Thursday, November 21, 2019

பஞ்சபூத அடிப்படியில் ராசிகளும் அதன் குணங்களும்

ஜோதிடம் 12 ராசிகளை நெருப்பு ராசிகள், நில ராசிகள், காற்று ராசிகள், நீர் ராசிகள் என்று பஞ்சபூத அடிப்படியில் பிரித்து அவற்றின் அடிப்படை குணம் என்ன என்று சொல்கிறது. 

அவற்றில் உங்கள் இராசி எந்த வகையை சேர்ந்தது...


*நெருப்பு ராசிகள்*


*▪மேஷம்*
*▪சிம்மம்*
*▪தனுசு*

ஆகிய மூன்று ராசிகளையும் *நெருப்பு ராசிகள்* என்று அழைப்பார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் அளவுக்கு அதிகமாக கோபப்படுவார்கள். நெருப்பு ராசியாக இருப்பவர்கள் கோபமாகவும், முரட்டுத்தனமாகவும், தைரியமாகவும் தலைமைப் பொறுப்புடன் இருப்பார்கள்.

*நில ராசிகள்*

*▪ரிஷபம்*
*▪கன்னி*
*▪மகரம்*

ஆகிய மூன்று ராசிகளையும் *நில ராசிகள்* என்று அழைப்பார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் பெரும்பாலான நேரங்களில் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள். நில ராசியாக இருப்பவர்கள் சாந்தமாக விட்டுக்கொடுக்கும் குணத்துடனும், அன்பு நிறைந்து மனத்துடனும், ஒழுக்கத்துடனும், பாசத்துடனும் நல்வழியில் செல்பவர்களாக இருப்பர்.

*காற்று ராசிகள்*

*▪மிதுனம்*
*▪துலாம்*
*▪கும்பம்*

ஆகிய மூன்று ராசிகளையும் *காற்று ராசிகள்* என்று அழைப்பார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்களின் மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. காற்று ராசியாக இருப்பவர்கள் தற்பெருமையுடன் உயர்ந்த ஆராய்ச்சியுடன் அறிவாளிகள் புடைசூழ சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும், எந்த நேரமும் ஆலோசனை செய்து கொண்டும் இருப்பார்கள்.

*நீர் ராசிகள்*

*▪கடகம்*
*▪விருச்சிகம்*
*▪மீனம்*

ஆகிய மூன்று ராசிகளையும் *நீர் ராசிகள்* என்று ஜோதிடர்கள் அழைக்கிறார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். நீர் ராசியாக இருப்பவர்கள் அமைதியாகவும், ஞானத்துடன் சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு சந்தோஷத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பர்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

மனக்கோயில் கட்டிய இரண்டு மகான்கள் 2 0f 2 : இரண்டு ஸ்ரீஅரவிந்தர்

’ஜல்’ ‘ஜல்’ ‘ஜல்’ என்று ஒரு குதிரை வண்டி, வட இந்தியாவில் பரோடாவின் தெருக்களில் விரைந்து கொண்டிருந்தது. யானைக்கு மதம் பிடிப்பதுபோல் குதிரைக்கும் மதம் பிடிக்குமா என்ன? திடீரெனத் தறிகெட்டுப் பாய்ந்தது குதிரை. அபரிமிதமான வேகத்தோடு, குதிரை கட்டுக்கடங்காமல் பாய்ச்சலெடுப்பதைப் பார்த்து, வழியில் நடந்தவர்கள் பயந்து பதறி விலகினார்கள். மலைமுகட்டில் கிடுகிடுவென ஓடியது வண்டி.


அந்த வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார் ஸ்ரீஅரவிந்தர். கிருஷ்ணரை நேரில் காண வேண்டும் என்ற வேட்கையோடு, தம் மனக்கோயிலில் கிருஷ்ணரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வரும் உன்னதமான பக்தர். அண்மைக்காலத்தில் உதித்த உயர்நிலை ஆன்மிகவாதி. வடஇந்தியாவில் பிறந்து வளர்ந்து, பின் தென்னிந்தியாவில் வாழ்ந்து உயர்ந்து அமரத்துவம் அடைந்த மகான்.

