமிக்க வர்ணங்கள் பூசுவது, 
18. பலவித வாசனைப் பொருள்கள் தயாரித்து உடைகள் தயார் செய்வது,
19.ஆபரணங்கள் செய்வது,
20.கண்கட்டு வித்தை, 
21.மாறுவேடம் அணிவிப்பது,
22. கை லாகவங்கள் காண்பிப்பது, 
23. சமையல் கலை,
24. மதுபானங்களைத் தயாரித்தல், 
25. பலவிதமான நெசவுக் கலைகள் மற்றும் தைக்கும் வேலைகள்,
26.நூல்களைக் கொண்டு கட்டி பொம்மை தயாரித்தல்,
27.இசைக் கருவிகளைத் தயாரித்தல்,
28. புதிர்களை விடுவித்தல்,
29. செய்யுள் இயற்றுதல், 
30.வேடிக்கையாகப் பேசுதல்,
31. கையெழுத்துப் பிரதிகளை எளிதாகவும் வேகமாகவும் படித்தல், 
32.நாடகம் மற்றும் கதை எழுதுதல், 
33.பூர்த்தியடையாத வரிகளை நிரப்பிப் பூர்த்தி செய்தல்,
34. பிரம்பு, நார், வில் வேலைகள் செய்தல், 
35. நூல் சுற்றும் கலை, 
36. தச்சு வேலை, 
37. சிற்ப சாஸ்திரம்,
38. விலை மிகுந்த உலோகங்களையும், இரத்தினக் கற்களையும் சோதிப்பது, 
39. இரசவாதக் கலை, 
40. இரத்தினக் கற்களில் நிறம் ஏற்றுவது,
41. பூமிக்குள்ளே மறைந்து கிடக்கும் பொருள்களை அறிதல், 
42. தோட்டக்கலை,
43. ஆட்டுச் சண்டை, சேவல் சண்டை, காடை சண்டை முதலிய விளையாட்டுகளை ஏற்படுத்துவது, 
44. கிளி, பறவைகளை – மனிதர்களைப் போலப் பேசப் பழக்குதல், 
45.எதிரிகளைத் துரத்த மாந்தீரிக வசீகரம் செய்தல், 
46.சிகை அலங்காரக் கலை, 
47.ஒருவருக்கும் கண்படாமல் கடிதங்களின் வரிகளைப் படித்தல், 
48. கைரேகையில்உள்ள குறிப்புகளைப் படிப்பது, 
49.காட்டுவாசிகளின் மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்களைப் படிக்கும் கலை, 
50. சகுனங்களைப் பற்றிய அறிவு, 
51. பூஜிக்க – தொழுவதற்குத் தகுந்த பலவிதமான எழுத்துகளை ஸýத்ரம் – பீஜம் மூலம் வடிவமைப்பது, 
52.வைரம் முதலான கற்களின் நீரோட்டத்தைச் சோதித்து அவற்றைத் தரம் பிரிப்பது,
53. பிறர் மனத்தில் ஓடும் எண்ணங்களைப் படித்து அவ்வெண்ணங்களை எழுத்து மூலம் வடிப்பது, 
54.அகராதியை உருவாக்குவது,
55. யாப்பிலக்கணத்தினை நன்கு கற்று பிறருக்குப் புரியும்படி எளிமையாக விளக்குவது, 
56. ஒரு பொருளைப் பலவிதமாக ஆக்குதல், 
57. தந்திரங்களைக் கையாள்வது, 
58. உயர்ந்த விதமாகத் தயாரிக்கப்பட்ட ஒருவரின் உடைகளை மேலும் மேம்பட ஆக்குவது,
59. சதுரங்கம், சொக்கட்டான் விளையாட்டுகளில் காய்களை நகர்த்துவது, 
60.வெகுதூரம் இருக்கும் பொருள்களை மந்திர வலிமையால் தன்பக்கம் இழுப்பது, 
61. குழந்தை விளையாட்டுகளை விளையாடுதல், 
62 வசீகரம் செய்யும் மாந்த்ரீகக் கலை, 
63.வாதத்திற்குச் சென்று, வெற்றி பெறுவதற்கு முன்பே ஏற்படும் அறிவு, 
64. பேய், பிசாசுகளை அடக்கி, அவற்றை விரட்டியடிக்கும் கலை ஆகியவை

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

6 comments:

  1. தங்களின் பயணம் தொடர வேண்டும்.

    ReplyDelete
  2. அண்டத்தில் உள்ளதே பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம்.

    ReplyDelete
  3. காலமே பொய்யடா இது காற்றடைத்த பையடா.

    ReplyDelete
  4. அனைத்து மூலக்கூறுகளும் அணுக்களும் உள்ளடக்கியதே வெற்றிடம் என்பது வெட்டவெளி.

    ReplyDelete
  5. ஆறு பத்து நாலுகலை யாவும்அறிந்தோம்.
    அதற்க்குமேல்லொருகலை ஆனதெரிந்தேன்
    மறுபற்றுச் சறுறும்ல்லா மனமுடையோம்
    மன்னனையே யாசான்னென்று யாடுப்பாம்பே.(பாம்பாட்டி சித்தர் பாடல்)

    ReplyDelete

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...