Wednesday, November 28, 2018

தொன்மை தமிழரின் வார்த்தை விளையாட்டு!!!



"வந்ததனால் வரவில்லை வராவிட்டால் வந்திருப்பேன்!"
"செத்ததனால் சாகவில்லை சாகாட்டி செத்திருப்பேன்!"
இது என்ன உளறல் என்கிறீர்களா?

இல்லை இது அக்கால தமிழ்க் காதலியின் நுட்பமான வார்த்தை.

விளக்கம் :

அக்கால தமிழரிடம் ஜாதியில்லை, கர்வக் கொலையில்லை, வயதுவந்த ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்து காதல் வளர்த்து பின் இல்வாழ்வு ஏற்பர்.

அப்படி காதல் கொண்டு பழகிய காதலியைப் பார்த்து காதலன் முழுநிலவில்  வருவதாய்ச் சொன்னாயே ஏன் வரவில்லை யென்கிறான், அதற்கு அவள், "வந்ததனால் வரவில்லை வராவிட்டால் வந்திருப்பேன்!" என்கிறாள். உங்களைப் போலவே அவனும் புரியாமல் அவளையே பார்க்கிறான்.

அவள் கண்ணை மூடிக் கொண்டு "மாதவிலக்கு" என்கிறாள்.

இப்போது புரிகிறதா?

மாதவிலக்கு வந்ததனால் அவள் இவனைச் சந்திக்க வரவில்லை, அது வராமலிருந்தால் வந்திருப்பாள்! என்பதே அதற்குப் பொருள்.

ஓ! "செத்ததனால்...." என்று அதற்கு விளக்கம் கேட்டான். இன்று உங்களைப் பார்க்க வந்தபோது வழியில் ஒரு பாம்பு. அது செத்த பாம்பு. அது செத்ததால் நான் சாகவில்லை இல்லையென்றால் நான் அது கடித்து செத்திருப்பேன்! என்றாள்.

என்னங்க... தமிழர் அறிவுக்கு இணை இவ்வுலகில் எங்காவது உண்டா?

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை


Collected from Social Media..

பித்தகரஸ் தேற்றம் முதலில் சொன்னவர்கள் தமிழர்கள்!

பித்தகரசுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் முக்கோணவியலின் தத்துவத்தைப் பாடலாக எழுதி வைத்தனர். அப்பாடல் இதோ:

”ஓடிய நீளந்தன்னை ஓரெட்டு கூறாக்கி
 கூறதில் ஒன்றைத் தள்ளி
 குன்றத்தில் பாதி சேர்த்தால்
 நீடிய கர்ணந் தானே!”
                                      - கோதையனார்

இதன் பொருள்: முக்கோணத்தின் கர்ணம் கண்டுபிடிக்க, நீளத்தை எட்டால் வகுத்து, கிடைப்பதை நீளத்தில் கழித்து, செங்குத்து உயரத்தில் பாதியை இத்தோடு சேர்த்தால் கர்ணம் கிடைக்கும். 

எடுத்துக்காட்டு:
விடை:

நீளம் 4. அதில் எட்டில் ஒரு பாகம் 0.5. அதை நீளத்தில் கழித்தால் 3.5. இத்தோடு உயரத்தில் பாதி (1.5) சேர்க்க 3.5 + 1.5 = 5. ஆக BC (கர்ணம்) = 5.

பிதாகரஸ் தேற்றப்படி கர்ணம் காண சூத்திரம்

AB^2 + AC^2  = BC^2

4^2 + 3^2 = 16 + 9 = 25 = 5^2

BC = 5

தமிழர் பெருமைக்கு ஆதாரம் கேட்பவர்கள் ஆதாரத்திற்கு இதை புரிந்து கொள்ளட்டும்.  தமிழர் பெருமை இன்னும் வரும்....

குறிப்பு:

பித்தகரஸ் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் தமிழர்களின் அறிவைப் பெற்றே அத்தேற்றத்தை கூறினார் என்று அப்போலாலியசு என்பவர் குறிப்பிடுகிறார்.

(ஆதாரம்: கடலடியில் தமிழர் நாகரிகம் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு. பக்கம் 40)

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

Tuesday, November 6, 2018

வற்றாத நீருற்று உள்ள கிணறு தோண்டிய முன்னோர்களின் ரகசியம்!!!

‘தொள்ளாயிரம் அடி போர் போட்டோம்…. ஆயிரம் அடி போர் போட்டோம்… ஆனா, தண்ணி கிடைக்கலை’ங்கறதுதான் எங்க பார்த்தாலும் பேச்சா இருக்கு. 

ஆனா, அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . .


‘கிணறு வெட்டினோம். தண்ணி இல்லை’னு சொல்றதைக் கேட்கறது அரிதா இருக்கும். காரணம், போர் போடற மாதிரி, கிணறு வெட்டுற சமாச்சாரம் அத்தனை ஈஸியா இருக்காது. 

கிணறு வெட்டுற வேலை ஒரு கூட்டுமுயற்சி. மாசக்கணக்குல வேலை செய்யணும். பத்து பேருக்கு மேல வேலை செய்யணும். சின்ன தவறு நடந்தாலும், ஒட்டுமொத்த வேலையும், வீணாகிடும். அதனால, கிணறு வெட்டுறதுக்கு முன்ன பல முன்னேற்பாடுங்க நடக்கும்.

நம்ம முன்னோருங்க அதுக்கு பல சூத்திரங்களைச் சொல்லி வெச்சிருக்காங்க. அந்த சூத்திரப்படி கவனிச்சி கிணறு தோண்டினா… நிச்சயம் நல்ல கிணறு அமையும்னு சொல்றாங்க. இந்த வறட்சியான நேரத்துல, இப்படி ஒரு விஷயத்தை எல்லாரும் தெரிஞ்சி வெச்சிக்கிறது நல்லதுதானே!


கிணறு தோண்டறதுக்காக நீங்க தேர்வு செய்திருக்கிற இடத்துல பல வகையான பசுமையான புல்லுங்க முளைச்சிருந்தா… அந்த இடத்தை விட்டுப்புடாதீங்க. அதுதான் சரியான இடம். ஏன்னா, இப்படி பசுமையான புல் உள்ள இடத்துல குறைந்த ஆழத்துல தண்ணி கிடைக்குமாம். 


சரி, தண்ணி கிடைச்சிருது. நல்ல சுவையான தண்ணியா இருந்தாத்தானே, பயிரும் நல்லா வளரும். ஆடு, மாடுங்களுக்கும், மனுஷன்களுக்கும் தாகத்தைத் தணிக்கும்.

ஆக, ‘சுவையான தண்ணி அந்த இடத்துல கிடைக்குமா?’னு பார்க்க அடுத்த கட்டமா ஒரு வேலை செய்யுங்க. அரை கிலோ நவதானியத்தை ரவை மாதிரி உடைச்சி, கிணறு தோண்டப்போற இடத்துல முதல் நாள் சாயங்காலம் தூவி விடுங்க. மறுநாள் காலையில பார்த்தா, அந்த இடத்துல எறும்புங்க மொய்ச்சிட்டு இருக்கும். அங்க சுவையான தண்ணி இருந்தா, எல்லா எறும்புகளும் அங்கயே புத்து உருவாக்கி, உள்ள போய் தானியத்தை சேகரிக்கும். 


அந்த இடத்துல கிணறு தோண்டிட வேண்டியதுதான். அங்க நல்ல தண்ணி இல்லைனா… நவதானிய ரவையை எடுத்துக்கிட்டு, தண்ணி இருக்கற இடம் நோக்கி, எறும்புங்க பயணம் செய்யும். அந்த இடத்தைக் கண்டுபிடிச்சி, அங்க கிணறு வெட்டலாம். இதெல்லாம் நம்ம முன்னோருங்க கடைப்பிடிச்ச தொழில்நுட்பங்கள்தான்.

சரி, நல்லத் தண்ணி கிடைச்சிடுச்சி, கோடை காலத்துலகூட வற்றாத தண்ணி அங்க கிடைக்குமா?


கிணறு தோண்ட முடிவு செஞ்ச இடத்துல பால் மாட்டை மேய விடுங்க. மாடு வெளியே வராதபடி, சுத்திலும் அடைச்சிடுங்க. கொஞ்ச நேரம் புல்லை மேஞ்சிட்டு, ஒரு இடத்துல படுத்து ஓய்வு எடுக்கும். எந்த இடத்துல, குளிர் நீரோட்டம் இருக்கோ, அங்கதான் மாடுங்க படுக்கும். மனுஷனைவிட மாடுங்களுக்கு இயற்கையைப் புரிஞ்சி நடக்குற பழக்கம் உண்டு. 


இப்படி ஐந்து நாளைக்கு தினமும், ஒரே இடத்துல பால் மாடு படுத்து, அசை போட்டுச்சினா… அந்த இடத்தைக் குறிச்சி வெச்சிடுங்க. அங்க கோடையிலும்கூட குறைவில்லாம தண்ணி கிடைக்குமாம்!
 

இந்த விஷயங்களை எல்லாம் கவனிச்சி செய்தா, நிச்சயம் வற்றாத நீருற்று உள்ள கிணறு அமைக்க முடியும்.

