Thursday, December 27, 2018

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்!!!

படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை மருத்துவ திறவுகோல் என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.



கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்

பனைஓலை பாய் பலசரக்கு வெல்ல மண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.

மூங்கில்நார் பாய் வீடு,அலுவலகங்களில் தடுப்புசுவர்,மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.

நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்...

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

Saturday, December 22, 2018

ஐந்து வகையான அணிகலன்கள், ஐம்பெருங்காப்பியங்கள்!!!

சிலப்பதிகாரம்:
சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி - கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு (முதலாம் நூற்றாண்டு)


மணிமேகலை:
ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி - இக்காவியம் அன்மொழித்தொகையாக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும்.
இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு. (ஐந்தாம் நூற்றாண்டு)




குண்டலகேசி:
குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். - குண்டலமும் கூந்தல்அழகும் கொண்டவள் குண்டலகேசி - குண்டலகேசி என்பவளின் வரலாறு கூறும் நூல். (ஐந்தாம் நூற்றாண்டு)



வளையாபதி:  
வளையல் அணிந்த பெண் வளையாபதி - வளையாபதியின் வரலாறு கூறும் நூல். (ஒன்பதாம் நூற்றாண்டு)




சீவகசிந்தாமணி:  
சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும்
மணிக்கல். - சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு. (பத்தாம் நூற்றாண்டு)




வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

Wednesday, December 12, 2018

அறுசுவையும் ஆரோக்கியமும்!!!

அறுசுவை எனப்படுவது நாக்கு அறியக்கூடிய ஆறு வகை சுவைகளாகும்.


அறுசுவை உணவுகளை சாப்பிடும்போது நல்ல ருசியை கொடுப்பது போன்று உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகின்றன.

தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அறுசுவையும் சம அளவில் தேவை. அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடும் போது தான் உடலில் பிரச்னைகள் ஏற்படுகிறது என்கிறது நம் பாரம்பரிய மருத்துவம். 

ஆயுர்வேதம் உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது.

உடலானது இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். 

இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். 

இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.



இனிப்பு - தசையை வளர்க்கின்றது
பழவகைகள், உருளைக் கிழங்கு, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது. பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.

நம் சித்த மருத்துவங்களும், ஆயுர்வேத‌ மருத்துவங்களும், அக்கால உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொன்னார்கள்.

அறுசுவைக்கும் நம் உணவில் இடம் கொடுத்து அதன்மூலம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழி வகுத்துக்கொள்வோம்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை


Collected from Social Media..

Saturday, December 8, 2018

அட்டமா சித்துக்கள்

அணிமா:
பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது.


பிருங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.




மஹிமா:
சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.


வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருஷ்ண பரமாத்மா அர்ஜூனனுக்கு விஸ்வ ரூப தரிசனம்  காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.
 

லஹிமா:
கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது.


திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.
 

கரிமா:
இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது.


அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.
 

பிராத்தி:
எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.


திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.
 

பிரகாமியம்:
வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல்.


அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.
 

ஈசத்துவம்:
ஐந்து தொழில்களை நடத்துதல்.


திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.
 

வசித்துவம்:
ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல்.


திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.


வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை


Collected from Social Media..

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...