Wednesday, August 30, 2017

விநாயகர் சதுர்த்தி மண் வளத்தை மேன்மைப்படுத்தும் யுக்தியா?

நமது முன்னோர்கள் எதைச் செய்தாலும் அது நமது சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவே இருக்கும்:

விநாயகர் சதுர்த்தி விழா நாம் 16 ஆம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடி வருகிறோம். அதுவும் ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதத்தில் கொண்டாடி மகிழ்கிறோம். இதில் உள்ள ஐதீகம் மற்றும் அறிவியலை நாம் இப்பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.



விநாயகர் சதுர்த்தி ஐதீகம்:

விநாயகர் சதுர்த்தி ஆரம்பித்த மூன்றாவது நாளில் விநாயகர் விக்கிரஹங்கள் நீர் நிலைகளில் கரைக்கப்படும். இதை நாம் விநாயக மூர்ட்த்தி தனது தாயுடம் ஐக்கியம் ஆகிவிட்டதாக என்பதை கூறி ஒவ்வொரு பிள்ளையும் தனது தாயை போல தர்ம நெறியில் சிறந்து விளங்க வேண்டும் என்று நமக்கு பாடம் புகட்டினர்.

மெய்ஞானம் இன்றி சனாதனமா? (அறிவியல்):

மழை காலத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கானது ஆற்றுப் படுகைகளில் உள்ள மணலை எல்லாம் அடித்துக் கொண்டு போய்விடும். இங்கே மண் வளம் குன்றி நிலத்தடி நீர் உயராது அதை சரி செய்யும் பொருட்டு நம் முன்னோர்கள் கழி மண்ணில் விநாயகர் பெருமானின் உருவத்தை வடித்து அதை மூன்று நாள் கழித்து நீர் நிலைகளில் கழிப்பர்.

களி மண்ணானது நிலத்தினிடத்தே ஆழமாக பதிந்து நிலத்தடி நீரை பெருக்க வல்லது. மண் வளமும் அதிகரித்து தாவிரங்களை செழிப்பூட்டும். இதனால்தான் நம் முன்னோர்கள் ஆடி மாதம் முடிந்து மழை காலத்தின் தொடக்க காலமான ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தியை அமைத்தனர்.

அது ஏன் 3 நாட்கள் கழித்து கறைக்கிறார்கள்?

ஈரமானக் களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு அடித்து செல்லப்படும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து தங்கிவிடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீா் பிரச்சனையைத் தீர்க்கும். இதனால் தான் நமது முன்னோர்கள் விநாயகர் சிலைகளை ஆற்றில் மட்டும் கரைத்து வந்தனர்.

களி மண்ணில் மட்டுமே விநாயகர் சிலை செய்வோம்:

எனவே நமது முன்னோர்கள் வழியில் இனி களி மண்னில் மட்டுமே விநாயகர் சிலை செய்வோம் அதை ஆற்றில் மட்டுமே கறைப்போம். சாயங்களும் கெமிக்கலும் உபயோகித்து நமது முன்னோர்களின் ஆலோசனையை திரித்து நீர்நிலைகளை மாசு படுத்தாமல் வலத்தை பெறுக்குவோம்!


நல்லது எதைச் சொன்னாலும் மனிதனானவன் கேட்பதில்லை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் அதில் ஆன்மீகத்தை புகுத்தி மனிதனை அறப்படுத்தினர்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...