Monday, March 26, 2018

தண்ணீர் வகைகளும் அதன் மருத்துவ குணங்களும்


மழை நீர்:
சீதளம் பொருந்திய மழை நீரால் இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் குளிர்ச்சி், நல்லறிவு,  சுக்கிலம், சோணிதம் ஆகிய நோய்கள் நீங்கும்.

ஆலங்கட்டி நீர்:
குளிர்ச்சியை உண்டாக்கும். சிலேஷ்மம், பிரமேகம், பெரும்பாடு, கண்ணின் புகைக் கம்மல், கை கால் எரிச்சல், விக்கல், சுவாசம், மயக்கம் முதலியவற்றைக் குணப்படுத்தும்.

பனி நீர்:
சூரிய உதயத்தின் போது பனி நீரைப் பருகினால் சொறி, கிரந்தி, குஷ்டம், தாபம், காசம், கிராணி, தனி வாதம், திரிதோஷம், தேக வறட்சி, நீரழிவு ஆகியவை அடியோடு நீங்கும்.

தண்ணீர்:
தண்ணீரின் குணமானது மண்ணின் குணமே அல்லாமல் வேறு இல்லை. ஆறு, குளம், ஏரி, மடு, கிணறு, சுனை என்னும் ஆறுவகை இடங்களில் தங்கி அவற்றின் குணங்களையே பெற்றுள்ள நீரைப் பருகினால், அந்தந்த நீருக்கு ஏற்ப இயல்பு என்று கூறுவர்.

ஆற்று நீர்:
வாதம், பித்த கோபம், கபதோஷம், தாகம், உடலில் பித்த சம்பந்தமான சில நோய்கள் இவற்றைப் போக்கும். சுக்கில விருத்தியை உண்டாக்கும்.

குளத்து நீர்:
வாத ரோகத்தை விருத்தி செய்வதோடு, மதுப்பிரமேகத்தையும், சீதளத்தையும் உண்டாக்கும்.

ஏரி நீர்:
துவர்ப்புச் சுவையுடைய ஏரி நீர் வாயுவை அதிகரிக்கச் செய்யும்.

சுனை நீர்:
கற்சுனை நீரானது வாத பித்த தோஷமாகும். அதை ஒருநாள் வைத்து விட்டு மறுநாள் பருகினால் குளிர்ச்சி நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். சுனை நீரை அருந்தியவருக்கும் அந்நீரில் குளித்தவர்க்கும் இருமலோடு கூடிய சீதசுரம், வாதகோபம், கபவாத ரோகம், பயித்திய தோஷம் ஆகியவை உண்டாகும்.

ஓடை நீர்:
துவர்ப்பும் மதுரமும் உடைய ஓடை நீ்ர் அருந்துபவர்களுக்கத் தாகம் உண்டாகும். தோல் வலிமை உண்டாகும்.

கிணற்று நீர்:
மிகுதியான தாகம், உஷ்ண தீபனம், தேக அழற்சி, சூலை, சரீரத்து உட்கடுப்பு, இடுப்பு வலி, மயக்கம், வீக்கம், பித்த தோஷம், சுவாஷம் ஆகியவை நீங்கும்.

ஊற்று நீர்:
மதுராமான ஊற்று நீரானது மிகுந்த பித்தத்தை உண்டாக்கி உடனே சாந்தி செய்யும்.

அருவி நீர்:
மலை அருவி நீரானது பிரமேகத்தையும் இரத்த பித்த ரோகத்தையும் நீக்கும். சிலேஷ்மத்தையும் தேக பலத்தையும் உண்டாக்கும்.

மூவகையான குளத்து நீர்:
1. தாமரைக் குளத்து நீர்.
2. அல்லிக்குளத்து நீர்.
3. அதிகக் குளிர்ச்சியுள்ள குளத்து நீர்.

