Friday, May 15, 2020

நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஐந்து வகையான உலோக பாத்திரங்கள்!!

மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். 

உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உணவில் சுவையும், சத்தும் அதிகரிக்கச் செய்யும் என்பது முன்னோர்கள் கண்ட உண்மை.



வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும். 

பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

செம்புப் பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது. 

இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.

இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

மண்பாண்ட மகிமை 2 - உலகத்திலேயே மிகச் சிறந்த நீர் சுத்திகரிக்கும் கருவி !!

மண் பானை ஒரு மிகச்சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி. 



மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. 

எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த நீர் சுத்திகரிக்கும் கருவி மண் பானை ஆகும்.

10 லிட்டர் தண்ணீர் மண்பானையில் 3 தேத்தான் கொட்டை, 1 துண்டு நன்னாரி வேர், சிறிது வெட்டி வேர், 6 மிளகு, லு தேக்கரண்டி சீரகம், இவை அனைத்தையும் சிறிய வெள்ளை துணியில் கட்டி மண்பானை தண்ணீரில் இரவு முழுவதும் போட்டு வைக்கவும். இதன் பெயர் சத்து நீர் முடுச்சு.

காலையில் துணியை பிரித்து சூரிய ஒளியில் வைக்கவும். இந்த சத்து நீர் முடிச்சை மூன்று முறை பயன்படுத்தலாம். இந்த நீரை பயன்படுத்தும் போது உயிராற்றல் அதிகரிக்கும்.

சாதாரணமாக மண்பானையில் பொங்கும் சோறு நல்லா ருசியாகவும் சத்து வெளியேறாமல் அப்படியே கிடைப்பதோடு எளிதில் செரிமானம் ஆகும். 

அந்த சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் அதில் மோர் தயிர் சிறிது உப்பு சேர்த்து அந்த பானத்தை அருந்தும் போது உடலுக்கு நல்ல வலுவை தருகிறது.

இன்றும் கிராம மக்கள் அமுத பானமாக அந்த நீராகாரத்தை தான் பருகுகிறார்கள். அதுவே பாரம்பரிய அரிசியில் சமைத்த சோறாக இருந்தால் மூன்று நாள் கூட வைத்து அதை பருகலாம்

இன்னும் ருசியாக உடலுக்கு குளிர்ச்சியும் ஆற்றலையும் தரும். வெப்ப காலங்களில் இதுவே சிறந்த காலை உணவாகும். 

இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரிய மண் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.

இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரிய மண் பாத்திரங்களைப் பயன்படுத்தி உடல் ஆரோக்கியதை  காப்போம்.


வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

Thursday, May 7, 2020

மண்பாண்ட மகிமை 1 - உலகத்திலேயே மிகச் சிறந்த சமையல் பாத்திரம் !!

உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.



மண்பாண்டங்கள்… மனித குலம் தோன்றியது முதலே இதன் பயன்பாடு இருந்து வருகிறது.

உலகின் முதன் முதல் மனிதன் செய்த தொழில் மண்பாண்டம்.

மண் அடுப்பு, மண் பாண்டம், கல் சட்டி, தேங்காய்ச் சிரட்டை மரக்கரண்டி போன்ற பழங்காலச் சமையல் சாமான்கள் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. 

பலமடங்கு உயிர்சத்தும் ஆற்றலும் கொண்டது மண்பாண்ட சமையல். அக்காலத்தில் நோயின்றி அதிக காலம் உயிர் வாழ்ந்தமைக்கு மண்பாண்டம் பயன்பாடு பெறும் பங்கு வகிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. 

நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். 

மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்

அந்த காலங்களில் நமது மூதாதையர்கள் களிமண்ணினால் செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருள்களை பயன்படுத்தி வந்தனர். 

இதனால் அவர்கள் செய்த உணவு பொருள்கள் கூடுதல் ருசியுடனும், பிரிட்ஜ் இல்லாமல் நீண்ட நாள்களுக்கு கெடாமலும் இருந்தது.

மேலும் அவர்கள் எவ்வித நோய் பாதிப்பும் இன்றி நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தனர். 

நமது மூதாதையர்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்ததற்கு காரணம் கலப் படமற்ற பயிர்கள், உணவு தானியங்கள் என்று சொல்லலாம். 

எனினும் அவர்கள் தண் ணீர் அருந்த, உணவு சமைக்க, உண்ண களிமண்ணால் ஆன பாத்திரங்களையே பயன்படுத்தி வந்தனர்.

இதனால் இயற்கை காய்கறிகள், உணவு தானியங்களின் மூலம் கிடைத்த சத்துகளுடன் களிமண்ணில் உள்ள தாதுக்களும் அவர்களுக்கு கிடைத்தன. 

இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரிய மண் பாத்திரங்களைப் பயன்படுத்தி உடல் ஆரோக்கியதை  காப்போம்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

ருத்ராக்ஷ மாலையை எப்படி பராமரிக்க வேண்டும்!!

ருத்ராக்ஷ மாலையை பயன்படுத்தும் பொழுது நன்றாக பாதுகாப்பது முக்கியமான ஒன்று. 


கெமிக்கல் பொருட்கள், சோப் மற்றும் இதர செயற்கைப் பொருட்கள் படாமல் பாதுகாக்க வேண்டும்.

பயன்படுத்த துவங்குவதற்கு முன்னால் ஒரு வார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணையில் ஊறவைக்க வேண்டும்.  

பின்பு நீரால் கழுவி ஈரம் போக துடைத்து விட்டு திருநீறில் ஒரு நாள் முழுவதும் வைக்கவேண்டும்.

பின்பு காய்ச்சாத பசும்பாலில் கழுவி நீரில் முக்கி எடுத்து நன்றாக துடைத்துக் கொள்ளவும்.

பின்பு பூஜையில் வைத்து ஜெபங்கள் செய்து அணியலாம்.

இந்த தூய்மையாக்கும் முறையை வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். 

மாத சிவராத்திரி அல்லது மஹாசிவராத்திரி அன்று அணியுமாறு தூய்மை வேலையை துவக்க வேண்டும்.

ருத்ரக்ஷத்தை தூய்மை செய்ய இத்தனை வேலை செய்ய வேண்டுமா என்ற மனநிலை ஏற்படுகிறதா இதை செய்ய வேண்டிய அவசியத்தை நிதர்சனமான விஷயத்திலிருந்து பார்ப்போம்.

உங்கள் உடலில் மேல்தோல் முழுவதும் இல்லாமல் வெறும் சதைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்தால் உங்கள் உடல் எவ்வளவு உணர்வு மயமாக இருக்கும்.

இதற்கு ஒப்பானது ருத்ராக்ஷத்தின் உணர்வு நிலை. அதனால் தான் மேற்பகுதியை கடினமாக்கவும், உணர்வு மிகாமல் சரியான நிலையை அடைய இயற்கையான பொருள் மூலம் சுத்திகரிக்க முயல்கிறோம்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...