மிகச் சில கணங்களில் மலையிலிருந்து வண்டி கீழே விழும்; தான் இறக்கப் போகிறோம் என்று அவருக்குத் தோன்றியது. சரி; இறக்கும் முன் தன் இஷ்ட தெய்வமான கண்ணனைப் பிரார்த்திக்கலாம் என்று, கண்மூடி அகக்கண்ணால் கண்ணனைக் கண்டார். கண்டவர் கண்டு கொண்டே இருந்தார். என்ன அற்புதம் அந்தக் காட்சி!

அவரது மனக்கோயிலில் குடிகொண்டிருந்த கண்ணன் நகைத்தவாறே அவர் இதயப் பகுதியிலிருந்து குதித்து வெளியே வந்தான். சடாரென்று குதிரையின் லகானைப் பிடித்து நிறுத்தினான். குதிரை அமைதியாகத் திரும்பி நடந்தது. பார்த்தசாரதியாய் மகாபாரதப் போரில் தேரோட்டிய கண்ணனுக்கு, ஒரே ஒரு குதிரையை அடக்குவதா பிரமாதம்?

ஸ்ரீஅரவிந்தரைப் பார்த்துக் கண் சிமிட்டிக் குறும்பாகச் சிரித்த கண்ணன், மீண்டும் அவர் இதயக் கோயிலில் தன் வழக்கமான இடத்தில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்து கொண்டான். இந்த அகக்காட்சியைக் கண்டு திகைத்த அரவிந்தர் புறக்கண் திறந்து பார்த்தார். அவர் உடல் புல்லரித்தது. குதிரை நிறுத்தப்பட்டிருந்ததையும், அது அமைதியாகத் திரும்பி நடந்ததையும் பார்த்து வியந்தார். தன் மனக் கோயிலின் உள்ளே கண்ணன் வீற்றிருக்க இனி தனக்கென்ன மனக் கவலை? எந்தச் சோதனையிலும் கண்ணன் தன்னைக் காப்பான் என்ற உறுதி அப்போதுதான் அவருக்கு ஏற்பட்டது.

மனத்தையே கோயிலாக்கி தன் உள்ளத்தில் தெய்வ சக்தியை ஸ்ரீஅரவிந்தர் இறக்கிக்கொண்டது எப்படி?

ஸ்ரீஅரவிந்தர் மனத்தில் சதா ஓர் யோசனை. ‘இறைவனை மனத் தில் குடிவைத்திருக்கிறோமே? அவரை நேரிலேயே காண ஆசைப்படுகிறோமே? இதுவரை நாள்தோறும் நாம் செய்யும் சிறிது நேர ஜபதபங்களால் கிடைக்கும் அனுபவகளிலிருந்து, முழுமையாக இறைத்தேடலில் இருபத்தி நான்கு மணி நேரமும் ஈடுபட்டால் கண்ணனைக் கண்ணால் காண முடியும் என்று நம்பிக்கை தோன்றுகிறதே? என்றைக்கு முழுமையாகக் கிருஷ்ண பக்தியில் தோயப் போகிறோம்? இந்த சுதந்திரப் போரிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள இயலவில்லையே? கண்ணனைக் குறித்துத் தவம் செய்வது எப்படி?’

அவரது மனப்போராட்டத்தை, அவர் மனத்திலேயே குடிகொண்டிருக்கும் கண்ணன் உணரமாட்டானா என்ன? அவன் ஒரு முடிவு செய்தான். செய்யாத குற்றமொன்றில் பழி சுமத்தப்பட்ட அரவிந்தர் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார். ‘இந்த ஓராண்டு முழுவதும் என்னையே நினை’ என அவர் மனத்துக்குள்ளிருந்து உத்தரவு போட்டான். கண்ணனைக் குறித்துச் சிறையில் அரவிந்தர் தவம் செய்யலானார்.