தாமரைக் குளத்து நீர்:
வாத பித்த தொந்தம், புராதன சுரம், அதிக தாகம் ஆகியவை விலகும்.

அல்லிக்குளத்து நீர்:
அஜீரண பேதி, சொறி, புண், சுரம், கண்ட நோய், தாது நஷ்டம் இவைகளை உண்டாக்கும்.

அதிக குளிர்ச்சியுள்ள குளத்து நீர்:
தேகக் கட்டு விடல், விக்கல், வாத சிலேஷ்மம், தொந்தம், வண்டுக்கடி, வாந்தி, குளிர், காசம், வயிற்று வலி ஆகியவை உண்டாகும். அதில் சரீரம் ஊறுமானால் பலநோய்கள் உண்டாகும்.

கரும்பாறை நீர்:
வீக்கம், வாந்தி, பெரும்பாடு, பித்த சுரம் மயக்கம், நீர்க்கடுப்பு, தாகம் இவற்றை விலக்கும். வீரியம், புத்தி, அழகு ஆகியவற்றை உண்டாக்கும்.

அடவி நீர்:
காட்டாற்று நீரானது அதிக சீதளம், தேக பாரிப்பு, இளைப்பு சரீரம், வயிறு, நாவி ஆகிய இடங்களில் வெப்பம்,  தலைக்கனம், கடும் விஷச் சுரம் இவை உண்டாகும்.

வயல் நீர்:
நெல் கழனிகளில் இருக்கும் நீர் பிரமேகம், தாகம், தாகம், வெள்ளைச்சுரம், மூர்ச்சை,  ரத்த காசம், சுரவேகம் இவற்றை விலக்கும். சப்த தாதுக்களும் குளிர்ச்சியடைந்து  தேகம் வலுவாகும்.

பலவகை நீர்:
ஊற்றுள்ள ஓடை  நீர் எல்லா விதமான நோய்களையும் தீர்க்கும் கட்டுக் கடை நீரால் குடல் வாதம் உண்டாகும். பனி மாசுபடிந்த நீரானது பித்த கோபத்தை விலக்கும். சருகு ஊறிய நீரானது சுர ஆதிக்கத்தை உண்டாக்கும். ஜீவ நதி நீரால் அழகு உண்டாகும். நிழலை அடைந்த சுனை நீரால் பெரு வயிறு உண்டாகும். மழைநீர் தளர்ந்த தேகத்தை வலிமையுடையதாக்கும். இறைக்காத கிணற்று நீர் ஷயத்தை வளர்க்கும். வருவதும் போவதுமாக உள்ள குளத்து நீரால் நோய் தோன்றாது. மாறாத குளத்து நீர் நோயை உண்டாக்கும்.

பழைய காடி நீரால் பித்த மயக்கமும் சோபா ரோகமும் சிற்சில ரோகங்களும் அசீரணமும் வாதாதி சாரமும் அதிகமாகி ஔஷதங்களின் நற்குணங்களும் விலகும்.

உப்பு நீர்:
சரீரத்தில் குத்துகின்ற வாயுவும், அற்ப உணவும், பித்தம் அதிகரிப்பும், வாய் துவர்ப்பாக ஊறும் நீரும் அதிகரிக்கும். குடல்வாதம் நீங்கும்.

கடல் நீர்:
கவிகை என்னும் ஒருவித உதரரோகம். பெருவியாதி, சரீரக் குடைச்சல், ரத்த குன்மம், வாத குணம், உதிர வாதம், நீராமைக்கட்டி, பெருவயிறு, பிலிகம் பற்றிய நோய் ஆகியவை நீங்கும். கடல் நீரைக் காய்ச்சிப் பருகினால் வாத குன்மம், குடற்கரி ரோகம், மல சல பந்தம், மிகுந்த உழைப்பினால் வந்த நோய்கள், தேகக் கடுப்பு, சோணித வாதம், நடுக்கு வாதம், நாக்குப் பிடிப்பு, பல் இடுக்கில் ரத்தம் வருதல், பல் விழுதல், சந்நி தோஷம் ஆகியவை விலகும்.

