Tuesday, March 6, 2018

ஜென்ம நட்சத்திர தினத்தன்று பிறந்த நாள் கொண்டாடுவோம்

ஜென்ம நட்சத்திரம் என்பது நாம் எந்த நட்சத்திரத்தில் பிறந்து இருக்கிறோமோ அதுதான் ஜென்ம நட்சத்திரம்.

ஒருவர் பிறக்கும் போது, சந்திரன் எந்த இடத்தில் சஞ்சாரம் செய்கிறாரோ அது தான் அவரது ஜென்ம நட்சத்திரமாகும். ஒருவர் தன் வாழ் நாளில் எப்படி இருப்பார் என்பதை நிர்ணயம் செய்வதே ஜென்ம நட்சத்திரம் தான்.


நமது அருளாளர்களின் அவதார தினங்கள் எல்லாம் அவர்களின் ஜென்ம நக்ஷத்திர நாள் அன்று வருவதை கவனியுங்கள். ஒரு ஜீவராசி வாழ்வதற்கு எது முக்கிய தேவை என்றால் அது உயிர். அதுபோல, ஒருவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களின் பிறந்த நட்சத்திரம்.

இருளை விரட்டி வானத்திற்கு எப்படி நட்சத்திரம் அழகு சேர்க்கிறதோ, அதுபோல பிறந்த நட்சத்திரம் ஒருவரின் வாழ்வை நல்ல நிலைக்கு மாற்றும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

அதனால்தான் ஜென்ம நட்சத்திர தினத்தன்று ஒருவர் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். இங்கு கூடாதவை, ஆகாதவை என்று கூறுவது அவர்களின் அனுபவத்தை கொண்டு தான், அவற்றை தவிர்க்கலாம்,

குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வினை காரணமாக சிவபெருமானிடம் இருந்து பிரிந்து மாங்காட்டில் தவம் இருந்த பார்வதி தேவி, இறுதியில் தனது ஜென்ம நட்சத்திர தினத்தன்று மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்ட பிறகே கணவருடன் சேர்ந்து வாழும் நிலை உண்டானது. 

இதன் மூலம் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால்,  எந்த ஒரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும். ஜென்ம நட்சத்திர வழிபாட்டில் உள்ள ஆன்மீக ரகசியமே இது தான்

ஒவ்வொரு மாதமும் உங்களது ஜென்ம நட்சத்திரம் தினம் எந்த நாளில் வருகிறதோ அந்த நாளில் உங்கள் நட்சத்திரத்தின் பெயரில் கோயிலில் அர்ச்சனை செய்யலாம்.

இதனால் உங்கள் நட்சத்திரம் பலவீனமாக இருந்தாலும் பலம் பெறும். பொதுவாக ஜென்ம நட்சத்திரத்தில் மந்திரங்களை உச்சரிக்க உச்சரிக்க அந்த மந்திரத்திற்கு ஆற்றல் வலுவடையும்.

திருமணம் மற்றும் அனைத்து சுபசெயல்களும் நட்சத்திரத்தி்ன் அடிப்படையில் தான் பார்க்கிறோம். அத்தகைய மகிமை வாய்ந்த நமது ஜென்ம நட்சத்திரத்தை வணங்கி வளம் பெறுவோம்.

ஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவை

குலதெய்வ, இஸ்டதெய்வ வழிபாடு 
புத்தாடைஅணிதல்
பெற்றோர் மற்றும் மூத்தோரின் கால்களில் விழுந்து ஆசி பெறுதல்
வீட்டிலும் கோவில்களிலும் முடிந்த எண்ணிக்கையில் விளக்கேற்றலாம்
அன்னதானம், தானதர்மம் செய்தல்
பக்தி நூல்களை, ஸ்தோத்திரங்களை படிக்கலாம்.
உபநயனம் செய்துகொள்ளலாம்
புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளலாம்
பதவி ஏற்பு, சொத்துக்கள் வாங்குதல் ...

ஜென்ம நட்சத்திரத்தில் தவிர்க்க வேண்டியவை

எண்ணெய் குளியல்
திருமணம்
சீமந்தம்,
முடி இறக்குதல்
காது குத்து,
தாம்பத்தியம்,
அசைவ உணவு
மருந்து உண்ணுதல், 
அறுவை சிகிச்சை ...

குறிப்பு:

கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றுதல், அதை வாயால் ஊதி அணைத்தல் கூடவே கூடாது. எனெனில் அன்றைய நாளில் விளக்கேற்ற வேண்டுமே தவிர அணைக்கக் கூடாது.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...