Monday, January 21, 2019

வீரக்கலைகளின் தந்தை போதிதர்மா...!

இன்று உலகெங்கும் கராத்தே, குங்பூ, ஜூடோ, நின்ஜாக், போன்றவைகள் தற்பாதுகாப்புக் கலைகளாக பயிற்றுவிக்கப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல், உலகெங்கும் புத்தமதம் ஒரு உன்னதமான மதமாக போதிக்கப்பட்டு வருகிறது. 

இவை இரண்டிற்குமே மூலகாரணமாக இருந்த மாவீரன் போதிதருமர் ஒரு தமிழனே என்பதை வரலாறு தெளிவாக சொல்கிறது.


சீனாவில் ஷவோலின் கோவிலுக்கு போகும் பாதையில் வைக்கப்பட்டுள்ள போதிதர்மரின் சிலை.

ஆம்.வீரத்தையும், விவேகத்தையும் உலகிற்கே கற்றுக்கொடுத்த உலகின் மிகப்பெரிய தமிழ் ஆசான்: போதி தருமர்.

போதிப்பதையே தமது வாழ்வின் தர்மமாக கருதிய இவர் தமது பெயரை  போதிதருமன் என்று மாற்றிக்கொண்டது பொருத்தமானதே!

ஆம்.வீரத்தையும், விவேகத்தையும் உலகிற்கே கற்றுக்கொடுத்த உலகின் மிகப்பெரிய தமிழ் ஆசான்: போதி தருமர்.

இவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்ட பல்லவ சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட கந்தவர்மன் என்ற மன்னருக்கு மூன்றாம் மகனாகப் பிறந்தவர். 

இவர் அரசனாக பட்டம்சூடிய பிறகே, பல்லவ அரசராக சிலகாலம் இருந்து, பிறகு புத்த மதத்தைத் தழுவியவதால்  புத்தமதத்தை தழுவி தனியேறாகத் தன் நாட்டை விட்டு சென்றவர்.  

புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.

சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். சீனா என்பது ஆதியிலிருந்தே ஒரே மொழியையும் ஒரே இனத்தையும் உடைய நாடு. எனவே, சீன வரலாற்று சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ள இந்த வரலாற்றை நாம் உறுதியாக நம்பலாம்.

இவர் கற்பித்த கலைகளின் நூல்களை ஆய்வுசெய்து பார்த்தால், நமது சித்தர்கள் கற்பித்த போர்க்கலைகளின் முன்வடிவு பயன்படுத்தப்பட்டிருப்பதை காணமுடியும். 

மன்னர் வம்சத்தில் பிறந்தவர்களுக்கு அவைகள் காலம் காலமாக பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. (இதுவே, அகத்தியர் முதலான வர்மக்கலையை தோற்றுவித்த சித்தர்கள் அதற்கும் முற்பட்ட காலத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கும் ஆதாரமாகும்.) 

போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையைஅறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

கோவில் முற்றங்களில் கூட வளர்க்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா துளசி செடி!?

பெரும்பாலான வீடுகளிலும், கோவில்களிலும் முற்றத்தில் துளசி செடி மாடத்தை பார்த்திருக்கலாம்.



தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும்.

இதில் துளசிச் செடி மற்ற தாவரங்களை விடவும் மிக அதிகமான, ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலத்தையே சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

இதனாலேயே பல வீடுகளில், துளசிச் செடியை வளர்த்து வருகின்றனர். அதிகாலை வேளையில் அதைச் சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர். 

அதிகாலை மூன்று மணி முதல், ஐந்து மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். இந்த வேளையில் தான், இயற்கையின் அத்தனை அம்சங்களும் மிகவும் புதிதாகச் சுத்திகரிக்கப்பட்டதைப் போல் இருக்கும்.

அதாவது இந்த நேரத்தை தான் ஓசோன் அதிகமிருக்கும் நேரம் என்கின்றனர் அறிஞர்கள். இயற்கையாகவே, காற்றில் ஆக்ஸிஜன் அதிகமாக இருக்கும் நேரமான அதிகாலை வேளையில், துளசிச் செடியைச் சுற்றி வந்தால் பரிசுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிக்கலாம் என்பது இதன் சாராம்சம்.

எல்லா ஜீவராசிகளும் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசித்து, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், துளசி மாடத்தை சுற்றி வரும், பழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

மருத்துவத்திலும் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இல்லாத ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவமே கிடையாது. குழந்தைகளின் சளி, இருமல் பிரச்னைகளுக்கு, துளசி போல் சிறந்த மருந்து கிடையாது. துளசி இலைகளை நசுக்கி பிழிந்து, இஞ்சிச்சாறு, தேனுடன் கலந்து கொடுத்தால், நெஞ்சு கபம் காணாமல் போய் விடும். 

இப்படிப்பட்ட அற்புதச் செடியை கண்டறிந்து, அதன் பலனை அனைத்து மக்களும், ஆழமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, ஒரு வழிபாட்டு சம்பிரதாயமாகவே பின்பற்றப்படுகிறது.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

Thursday, January 10, 2019

தமிழரின் வானியல் சிந்தனை!