அந்தக் கடும் தவத்தின் காரணமாக, அவர் மனத்துக்குள்ளிருந்து நேரில் வெளிப்பட்டு, சிறையிலேயே அவருக்குக் காட்சி தந்தான் கண்ணன்.

சிறையிலேயே பிறந்தவனுக்கு சிறையில் தோன்றுவது பிரமாதமா? ஸ்ரீஅரவிந்தருக்குக் கீதை போதித்தான். கீதையை நேரில் கேட்டவர் இருவர். ஒருவர் மகாபாரதப் போரில் அர்ச்சுனர். இன்னொருவர் சுதந்திர பாரதப் போரில் அரவிந்தர்.

தான் விடுதலையான பிறகு ‘உத்தர்பாரா’ என்ற இடத்தில் நிகழ்த்திய சொற்பொழிவில், “நான் நேரில் கண்ணனை தரிசித்தேன்” என்று அறிவித்தார் அரவிந்தர். பத்திரிகைகளில் இந்தச் செய்தி வெளியாகியது.

பாண்டிச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த பாரதியார், இது உண்மையாக இருக்குமா என்று திகைத்தார். கண்ணன் பாட்டு எழுதிய கிருஷ்ண பக்தர் அவர். அன்றைய காலகட்டத்தில் சுதந்திர வீரர்கள் பலர் ராம பக்தர்களாக இல்லாமல் கிருஷ்ண பக்தர்களாகவே இருந்தார்கள். தன் சொந்த நாட்டைத் தம்பிக்கு விட்டுக் கொடுத்த ராமனை விடவும், தனக்குச் சொந்தமில்லாவிட்டால்கூட, தர்மபுத்திரரின் நாட்டை அவருக்கு மீட்டுக் கொடுத்த கண்ணன், நாட்டு விடுதலைப் போரில் ஈடுபட்டிருந்த தியாகிகளைக் கவர்ந்ததில் வியப்பில்லையே?

பாரதியார், தான் தலைமறைவு வாழ்க்கை காரணமாகக் கல்கத்தா செல்ல இயலாததால், நிருபர் ஒருவரைக் கல்கத்தாவுக்கு அனுப்பினார். ஸ்ரீஅரவிந்தரை நேரில் அந்த நிருபர் சந்தித்தார். ‘கண்ணனைக் கண்டது நிஜத்திலா கனவிலா’ என்று விசாரித்தார். கண்ணனை உண்மையிலேயே தரிசனம் செய்தேன் என்றும், அவனைத் தொட்டுப் பார்த்தேன் என்றும் அரவிந்தர் கூறிய செய்திகளை நிருபர் பாண்டிச்சேரி திரும்பி வந்து பாரதியாரிடம் தெரிவித்தார்.

பாரதியார் ஸ்ரீஅரவிந்தரை கடவுளை நேரில் கண்ட சித்த புருஷர் என்று அறிவித்தார். ஸ்ரீஅரவிந்தர் பாண்டிச்சேரி வந்தபோது, கடவுளைக் கண்ட அந்தக் கடவுளுக்குத் தங்குமிடம் ஏற்பாடு செய்தவரும், பின் அவருடன் தியானம் பழகியவரும் பாரதியார்தான். பாரதியார் மட்டுமா?

 தமிழின் முன்னோடிச் சிறுகதையை எழுதியவரும், வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கி சுடப் பயிற்சி தந்தவருமான வ.வே.சு. அய்யர் உள்ளிட்ட பல ஆன்மீகவாதிகள் ஸ்ரீஅரவிந்தருடன் தியானம் பழகினார்கள்.

