Sunday, June 28, 2020

கழுகைப் போன்று, மறுபிறவிக்கு நாமும் தயாராகுவோமா!

பறவை இனத்திலேயே கழுகுக்கு மட்டும்தான் 70 ஆண்டு ஆயுட்காலம். 70 ஆண்டுக் காலம் வாழ வேண்டுமென்றால், அது 40 வயதில் தன்னையே உருமாற்றம் செய்ய வேண்டும்.


கழுகு தன் 40 வயதை அடையும்போது, அதன் அலகு இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயனற்றதாகிவிடும். அதன் அலகும் வளைந்து விடும். அதன் இறக்கைகளும் தடித்து, பறப்பதற்குக் கனமாக மாறிவிடும்.

இந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க நிகழ்ச்சிக்குத் தன்னையே உட்படுத்துவது இவை தான் கழுகுக்கு முன் இருக்கும் வாய்ப்புகள்.

கழுகு என்ன செய்யும் தெரியுமா? இந்தக் காலத்தில், உயர்ந்த மலைக்குப் பறந்து சென்று அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தன் கூட்டிலேயே தனித்திருக்கும்.

புதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே பிய்த்தெடுக்கும். ஐந்து மாதங்களுக்குப் பின் புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும்.

இந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்திருந்து, வலியை அனுபவித்து, மறுபிறவி அடைந்த கழுகு இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறும்.

வாழ்க்கையில் இதுதான் கடைசி என்று நினைப்போம். ஆனால், அந்த வாழ்க்கையைப் புதுப்பிக்க வாய்ப்புக் கிடைக்காமல் போகாது. ஆனால், அந்த வாய்ப்பு வலியோடு வரலாம். அதைத் தாங்குவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், அதை ஏற்றுக்கொண்டு அதைத் தாண்டி வந்தால் நமக்கும் மறுபிறவி கிடைக்கலாம். அதற்குப் பிந்தைய வாழ்க்கை மகிழ்ச்சி மிக்கதாக மாறிவிடலாம்.

கழுகைப் போன்று, மறுபிறவிக்கு நாமும் தயாராகுவோமா!

மூன்று வகையான பஞ்சாட்சரம்!!

பஞ்சாட்சரம் ஆனது மூன்று வகைப்படும் :

அவை முறையே ஸ்தூல ; ஸூக்ஷ்ம ; காரண பஞ்சாட்சரம் ஆகும்.

இதில்


நமசிவய - ஸ்தூல பஞ்சாட்சரம்

சிவயநம - சூட்சும பஞ்சாட்சரம்

சிவசிவ - காரண பஞ்சாட்சரம்

#ஸ்தூல_பஞ்சாட்சரம் :

" நமசிவய " என்பது " ஸ்தூல பஞ்சாட்சரம் " ஆகும்

இம்மந்திரத்தை  ஓம்காரம் ஆன பிரணவத்தோடு சேர்ந்து
" ஓம் நமசிவய " என்று உச்சரிப்பதே மரபாகும்.

சித்தர்கள் இம்மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடாகவே உணர்ந்தனர்
இம்மந்திரத்தின் மூலம் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் ( நிலம் ; நீர் ; நெருப்பு ; மண் ; ஆகாயம் )கட்டுப்படுவதோடு ஐம்பொறிகளும் ( கண் ; காது ; மூக்கு ; வாய் ; மனம் ) நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும்.

பஞ்சாட்சரத்தின் பஞ்சபூதங்களை ஆளும் தன்மை ஆனது கீழ்க்கண்டவாறு குறிக்கும்.

1) ந - நிலத்தை குறிக்கிறது

2) ம - நீரை குறிக்கிறது

3) சி - நெருப்பை குறிக்கிறது

4) வ - காற்றை குறிக்கிறது

5) ய - ஆகாசத்தை குறிக்கிறது

எம்பெருமான் ஈசனின் பஞ்சமுகத்தோடு இணைந்த பஞ்சாட்சர தத்துவ விளக்கம் :

1)" ந "  - ஈசனின் கிழக்கு நோக்கிய முகமான
" தத்புருஷம் " முகத்திற்கு உரியது ஆகும்
இதன் நிறம் " மஞ்சள் நிறம் " ஆகும்
இதன் ரிஷி " கௌதம மகரிஷி " ஆவார்.