நாவல் நீர்:
நாவல் வேர் ஊறிய நீரானது பித்தாதி சாரத்தையும், மது மேகத்தையம் நீக்கும். சுக்கில விருத்தி, அதிக குளிர்ச்சி, தேக பலம், சுரம், சிலேஷ்ம கோபம், அக்கினி மந்தம் இவற்றை உண்டாக்கும்.

கருங்காலி நீர்:
கருங்காலி வேர் ஊறிய நீரானது பித்த ஷயம், குஷ்டம், பித்த குன்மம், மகோதரம் பெரும் பூநாகக்கிருமி, ரத்த பசையற்ற திமிர்வாதம், நீரழிவு ஆகியவை நீங்கும்.

இலவு நீர்:
இலவமரத்தின் வேர் ஊறிய நீரால் அஷ்ட குன்மம், நீரழிவு, உட்சூடு, ரத்தம் மற்றும் ரணக்கிருமி ஆகியவை விலகும்.

வாழை நீர்:
வாழைக் கிழங்கில் ஊறுகின்ற சீதோஷ்ண நீரானது பெருவயிறு, ரத்த கிரீச்சுரம், சிறுநீர் எரிச்சல், அற்பவிரணம், சோமரோகம், அயர்வு கழலை நோய்பாண்டு, எலும்பு உருக்கிமுதலியவற்றை விலக்குவதோடு தேகத்துக்கு வலிமையை உண்டாக்கும்.

மட்டை நீர்:
தெங்கு, பனை முதலிய மட்டைகளில் வழிந்த நீரினால் , நீரழிவு, பவுத்திர ரோக விரணம், வயிற்றுக் கடுப்பு ஆகியவை நீங்கும்.

இளநீர்:
இளநீரை முறையாகப் பருகினால் வாத கோபம், பித்த தோஷம், வெப்பம், தேகபாரிப்பு, சுபாதிக்கம், மன அழுத்தக் கோபம், வமனம், அதிசாரம் ஆகியவை நீங்கும். மனத்தெளிவு, நேத்திரத் துலக்கம், குளிர்ச்சி, மூத்திரப் பெருக்கம், மலப்போக்கு ஆகியவை உண்டாகும். இது உஷ்ண சீதளத்தை உடையது.

இளநீரின் வகைகள்:
1. செவ்விள நீர்.
2. பழைய இளநீர்.
3. உணவுக்கு முன் அருந்தும் இளநீர்.
4. உணவுக்கு பின் அருந்தும் இளநீர்.
5. மூன்று வித இளநீர்.
6. புதிய பழைய இளநீர்.
7. கேளி இளநீர்.
8. பச்சை இளநீர்.
9. மஞ்சள் கச்சி இளநீர்.
10. அடுக்கு இளநீர்.
11. கரு இளநீர்.
12. சோரி இளநீர்.
13. ஆயிரங்கச்சி இளநீர்.
14. குண்டறக் கச்சி இளநீர்.

செவ்விள நீர்:
தினமும் செவ்விள நீரைப் பருகினால் பித்த விருத்தி, தாகம், வழி நடையால் ஏற்பட்ட இளைப்பு, அயர்வு பற்பல ஷயம் ஆகியவை நீங்கும்.

பழைய இளநீர்:
அருசி, விதாகம், நாள்பட்ட பழைய மலம் ஆகியவை நீங்கும். ஜடராக்கினி அதாவது வயிறு எரிதல் உண்டாகும்.

உணவுக்கு முன் அருந்தும் இளநீர்:
காலை ஆகாரத்துக்கு முன் இளநீர் பருகினால் பசி நீங்கும். குன்மம் உண்டாகும். மாலையில் அருந்தினால் பெரிய கிருமிகள் ஒழியும்.