அரவிந்தர் மீண்டும் சுதந்திர உரை நிகழ்த்த வேண்டும் என்று தேவதாஸ் காந்தி மூலமாகவும், லாலா லஜபத்ராய் மூலமாகவும் மகாத்மா மறுபடி மறுபடி வேண்டுகோள் விடுத்தார். மறுத்த அரவிந்தர், “நான் தியான வழியில் பாரத சுதந்திரத்துக்காகப் பாடுபடுகிறேன். இது உண்மை என்பதற்கு, என் மனக்கோயிலில் குடிகொண்ட கண்ணன், எதிர்கால சுதந்திர வரலாற்றில் முத்திரை பதிப்பான்” என்று, சுதந்திரம் கிடைப்பதற்குப் பல்லாண்டுகள் முன்னால் சொன்னார். 

என்ன ஆச்சரியம்! சுதந்திரம் தற்செயலாக அரவிந்தரின் பிறந்த நாளன்று நமக்குக் கிட்டியது!

கடவுளுக்கு மனக்கோயில் கட்டி வழிபட்டு, பின்னர் கடவுளை நேரிலேயே தரிசித்த அரவிந்தர், மெல்ல மெல்லக் கடவுளாகவே மாறிய கதை, புராணமல்ல; கற்பனை கலவாத அண்மைக் கால வரலாறு!

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை


Collected from Social Media..

மனக்கோயில் கட்டிய இரண்டு மகான்கள் 1 of 2 : ஒன்று பூசல நாயனார்

இரண்டு மகான்கள். இந்த இருவருமே, தங்கள் மனத்தில் கோயில் கட்டி, கடவுளை அங்கே குடிவைத்திருந்தார்கள் என்பதுதான் ஒற்றுமை. திருமாலாகிய கண்ணனுக்குக் மனக்கோயில் கட்டினார் ஒருவர். சிவனுக்கு மனக்கோயில் கட்டினார் இன்னொருவர். 



இறைவனை மனக்கோயில் கட்டி வழிபட்ட இந்த இருவரையுமே, நாம் கோயிலில் வைத்து இன்று வழிபடுகிறோம். இவர்கள் இருவருமே தெய்வ நிலையை அடைந்துவிட்டார்கள். வரலாற்றில் ஒருவர் ஸ்ரீஅரவிந்தர். புராணத்தில் ஒருவர் பூசலார் நாயனார்.

சிவபக்தனான காஞ்சி மன்னன் காடவர் கோன் ஒரு கற்கோயில் கட்டினான். தான் கட்டிய ஆலயத்துக்குக் கும்பாபிஷேக நாள் குறித்தான். விடிந்தால் குடமுழுக்கு. இறைவனைத் துதித்தவாறே உறங்கப்போனான்.

ஆழ்ந்த உறக்கம். அதில் ஒரு கனவு. சிவன் அவனுக்குக் காட்சி தந்தார். பொன்னார் மேனியனாய், புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ் சடைமேல் மிளிர் கொன்றை அணிந்து கங்கையும் பிறைமதியும் தலையில் சூடிச் சிவம் கனவில் வந்த அழகு, கண்ணைச் சொக்கச் செய்தது. 

சொக்கேசனல்லவா அவன்? தரிசித்தவர்களை எல்லாம் சொக்க வைப்பதுதானே அவன் இயல்பு?
“அன்பனே!” என்று மன்னனை அழைத்தான் மகாதேவன். “என்ன என் தெய்வமே?” என்று ஆவலோடு கேட்டான் தரிசனப் பரவசத்தில் திளைத்திருந்த மன்னன்.

“நீ குறித்த கும்பாபிஷேக நாளைத் தள்ளிப்போடு. நாளை அதற்கு நான் வர இயலாது. நாளை நான் கலந்துகொள்ள வேண்டிய இன்னொரு கும்பாபிஷேகம் இருக்கிறது அப்பனே! உன்னைப்போல் இன்னொருவனும் எனக்காகக் கோயில் கட்டி வருகிறான். அவன் நாளை கும்பாபிஷேகம் வைத்திருக்கிறான்.”