2) " ம " - ஈசனின் தெற்கு நோக்கிய முகமான
" அகோரம் " முகத்திற்கு உரியது ஆகும்
இதன் நிறம் " கறுப்பு நிறம் " ஆகும்
இதன் ரிஷி " அத்ரி மகரிஷி " ஆவார்.

3) " சி " - ஈசனின் மேற்கு நோக்கிய முகமான
" சத்யோஜாதம் " முகத்திற்கு உரியது ஆகும்
இதன் நிறம் " சாம்பல் நிறம் " ஆகும்
இதன் ரிஷி " விஸ்வாமித்ர மகரிஷி " ஆவார்

4) " வ " - ஈசனின் வடக்கு நோக்கிய முகமான
" வாமதேவம் " முகத்திற்கு உரியது ஆகும்
இதன் நிறம் " பொன் நிறம் " ஆகும்
இதன் ரிஷி " ஆங்கிரஸ மகரிஷி " ஆவார்

5) " ய " - ஈசனின் மேல் நோக்கிய முகமான
" ஈசானம் " முகத்திற்கு உரியது ஆகும்
இதன் நிறம் " சிவப்பு நிறம் " ஆகும்
இதன் ரிஷி " பாரத்வாஜ மகரிஷி " ஆவார்.

#சூட்சும_பஞ்சாட்சரம் :

" சிவயநம " என்பது " சூட்சும பஞ்சாட்சரம் " ஆகும்.

இம்மந்திரத்தை ஓம்காரம் ஆன ப்ரணவத்தோடு சேர்த்து " ஓம்சிவயநம " என்று உச்சரிக்க வேண்டும்

எம்பெருமான் ஈசனின் ஐந்து முகங்களில் இருந்து " ஓம் " என்னும் " பிரணவம் " உதித்தது

அதாவது

1) ஈசனின் வடக்கு நோக்கிய முகம் ஆன
" வாமதேவம் " முகத்தில் இருந்து - " அகாரமும் "

2) ஈசனின் மேற்கு  நோக்கிய முகம் ஆன
" சத்யோஜாதம் " முகத்தில் இருந்து - " உகாரமும் "

3) ஈசனின் தெற்கு நோக்கிய முகம் ஆன
" அகோரம் " முகத்தில் இருந்து - " மகாரமும் "

4) ஈசனின் கிழக்கு நோக்கிய முகமான
" தத்புருஷம் " முகத்தில் இருந்து - " பிந்து " எனப்படும் நாதத்தின் தொடக்கமும்

5) ஈசனின் மேல் நோக்கிய முகமான
" ஈசானம் " என்னும் முகத்தில் இருந்து
" நாதம் " ஆன " சப்த ரூபமும் " தோன்றின.

இவ்வாறு " ஓம் " என்னும் பிரணவத்தோடு
" சிவயநம " சேர்ந்து முழுமையான
" மந்திர ஸ்வரூபம் " ஆனது

" அவ்வும் உவ்வும் மவ்வுமாய்
அமர்ந்ததே சிவாயமே "

" சிவாயநம என்று சிந்திந்திருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லையே "

" திருவாய் பொலிய சிவயநம என்று
நீறணிந்தேன்"
" தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே "

#காரண_பஞ்சாட்சரம் :

" சிவ சிவ " என்பது " காரண பஞ்சாட்சரம் " ஆகும்

சிவ சிவ என்னும் மந்திரமானது நமது காரணத்தில் உள்ள பிற கழிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியரின் ஆழ்ந்த கருத்தாகும்.

இம்மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக் கூடியது

ஆகையால் இம்மந்திரத்தின் மூலமாக லௌகீக லாபங்களை எதிர்பார்க்க முடியாது
அதாவது " உலகியல் குறிக்கோள்களை " பூர்த்தி செய்த ஒருவருக்கு ( துறவு நெறி பூண்டவர்களுக்கும் மிக வயதானவர்களுக்கும் )மட்டுமே இம்மந்திரம்
பொருத்தமானது ஆகும்.

