Wednesday, August 30, 2017

விநாயகர் சதுர்த்தி மண் வளத்தை மேன்மைப்படுத்தும் யுக்தியா?

நமது முன்னோர்கள் எதைச் செய்தாலும் அது நமது சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவே இருக்கும்:

விநாயகர் சதுர்த்தி விழா நாம் 16 ஆம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடி வருகிறோம். அதுவும் ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதத்தில் கொண்டாடி மகிழ்கிறோம். இதில் உள்ள ஐதீகம் மற்றும் அறிவியலை நாம் இப்பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.



விநாயகர் சதுர்த்தி ஐதீகம்:

விநாயகர் சதுர்த்தி ஆரம்பித்த மூன்றாவது நாளில் விநாயகர் விக்கிரஹங்கள் நீர் நிலைகளில் கரைக்கப்படும். இதை நாம் விநாயக மூர்ட்த்தி தனது தாயுடம் ஐக்கியம் ஆகிவிட்டதாக என்பதை கூறி ஒவ்வொரு பிள்ளையும் தனது தாயை போல தர்ம நெறியில் சிறந்து விளங்க வேண்டும் என்று நமக்கு பாடம் புகட்டினர்.

மெய்ஞானம் இன்றி சனாதனமா? (அறிவியல்):

மழை காலத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கானது ஆற்றுப் படுகைகளில் உள்ள மணலை எல்லாம் அடித்துக் கொண்டு போய்விடும். இங்கே மண் வளம் குன்றி நிலத்தடி நீர் உயராது அதை சரி செய்யும் பொருட்டு நம் முன்னோர்கள் கழி மண்ணில் விநாயகர் பெருமானின் உருவத்தை வடித்து அதை மூன்று நாள் கழித்து நீர் நிலைகளில் கழிப்பர்.

களி மண்ணானது நிலத்தினிடத்தே ஆழமாக பதிந்து நிலத்தடி நீரை பெருக்க வல்லது. மண் வளமும் அதிகரித்து தாவிரங்களை செழிப்பூட்டும். இதனால்தான் நம் முன்னோர்கள் ஆடி மாதம் முடிந்து மழை காலத்தின் தொடக்க காலமான ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தியை அமைத்தனர்.

அது ஏன் 3 நாட்கள் கழித்து கறைக்கிறார்கள்?

ஈரமானக் களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு அடித்து செல்லப்படும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து தங்கிவிடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீா் பிரச்சனையைத் தீர்க்கும். இதனால் தான் நமது முன்னோர்கள் விநாயகர் சிலைகளை ஆற்றில் மட்டும் கரைத்து வந்தனர்.

களி மண்ணில் மட்டுமே விநாயகர் சிலை செய்வோம்:

எனவே நமது முன்னோர்கள் வழியில் இனி களி மண்னில் மட்டுமே விநாயகர் சிலை செய்வோம் அதை ஆற்றில் மட்டுமே கறைப்போம். சாயங்களும் கெமிக்கலும் உபயோகித்து நமது முன்னோர்களின் ஆலோசனையை திரித்து நீர்நிலைகளை மாசு படுத்தாமல் வலத்தை பெறுக்குவோம்!


நல்லது எதைச் சொன்னாலும் மனிதனானவன் கேட்பதில்லை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் அதில் ஆன்மீகத்தை புகுத்தி மனிதனை அறப்படுத்தினர்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

Thursday, August 24, 2017

வெறும் தரையில் படுத்து உறங்கக்கூடாது ஏன்?

நம் உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். தரையில் படுத்தால் பூமியின் குளிர்ச்சியால் நம் உடல் வெப்பம் குறையும் எனவே உடல் வெப்பத்தை அதிகரிக்க அளவுக்கு அதிகமாக சர்க்கரை மற்றும் ஆக்சிஜனைப் பயன்படுத்தும். எனவே உடலில் தசைநார்களில் சேர்த்துவைக்கப்பட்டுள்ள கிளைக்கோஜன் எனும் சர்க்கரை தேவையில்லாமல் செலவாகும்.



மேலும் நுரையீரல் அதிகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே வீசிங் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

எனவே எப்போது படுத்தாலும் வெறும் தரையில் படுக்க வேண்டாம். ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதில் படுக்கவும். தியானம், யோகா போன்ற பயிற்சிகள் செய்யும்போது வெறும் தரையில் செய்யக்கூடாது. மனித உடல் சக்தி வடிவமானது. இந்த உடலை சூட்சும சரீரத்தில் உள்ள சக்கரங்களே இயக்குவதாக ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் உள்ள அனைத்து இயந்திரங்களும் சக்கரத்தின் வழியாக நகர்வதைப் போல மனிதனின் வளர்ச்சிக்கு அவனுள் உள்ள ஏழு சக்கரங்களே உதவி புரிகின்றன. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் என்ற ஏழு சக்கரங்களும் மனிதனை ஒரு பரிணாமத்தில் இருந்த மற்றொரு பரிணாமத்திற்கு இட்டுச் செல்கின்றன.