சங்க காலத் தமிழர் விண்ணின் கோள்களையும் காற்று மண்டலத்தையும் அவற்றின் இயக்கங்களையும், கால அளவுகளையும் அளவிட்டறியும் வானியல் அறிவியலை அறிந்து வைத்திருந்தனர் என்பதற்கு நம் தமிழ் இலக்கியங்களே சான்றாகும். விண்ணைக் கடந்து, அண்டங்கள் நுழைந்து, அறிவாராய்ச்சி வரலாற்றை (Epistemology) ஆவணப்படுத்தி வைத்தனர்.


உலகம் உருண்டை என்பதை மேற்குலகம் கண்டறிந்து கூறியதே 16-ஆம் நூற்றாண்டில்தான். ஆனால், இதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர், தங்கள் முன்னோர் வழியாக "உலகம் உருண்டை' என்னும் உண்மையைப் பரவலாகத் தெரிந்து வைத்திருந்தனர் என்பதற்குத் திருவாசகமே (திருவண்டப்பகுதி) சான்றாகத் திகழ்கிறது.

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன - (3:1-5)

இவ்வண்டப் பகுதியில் உள்ள வரிகள் வானியல் என்னும் அடிப்படை அறிவியல் குறித்த மூன்று முக்கியச் செய்திகளைக் கூறுகிறது. ஒன்று, "உலகம் அல்லது இந்தப் பூமி உருண்டை வடிவமானது; இரண்டாவது, நூற்றொருக்கோடி வான்பொருள்கள், இதுபோல் உருண்டை வடிவமாக இப்பேரண்டத்தில் உள்ளன என்பது; மூன்றாவது, இவை இருக்கும் வெளி விரிந்துகொண்டே போகிறது என்னும் செய்திகள். வான்வெளியில் நிகழும் அற்புதங்கள் குறித்து மாணிக்கவாசகர் மட்டுமே மிக விரிவாகப் பாடியுள்ளார்.

இயற்கையின் அடிப்படையாக இருப்பவை எவை என்பதை மேற்குலகம் அறிவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அது பற்றிய அறிவியல் அறிவும் ஐம்பூதங்கள் பற்றிய அறிவியல் அறிவும் தமிழருக்கு இருந்தது. வடமொழி வாணர்களான ஆரியர் கூட சதுர்பூதம் என்னும் நான்கு கூறுகளை மட்டுமே அறிந்திருந்தனர். காற்று வேறு, அது இயங்கும் வெளி வேறு என்றும்; அந்த வெளியின் பெயர் "விசும்பு' என்ற தெளிவும் தமிழரிடம் இருந்தது.

மண் திணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புவதை வருவளியும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை

என்று புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. புற இயற்கைக்கு மட்டுமன்றி மனித உடலுக்கும் இந்த ஐம்பூதங்களே அடிப்படை என்பதை "அண்டமே பிண்டம்' என்னும் சொற்களால் தமிழர் வரையறுத்தனர். இது அடிப்படை அறிவியல் அறிவாகும் டாப்ளர் விளைவை (Doppler Effect)
வைத்து 20-ஆம் நூற்றாண்டில்தான் இந்த விசும்பு அண்ட வெளி விரிவடைந்து வருகிறது என்னும் உண்மையை மேற்குலக அறிவியல் அறிந்தது.

இதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகலிருவிசும்பு என்று தொல்காப்பியம் கூறுகிறது. "வளிதிரி தரு மண்டலம்' என்னும் காற்றே இல்லாத வெட்டவெளி (விசும்பு) இருக்கிறது என்னும் உண்மையையும், விமானியால் செலுத்தப்படாத வானூர்தியைப் பழந்தமிழர் விண்ணில் செலுத்தி இருக்கலாம் எனவும் உணர்த்துகிறது.

இதனை, ""வறிது நிலை இய காயமும்'' (புறம்:30) என்றும், ""வலவன் ஏவா வானூர்தி'' (புறம் 27) என்றும் புறநானூற்றுப் பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

20-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்புச் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது என்னும் தகவல், விஞ்ஞானிகளால்

ஏவுகணை, செயற்கைக்கோள் தொழில்நுட்ப வசதிகளைக்கொண்டு உறுதி செய்யப்பட்டது.
ஆனால், காலங்கணிக்க முடியாத காலத்தே சிவந்தது என்னும் பொருள்படும்படியாகச் செவ்வாய் என்னும் பெயரைத் தமிழர் வைத்திருப்பது வியப்பிற்கு உரியதாகும்!

இவை மட்டுமல்ல, தமிழர்களின் வானியல் சிந்தனைகள் குறித்து பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறிக்கொண்டே செல்லலாம்.
- புலவர் தங்க. சங்கரபாண்டியன் - நன்றி - தினமணி

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை


Collected from Social Media..

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...