" சிவசிவ என்றிட தீவினை மாலும் "
" சிவசிவ என்கிலார் தீவினையாளர் "
" சிவசிவ என்றிட தேவருமாவர் "
" சிவ சிவ எண்ண சிவகதி தானே "

சி  - சிவானந்தம் - பொருள்

வ - சிவசன்னதி - அருள்

ய - உயிர்கள் - தெருள்

ந - திரோதானம் - மருள்

ம - ஆணவம் - இருள்

தன்னை அறிந்தவன் தவத்தை அடைகிறான்
தவத்தை அடைந்தவன் சிவத்தை அடைகிறான்

" நித்தம் தவம் இருந்தால் "
" சித்தம் சிவம் ஆகும் "

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Sunday, June 21, 2020

ஜடைப்பின்னலின் மகத்துவம்!!

பின்னல் உறவைக் குறிக்கிறது. முடியை விரித்துவிடுவது(free hair) அமங்களமானது. 
எவ்வுறவும் வேண்டாம் என்பதை குறிக்கிறது.


ஆகையினால் தான் இறந்தவர் வீட்டிலும் பிணத்தின் பின்னும் தலைவிரி கோலமாகச் செல்வர்.
அதன் பொருள் "என்னவரே சென்ற பின் எனக்கேது உறவு. 
இனி எந்த உறவும் எனக்கில்லை" என்பதாகும்.

மேலும் தலை முடியின் நுனி வழியாக ஆத்ம சக்தி வெளியேறுகிறது. 
நல்ல / தீய உணர்வுகள் (அ) அதிர்வுகள் வந்து செல்வதற்கான ஊடகம் (medium) போன்றது முடியின் நுனி... மேலும் துறவிகள் மொட்டை அடித்துக் கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஏனெனில் வெளியிலிருந்து பெறுவதற்கும்  ஒன்றுமில்லை... நம்மிடமிருந்து போவதற்கும் ஒன்றுமில்லை... 
என்பதை உணர்த்துவதற்காக.

ஆகையினால் தான் முற்காலத்தில் நுனி முடி வெளியில் தெரியாமல் இருக்க நார் அல்லது குஞ்ஜலம் கட்டிக் கொள்வர்...

ஆகையால் தலைவிரி கோலத்தைத் தவிர்ப்போம்.
இது உறவின் மீதான பிடிப்பை அறுக்க கூடியது.

ஜடைப்  பின்னல்

இதன் அமைப்பு த்ரிவேணி சங்கமத்தை ஒத்தது. 
மூன்று நதிகள் சேரும் போது இரண்டு நதிகள்(கங்கை,யமுனை) கண்களுக்கு புலப்படுகின்றன. ஒரு நதி (சரஸ்வதி) புலப்படுவதில்லை. 
இதைப் போலவே பின்னலின் மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகளே புலப்படுகின்றன.

ஜடைப்பின்னலின்

வலது- பிறந்த வீடு
இடது-புகுந்த வீடு
நடுப்பகுதி-பெண்

தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும்.

தன்னை முன்னிறுத்தும் பெண்ணை காட்டிலும்
தன் குலத்தை முன்னிறுத்துபவளே உயர்ந்தவள் ஆவாள்.

ஆகையினால் பின்னல் வெறும் அலங்காரம் அல்ல வாழ்வின் தத்துவமாகும்.

#ப்யாரீப்ரியன்.அறிவோம் தெளிவோம் தொகுப்பிலிருந்து....

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

Saturday, June 6, 2020

தேனை எந்தெந்த உணவுடன் சேர்த்து உண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்!!

தேன் தனித்து மட்டும் இன்றி பிற பொருட்களுடன் கலந்து சாப்பிடும்போதும் நல்ல பலன்களை தருகின்றது. அவை என்னென்ன?


இருதய பலத்திற்கு:
இரவில் பாலுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

உடல் சக்திக்கு: 
பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

ரத்த விருத்திக்கு:
மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

இருமல் குணமாக:
எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

பார்வை தெளிவிற்கு:
நெல்லிக்காய் சாருடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

தூக்கம் வர:
ஆரஞ்சுப்பழச்சாறுடன்  தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

குடல் புண், வாய்ப்புண் ஆற:
தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

பித்தம் குணமாக:
இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

கட்டிகள் வீக்கம் குறைய:
தேனுடன் சுண்ணாம்பு கலந்து தடவ வேண்டும்.

வாழ்க... நம் பழந்தமிழர்களின் பண்பாட்டு பெருமைகள்...

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...