முன்னோர் வார்த்தைகள் எந்த ஒரு காரியமும், காரணமின்றி இருக்காது. அது போலத்தான் முன்னோர்களின் சொற்களிலும், செயல்களிலும் ஒரு அர்த்தம் இருக்கும். ஜபம் செய்யும் போதும், தியானம் செய்யும் போதும், உணவு அருந்தும் போதும், வெறும் தரையில் உட்கார்ந்து கொள்ளக்கூடாது. பொதுவாக வெறும் தரையில் படுத்து உறங்கக்கூடாது. மேலும், இடது கையை நிலத்தில் ஊன்றிக் கொண்டும், நின்று கொண்டும், படுத்துக் கொண்டும், சாப்பிடக்கூடாது என தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.

வீட்டில் மின்சாரக்கம்பி முதலியவற்றை தொடும் போது ஷாக் அடிக்கிறது. ஷாக் அடிக்காமல் இருக்க எல்லா வீடுகளிலும் கைக்கு உறை போடுவதில்லை. உடனே வீட்டில் உள்ள மனைப்பலகையை கீழே போட்டு மின்சார ஒயரைத் தொட்டு பழுது பார்க்கிறோம். இரும்பு நாற்காலியை பயன்படுத்தாமல் மரப்பலகையை ஏன் போட்டுக் கொள்கிறோம் என்றால், அது மின் கடத்தாப் பொருள் மின் அதிர்ச்சி மின்சாரத்தை தொடுவதால் அதிர்ச்சி ஏற்படக் காரணம், மின்சாரம் உடல் வழியாக மண்ணுக்குள் ஊடுருவி நம்மை அதிர்வடையச் செய்கிறது. இதனை மின்கடத்தாப் பொருளாக இருக்கக்கூடிய காய்ந்த மரப் பலகையை கொண்டு தடுத்துக்கொள்கிறோம்.

அதுபோலவே நம் உடலில் உள்ள சக்தி வெளியேறாமல் இருக்கவே முன்னோர்கள் வெறும் தரையில் படுத்துறங்கக் கூடாது என்று கூறியுள்ளனர். உடல் என்னும் சக்தி, உடம்பு, உணவால் ஆன பிண்டம். உணவு உயிருக்கு சக்தி தரும். ஜபம் செய்யும் போது உடலுக்கு சக்தி தரும். ஆகாரம் உண்ணும் போதும் சக்தி பெறப்படுகிறது. அச்சக்தி நிலத்தில் இறங்காமல் இருக்க சக்தியை கடத்தாத மனைப்பலகை, மான் தோல், புலித்தோல்,  தர்பாசனம் ஆகியவற்றில் அமர்தல் தொன்மையான பழக்கமாக இருந்து வந்துள்ளது.

எப்படி உறங்குவது? 

வெறும் தரையில் படுத்தால் நாளைடைவில் உயிர்சக்தியானது குறைந்து உடல் பலம் இழக்கிறது. எனவே உறங்கும் போது உடலில் உயிர்ப்புறும் சக்தி நிலத்தில் இறங்காமல் இருக்க ஒரு துணியையாவது விரித்தே படுக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இதனை இலக்கியங்களும், ஜைனர் குகைக்கோவில் படுகைகளும் நிறுவுகின்றன. நம் உடல் நலம் கருதி அமைந்த இந்த சாஸ்திர வழக்கங்கள் அறிவியல் ரீதியானவையே எனவே குளிர்ச்சியாக இருக்கிறது என்று வெறும் தரையில் படுத்து உறங்குவது ஆபத்தானது என்று கூறியுள்ளனர் முன்னோர்கள்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

Friday, August 18, 2017

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.



முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது.

அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.

பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள்.

ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?

தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.

#கருவறையில் 10 மாதம்
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.

#கடல்_நீர்
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.

#வெளியேறும்_வழி
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.

#மொட்டை_போடாவிட்டால்?
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

#நேர்த்திக்கடன்
இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.

#மூன்று_வயதில்_ஓர்_மொட்டை
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.

#ஆன்மீக_ரீதிக்கே_மரியாதை
நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர். எப்படியோ, இப்போதாவது உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டோமே. அதுவே போதும்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...


Friday, August 11, 2017

கந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன?

சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு.


அது ஒரு பங்குச்சந்தை வியாபார நிறுவனமாக இருந்ததால் மார்க்கெட்டிங் வேலை மிக முக்கியமானதாக இருந்தது. பங்குச்சந்தை மார்க்கெட்டிங் என்றால் சாதாரனம் இல்லை. உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் முழித்திருக்கும் போதே உங்கள் சட்டைப்பையிலிருந்து எடுத்து நிறுவனத்திற்கு கொடுத்துவிட வேண்டும்.