ஆடு, மாடுங்ககிட்ட இருந்து மனுஷங்க படிக்க வேண்டிய பாடம்… எவ்வளவோ இருக்கு. பெரிய பெரிய ஞானிங்கள்லாம்கூட இப்படி பாடம்படிச்சிதான் உருவாகியிருக்காங்க. 


ஒரு தடவை, இமயமலை அடிவாரத்துல இருக்கிற, ஆசிரமத்துக்குப் போயிருந்தேன். சகல வசதியோட இருந்த அந்த ஆசிரமத்துல, சுவையான உணவுகள இலையில பரிமாறியிருந்தாங்க. சாதாரண சாப்பாடு இல்ல… அறுசுவை விருந்து...

அந்த ஆசிரம வழக்கப்படி, தலைமைச் சாமியார் வந்து சாப்பிட்ட பிறகுதான், எல்லாரும் சாப்பிடணும்னு சொன்னாங்க. கொஞ்ச நேரத்துல வந்து சேர்ந்த சாமியார், ‘இப்போது எல்லோரும், மனிதர்களைப் போல சாப்பிட போகிறீர்களா… அல்லது ஆடு, மாடுகளைப் போல சாப்பிட போகிறீர்களா?’னு கேட்டாரு.

பந்தியில இருந்த ஒருத்தர் எழுந்து, ‘மனுஷங்க மாதிரிதானே சாப்பிடுவோம் சாமீ… இதுல கேக்கறதுக்கு என்ன இருக்கு?’னு சொன்னாரு.


‘விஷயம் இருக்கிறது’னு சொன்ன சாமியார், ‘ஆடு, மாடு… போன்ற விலங்குகள் எப்போதும் அளவுக்கு மீறி உண்பதில்லை. சுவையான மக்காச்சோளம் இருக்கிறது, அருமையான பசுந்தீவனம் இருக்கிறது என்று அவை ஒரு போதும், கூடுதலாக ஒருவாய்கூட சாப்பிடுவதில்லை. 


அதனால்தான், அவற்றுக்கு சர்க்கரை, ரத்தக்கொதிப்பு….. என்று எந்த நோய் நொடியும் வருவதில்லை. ஆகையால், நாம் எல்லோரும் ஆடு, மாடுகளைப் போல சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்போம்’னு அருமையான வாழ்க்கைப் பாடத்தைச் சுட்டிக்காட்டினாரு.
சரியான சங்கதிதானே!
 

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை 

Collected from Social Media..

Thursday, November 1, 2018

பரம்பரை மரபை கடத்தும் தொப்புள்கொடி!!

உலகத்தில் புத்திகூர்மையுடையவர்கள் என்று கூறப்படும் யூதர்கள் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுடைய தொப்புள் கொடியை வெட்ட மாட்டார்கள்...

 
அதாவது, தொப்புள் கொடியை வெட்டாமல் அதுவாக காய்ந்து விழும் வரை காத்திருப்பது,
 

அது குழந்தை பிறந்த 7 நாளில் நடக்கும். அதிகபடியாக 16 நாள் ஆகும். ஆனால், அரசு, தனியார் மருத்துவமனைகளில், சுகபிரசவம், சிசேரியன் இரண்டிலுமே, பிறந்த உடனேயே, வெட்டி எறிந்து விடுகிறார்கள்.

இது தேவையில்லை, தொப்புள் கொடியை வெட்ட கூடாது என்பது வீட்டில் நடக்க மட்டுமே சாத்தியம்.


இவ்வாறு விழும் வரை காத்திருப்பதில், குழந்தை மிகுந்த ஆரோக்யம் அடைகிறது. மூளை சிறப்பான முறையில் செயல்பட்டு, பரம்பரை மரபை பெறுகிறது.


போதி தருமரை தனியாக உருவாக்க வேண்டாம், DNA மாற்ற வேண்டாம், தொப்புள் கொடியின் ஊடக ஆதி தமிழன் உடைய வீரம்,அறிவு நம் பிள்ளைகளுக்கு கடத்தப்படும் அதுவே முழுமையான வடிவம் D.N.A தலைமுறைக்கு தானாக கடத்தப்படும்.


தற்போது உள்ள தமிழ்சமூகம் இது போல இல்லையே பரம்பரை மரபுகள் ஏன் தற்போது கடத்தபடுவதில்லை அப்போதிருந்த அந்த வீரம் அறிவு எல்லாம் ஏன் கடத்தபடாமல் போகிறது என்பதை சரியான விதத்தில் கண்டறிந்தால் வருங்காலத்தில் பரம்பரை மரபுகள் கடத்தபடும் தமிழ் சமூகம் உருவானால் தமிழன் உலகாள்வான். 

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை 

Collected from Social Media..

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...