காடவர்கோனுக்குத் திகைப்பு. ‘கோயில் கட்டுவது என்பதென்ன சாமான்யமா? எத்தனை செலவாகும்? எத்தனை பேரின் ஒட்டுமொத்த உழைப்பு தேவைப்படும்? யாரோ தனி நபர் கோயில் கட்டியிருக்கிறாராமே? சாத்தியமா அது? அரசனான எனக்கே என்னைப் பிடி, உன்னைப் பிடி எனச் செலவு இழுக்கிறது. இதென்ன இறைவன் புதுக் கதையாகச் சொல்கிறான்?’

மன்னனின் எண்ண ஓட்டத்தை உணர்ந்த இறைவன் நகைத்தான்.

“மன்னனே! உன் செல்வச் செருக்கைக் கொஞ்சம் சுருட்டிவை. திருநின்றவூரில் எனக்காகக் கோயில் கட்டும் பூசலார் நாயனார் உள்ளக்கோயில் கட்டுகிறார். உள்ள கோயில்களிலெல்லாம் உயர்ந்தது ‘உள்ளக் கோயில்’தான் என்பதை நீ அறிவாயா? எனக்கு ஆலயம் அமைக்கும் அற்புதமான திருப்பணி, அவர் மனத்தின் உள்ளே எத்தனை காலமாக நடக்கிறது தெரியுமா?

ஒவ்வொரு கருங்கல்லாக எண்ணத்தால் எடுத்தெடுத்து வைத்து அவர் கட்டிய மனக்கோயிலுக்கு நாளை கும்பாபிஷேகம். நான் அதற்குக் கட்டாயம் போயாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன். நீ கட்டிய கற்கோயில் கும்பாபிஷேகத்துக்கு இன்னொரு நாள் வருகிறேன்.”

கனவு கலைந்தது. காடவர்கோன் தூக்கிவாரிப் போட்டு எழுந்து உட்கார்ந்தான். என்ன கனவு இது! கனவல்ல, இது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். யார் அந்தப் பூசலார்? நாளை நேரில் திருநின்றவூர் செல்வோம்.

மறுநாள்... கும்பாபிஷேகத்தை ஒத்தி வைத்துவிட்டு, பரிவாரங்களுடன் திரு நின்றவூர் சென்றான். பூசலாரின் இல்லம் எது என்று தேடி விசாரித்துக் கொண்டு போனான். ஓர் எளியவரின் இல்லத்தை மன்னன் தேடிச் செல்வது எதற்காக என்று தெரியாமல் மக்கள் கூட்டம் மயங்கியது.

பூசலாரை நேரில் கண்ட அக்கணமே, அவர் மிக உயர்ந்த பக்தர் என்பதை உணர்ந்தான் மன்னன். அவர் பாதங்களில் விழுந்து பணிந்தான். பூசலார் கூச்சத்தால் காலை நகர்த்திக் கொண்டார். “எதற்கு வந்தாயப்பா?” என்று வினவினார்.

“நீங்கள் மனக்கோயில் கட்டிக் கொண்டிருக்கிறீர்களாமே?”

“ஆம். அதை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்?”

பூசலார் வியப்புடன் வினவினார். அவர் கொஞ்ச காலமாகவே யாரும் அறியாமல் தன் மனத்துக்குள் சிவனுக்கு ஓர் ஆலயம் நிர்மாணித்து வருகிறார் என்பது மெய்தான். கற் கோயில் கட்ட அவரிடம் ஏது செல்வம்? ஆனால் மனக் கோயிலுக்கு பக்திச் செல்வம் இருந்தால் போதுமே?