இது குளோப்ளைசேஷன் மூலமாக வந்த புதிய வியாபார உத்தி. அது ஒரு புறம் இருக்கட்டும்.

தொழிலாள‌ர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதில் ஒன்று அதி டென்ஷனாகவே வாழும் நாம் மனதை எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது என்பதற்க்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுத்தார்.

இதை அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லி ஒரு ஆங்கிலேயரின் பெயரைச் கூறினார். மனோவியல் ரீதியாக அவர் கொடுக்கும் இந்தப் பயிற்ச்சி நல்ல பலனைக் கொடுத்தது என்றும் கூறி அதை செய்யச் சொன்னார்.

அவர் சொன்னதாவது:
முதலில் கண்களை மெதுவாக மூடிக்கொள்ளுங்கள்.

உங்கள் வாயால் இப்பொழுது மெதுவாகச் சொல்லுங்கள்...ஆங்கிலத்தில் துவங்கினார்..

மை ஐஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை நோஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை மௌத் இஸ் ரெலாக்ஸ்!

மை ஹான்ட்ஸ் ஆர் ரிலாக்ஸ்!
என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் ரிலாக்ஸ் படுத்தினார்.

இவற்றை சொல்லி முடித்து விட்டு இப்பொழுது கண்களை மெதுவாக திறங்கள். இப்பொழுது உங்கள் மனதும் உடலும் ரிலாக்ஸாக இருக்கிறதா?என்று எல்லோரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.

பிறகு நிகழ்ச்சி பற்றி எல்லோரிடைய கருதையும் கேட்டார்.

என் முறை வந்தது. நான் சொன்னேன்..."சார் இது என்ன பிரமாதம் இதை நான்குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே!" என்றேன்.

ஆச்சரியத்துடன் பார்த்த அவர் "அது எப்படி? எனக்குத் தெரிந்த வரை இது புதிய மனோவியல் முறை! இதை எப்படி நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்ய முடியும்" என்று கேட்டார்.

நான் சொன்னேன் "சார் நீங்க என்னவெல்லாம் சொன்னீர்களோ அது அனைத்தும் நான் சிறு வயது முதலே சொல்லும் கந்தர் சஷ்டி கவசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. உடலின் ஒரு அவயவம் விடாமல் தியானிக்கும் பயிற்ச்சியை அது ஆன்மீக ரீதியாக மிக அருமையாக கொடுக்கிறது" என்றேன்.

மிகவும் ஆர்வமாக இதைக் கேட்ட அவர் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனைப் பற்றி விளக்கமாக சொல்லச் சொன்னார்.

நானும் சொல்லத் துவங்கினேன்.

கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.

உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க‌!

விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க‌!

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க‌!

பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க‌!

கன்னமிரண்டும் கருனைவேல் காக்க‌!

என் இளங்கழுத்தை இனியவேல் காக்க‌! .

என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.

இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றிசொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.

இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.

மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா. இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.

இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது.

கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள்.

இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?

கிரகங்களின் மாற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை. ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் ச‌ரிசெய்யும்வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்ப்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.

இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான‌ நன்மைகள் உள்ளன.

ஆனால் ஆராயாமலே தற்க்காலத்தில் எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு மடையர்களுக்கு இது புரிவது சாத்தியமில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவே கூட இருப்பதில்லை என்பதே உண்மை.

ஆகையால் இந்து தர்மத்தில் சொல்லப்படும் பல அறிவியல் மற்றும் மனோரீதியான சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் நீங்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள். ஆகையால் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்". இவ்வாறு சொன்னவுடன் பயிற்சியாளர் மிகவும் மகிழ்ந்து என்னைப் பாராட்டினார்.

அவரும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதில் உள்ள நன்மைகளை ஏற்றுக் கொண்டார். நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாமே!


வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

Thursday, August 3, 2017

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்?

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது?



கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகிறோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன்படுத்தும் போது தீமையும், சில விரல்களை பயன்படுத்தும்போது அதீத நன்மைகளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பிட்டுள்ள‍ வரிகளில் உள்ள‍ முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.


பயன்படுத்த உகந்த விரல்கள்:

மோதிர விரல்:
மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.

மோதிர விரல் – கட்டை விரல்:
மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்.


தவிர்க்க வேண்டிய விரல்கள்:

கட்டை விரல்:
கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.

ஆள் காட்டி விரல்:
ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் பொருட்கள் நாசம்.

நடுவிரல்:
நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் நிம்மதியின்மை.

சுண்டு விரல்:
சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...