உணவுக்கு பின் அருந்தும் இளநீர்:
உணவு உண்டபின் இளநீரைப் பருகினால் வாத பித்த கோபம் தனியும். தனிப்பித்த தோஷம் விலகும். தாராளமாக மலம் கழியும். அதி தீபனமும் உண்டாகும். நோய் அணுகாது. தேகம் மினுமினுக்கும்.

மூன்று வித இளநீர்:
மட்டை சீவி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி ‌ஆற்றிய இளநீரானது இருமல், சலதோஷம், வறட்சி, சுரம் இவற்றைப் போக்கும். செவ்விள நீரானது பித்த தோஷத்தை நீக்கும். கெவுளி பாத்திரை என்னும் இளநீரை அருந்தினால் உஷ்ணம் நீங்கும்.

புதிய பழைய இளநீர்:
இள வழுக்கையுடைய புதிதாகப் பறிக்கப்பட்ட இளநீரைப் பருகினால் பித்த கோபம் விலகும். பழைய இளநீரைப் பருகினால் ஜலதோஷம் முதலான ரோகங்கள் உண்டாக வாய்ப்பு உண்டு.

கேளி இளநீர்:
இதைப் பருகுபவர்க்கு ரத்த மேகம், மலக்கிருமி, விதாகம், மந்தாக்கினி, கரப்பான், அதிசுரம் ஆகியவை நீங்கும்.

பச்சை இளநீர்:
இதை அருந்தினால் சீழ்ப்பிரமேகம், பழைய சுரம், கபாதிக்கம், எரிகிருமி, யானைச் சொறி, கண்நோய் இவற்றைப் போக்கும்.

மஞ்சள் கச்சி இளநீர்:
பித்ததோஷம், சோபை, சிலேஷ்ம ஆதிக்கம், பழைய சுரம் ஆகியவை விலகும்.

அடுக்கு இளநீர்:
நித்திரைக்கு முன் அடுக்கு இளநீரை அருந்தினால் கபதோஷமும், மலப்பை பற்றிய கிருமியும் போகும். நன்மையும் உண்டாகும்.

கரு இளநீர்:
கருமை இளநீரால் கப ஆதிக்கமும், புழு நெளிகின்ற கரப்பானும் நீங்கும். ஜேகம் மகிழ்ச்சியும் உண்டாகும்.

சோரி இளநீர்:
இதைப் பருகினால் வீக்கமும், வயிற்றிலுள்ள பூச்சியும், சன்ன கிருமியும் போகும். தேகம் அழகாகும். தெளிவான பேச்சு உண்டாகும்.

ஆயிரங்கச்சி இளநீர்:
வெப்பமும், பசியும் ஆமவாதமும் நீங்குவதோடு கபம், தொந்தம், நமைச்சல், பிரணஞ் சூழ் குன்மம் ஆகியவை தீரும்.

குண்டற கச்சி இளநீர்:
இதனால் அருசி, விதாகம், நாள்பட்ட பழைய மலம் ஆகியவை நீங்கும். ஜடராக்கினி உண்டாகும்.

வெந்நீர்:
அளவோடு குடிக்கும் வெந்நீரினால் நெஞ்சு எரிவு, நெற்றி வலி, நீங்காத புளியேப்பம், குன்மம் சீதக்கட்டுச்சுரம், காசம் இவை நீங்கும்.

வெந்நீரின் வகைகள்:
காய்ச்சி ஆறிய வெந்நீர்.
கால்பாகம் அரைபாகம் காய்ந்த வெந்நீர்.
முக்கால் பாகம் காய்ந்த வெந்நீர்.
உணவுக்கு முன், பின், மத்தியில் அருந்தும் வெந்நீர்.
பொற்கெண்டி வெந்நீர்.
வெள்ளிக்கெண்டி வெந்நீர்.
உலோகங்களில் பயன்படுத்தும் வெந்நீர்.
பஞ்சலோக் கிண்ணத்தின் வெந்நீர்.
இரும்புக் கெண்டி வெந்நீர்.