ஒருநாள் தன் மனத்துக்குள் ஆயிரக்கணக்கான சிற்பிகளை வரவழைப்பார். இன்னின்ன இடத்தில் கோயிலின் பிராகாரங்களில் சிற்பங்கள் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று தெரிவிப்பார். சிற்பிகள் கற்களைக் கொண்டு அடுக்குவார்கள். உளியின் சத்தம் ஓயாமல் காதைப் பிளக்கும். எல்லாம் மனத்துக்குள்தான். பிறகொரு நாள் நான்கு பேரைக் கூப்பிட்டு, சிவன் கோயில் நந்தவனத்துக்குக் கிணறு வெட்டச் சொல்வார். கோயிலுக்கு என்றொரு குளம் வேண்டாமோ? அதை வெட்டவும் ஆட்களை வரவழைப்பார். அதுவும் மனத்துக்குள்தான். ஒவ்வொரு கல்லாக அடுக்கி அடுக்கிப் பல்லாண்டுகளாகப் பார்த்துப்பார்த்து அவர் கட்டிய மனக்கோயில் அது. அதற்குத்தான் இப்போது கும்பாபிஷேகம்!

‘ஆகா. என்ன பக்தி! என்ன பக்தி! இதுவல்லவோ பக்தி! செல்வச் செருக்கால் நான் கட்டும் கற்கோயிலைச் செல்வமிருந்தால், யார் வேண்டுமானாலும் கட்டலாம். ஆனால் பூசலாரைப் போன்ற உன்னதமான பக்தரன்றி யாரால் மனக் கோயில் கட்டமுடியும்?’

காடவர்கோன் பணிவன்போடு அன்று பூசலார் கட்டிய மனக்கோயிலின் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டான். இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட அந்தக் கோயிலும், அதனுள் உறையும் காடவர்கோனின் வழிபடுதெய்வமான சிவபிரானும் அவர் உடலிலேயே இருப்பதால், அவரை விழுந்து வணங்கி மெய்சிலிர்த்தான். மறுநாள், தான் நடத்திய கற்கோயில் கும்பாபிஷேகத்தை நிகழ்த்தி வைக்கப் பூசலாரையே அழைத்துச் சென்றான்.

மன்னனும் சிவபக்தனாக வாழ்ந்த காலம் அது. பக்தன் என்றறிந்ததும் ஓர் ஏழையின் பாதங்களில் விழுந்து வணங்கிய அடக்கம் அந்த மன்னனின் பெருமை. அடக்கத்தையே ஒரு மயிலிறகாகத் தன் மணி முடியில் சூட்டிக்கொண்ட பண்பாளன் அவன்.

பூசலார் நாயனார் வரலாறு, பெரிய புராணத்தில் பதினெட்டுப் பாடல்களில் சொல்லப்படுகிறது. ‘நின்ற ஊர்ப் பூசலார்தம் நினைவினை உரைக்க லுற்றாம்’ என்ற முன்னுரைப் பாடல், ‘பூசலார் பொன்தாள் போற்றி’ என்ற முடிவுரைப் பாடல் இரண்டையும் விட்டுவிட்டால், பூசலார் நாயனாரின் சரிதம் பேசுபவை 16 பாடல்கள்தான். அந்தப் பதினாறே பாடல்களில் சேக்கிழார் மிக அழகாக மனக்கோயிலின் மகத்துவத்தை பூசலார் வரலாற்றில் வைத்து விவரிக்கிறார். கிணறு வெட்டி, பொருட்களை ஒவ்வொன்றாய்த் தேடித் திரட்டி, கல் எடுத்து, சிற்பிகளைக் கொண்டு சிற்பங்கள் செய்வித்து எனப் பூசலார் படிப்படியாக மனக்கோயில் கட்டும் தெய்விக வரலாறு நம் உள்ளத்தை உருக்குகிறது.

அது புராண காலம். ஆனால் சுதந்திர காலத்தில் வாழ்ந்த ஸ்ரீஅரவிந்தர் எப்படி மனக்கோயில் கட்டினார்?

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

Wednesday, November 6, 2019

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து !!!

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, 

புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, 

ஒருதடவை சொன்னா சொன்னதுதான்.


இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல், அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது.

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                         
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...