காய்ச்சி ஆறிய வெந்நீர்:
காய்ச்சி ஆறிய வெந்நீரைக் குடித்தால் உ‌ழலைநோய், வீக்கம்
பேதியால் இளைத்த பித்த கோபம், மூர்ச்சை, சில் விஷங்கள், வாந்தி, மயக்கம், சுக்கில மேகம், திரிதோஷம், கண்வலி, செவிக்குத்தல்,  சூலை, குன்மம், சுரவேகம், கோழை வாதாதிக்கம் இவை தீரும்.

கால்பாகம் அரைபாகம் காய்ந்த வெந்நீர்:
வைத்த அளவில் கால்பாகம் சுண்டிய வெந்நீரால் பித்த கோபம் நீங்கும். அரைபாகம் சுண்டிய வெந்நீரால் வாத பித்த தோஷம் நீங்கும். அதை மறுநாள் வைத்து அருந்தினால் திரிதோஷம் கோபம் விலகும்.

உணவுக்கு முன், பின், மத்தியில் அருந்தும் வெந்நீர்:
உணவுக்கு முன் வெந்நீரைக் அருந்தினால் பசி குறையும். அதன் பிறகு குடித்தால் நன்மை உண்டாகும். சாப்பிடும் போது நடுவில் அருந்தினால் பசியும் மத்தியாகும். மேலும் இவை வாத சுரத்தை நீக்க வல்லது.

முக்கால் பாகம் காய்ந்த வெந்நீர்:
முக்கால் பாகம் சுண்டிய வெந்நீரால் வாத விருத்தி, குளிர் நடுக்கல், கொடுஞ்சுரம், பலவிதமான பேதி, திரிதோஷங்கள் நீங்கும்.

பொற்கெண்டி(பொற் பாத்திரம்)வெந்நீர்:
வெந்நீரைப் பொற் கெண்டியில் ஆற வைத்து அருந்தினால் வாதவிருத்தி, கபகோபம், அரோசகம், சரீர உஷ்ணம், சுரம் இவை நீங்கும். சுக்கிலமும், நல்லறிவும் ஸ்பரிச ஞானமும் உண்டாகும்.

வெள்ளிக்கெண்டி(வெள்ளிப்பாத்திரம்) வெந்நீர்:
எட்டில் ஒரு பாகம் காய்ச்சிய வெந்நீரை சரிகை வெள்ளிக்கெண்டியில் ஊற்றிச் சாப்பிட்டால் உஷ்ணம், தாகம், குன்மம், பித்தம் இவை விலகும். தேகத்துக்கு வலிமையும், புஷ்டியும் உண்டாகும்.

உலோகங்களில் பயன்படுத்தும் வெந்நீர்:
தாமிரக் கிண்ணத்தின் வெந்நீர் கண் புகைச்ச‌லையும், ரத்த பித்த நோயையும் நீக்கும். வெள்ளிக்கிண்ணத்து வெந்நீர் கப நோயை அகற்றும்.

பஞ்சலோக் கிண்ணத்தின் வெந்நீர்:
மூன்று விதமான தோஷங்களை நீக்க வல்லது. வெண்கலப் பாத்திர வெந்நீர் உதிரத்தைப் பெருக்கும். கெண்டில் காய்ந்த வெந்நீரை ஆற்றிக் குடித்தால் சுரம், சிரங்கு, அசதி, கை கால் இடுப்புக் குடைச்சல் நீங்கும்.

இரும்புக் கெண்டி வெந்நீர்:
பாண்டு ரோகம் நீங்கும். தாது, விருத்தி, நரம்புகளுக்கு உறுதி, உடலில் சீதோஷ்ணம் உண்டாகும்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...