Wednesday, October 25, 2017

உண்ணா நோன்புடன் கூடிய சஷ்டி விரதம் - ஆரோக்கியம் வளர்க்கும் ஆறுநாள்

வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும்.

நமது உடலை இயக்கும் 'உயிர்சக்தி' மூன்று சக்திகளாக பிரிந்து வேலை செய்து வருகிறது. உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதை துல்லியமாக செய்து முடிக்கும்.

இது தான் அந்த மூன்று சக்தி
  1 - செரிமான சக்தி
  2 - இயக்க சக்தி
  3 - நோய் எதிர்ப்பு சக்தி

இதில் ஒவ்வொன்றாக எப்படி வேலை செய்கிறது என்று சிறிய உதாரணத்துடன் பார்க்கலாம்.

காய்ச்சலின் போது உங்களுக்கு பசிக்குமா? பசிக்காது, உடலின் செரிமான சக்தி வேலை செய்யாது. காய்ச்சலின் போது உங்களால் வேலை செய்ய முடியுமா? முடியாது, உடல் இயக்க சக்தியை குறைத்துக்கொள்ளும். எனவே இந்த இரண்டு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றிவிடும்.

மதியம் அதிக உணவு எடுத்துக்கொண்டீர்கள், உடனடியாக வேலை செய்ய முடியுமா? முடியாதல்லவா, உடல் இயக்கம் சக்தியை குறைத்துக்கொள்ளும், நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யாது. இப்பொழுது செரிமானம் மட்டுமே வேலை செய்யும்.

உண்ணா நோன்பு இருக்கிறீர்கள். செரிமான சக்திக்கு வேலை இருக்கிறதா? இல்லை. இயக்க சக்தியையும் குறைத்துக்கொள்வோம். இப்பொழுது செரிமானம் மற்றும் இயக்க சக்திகளுக்கு வேலை இல்லாததால், இதன் சக்திகள், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி நமது உடலில் உச்சி முதல் பாதம் வரை, எங்கு? என்ன? பிரச்சனை இருந்தாலும் குணப்படுத்திவிடும்.

இப்படி மூன்று சக்திகளும் அந்தந்த நேரத்தில், மற்ற இரண்டு சக்திகளிடம் இருந்து சக்தி பெற்று, மாறி மாறி வேலை செய்து கொண்டே இருக்கும்.

உடல் முதல் முக்கியத்துவம் செரிமானத்திற்கு கொடுப்பதால் ஒவ்வொறு முறை நாம் உணவு எடுக்கும் போது, உடல் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை விட்டுவிட்டு, சக்தி செரிமானத்திற்கு வந்துவிடும். ஏனென்றால் வெளியில் இருந்து ஒரு பொருள் வருகிறது, அது என்ன ஏது என உடல் பார்த்து சீரமைக்க வேண்டும்.

உண்ணா நோன்பு இருக்கும் போது செரிமான சக்திக்கு அதிக வேலை இருக்காது, எனவே இதன் சக்தியும், ஓய்வில் இருத்தால் இயக்க சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக உருமாறும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது.

உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை.

இதற்காக நமது முன்னோர்கள் வருடத்தில் ஆறு நாள் தேர்வு செய்து வைத்துள்ளார்கள். அந்த ஆறு நாளும் ஆறுமுகனை மையப்படுத்தி அழகான ஒரு திருவிழாவாக வடிவமைத்து உள்ளார்கள்.

ஆம், அது தான் தீபாவளி முடிந்து வரும் மறைமதியை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படும் 'கந்த சஷ்டி விழா'. கந்த சஷ்டி விழா என்றாலே நமது நினைவிற்கு வருவது 'சஷ்டி விரதம்' தான்.

உண்ணா நோன்பு மற்றும் கந்தர் விழாவின் ஆறுநாள்.

'செரிமான சக்தி' தான் 'முருகனின் தாய்'. 'நோய் எதிர்ப்பு சக்தி' தான் 'முருகன்'. 'நோய்' தான் 'அரக்கன்'. வெளியில் நடக்கும் அதே போர் உங்கள் உடலிலும் நடக்கிறது.

இந்த விழாவில் எப்படி 'முருகப்பெருமான்' தனது தாயிடம் இருக்கு சக்தி பெற்று அசூரனை வதம் செய்கிறாறோ, அதேப்போல் நமது உடலில் உள்ள 'நோய் எதிர்ப்பு சக்தி' தனது தாயான செரிமான சக்தியிடம் இருந்து சக்தி பெற்று நோய்களை வதம் செய்கிறது.

வெளியில் முருகனுக்கும், அரக்கனுக்கும் நடக்கும் அதே போர் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க்கும் நடக்கிறது. இறுதியில் வெல்வது யார் என்று உலகிற்கே தெரியும்.

எப்படி ஒவ்வொரு நாளும் 'முருகன்' சக்தி பெற்று ஆறாவது நாள் அசூரனை வதம் செய்கிராறோ, அதேப்போல் தான் ஒவ்வொரு நாளும் நமது 'நோய் எதிர்ப்பு சக்தி' வலிமையடைந்து 'டெங்கு போன்ற எந்த வைரஸ் கிருமிகள், நோய்கள் இருந்தாலும் வதம் செய்துவிடும்.

உடலில் நடக்கும் இந்த அறிவியல் உண்மையை நமக்கு சூட்சமமாக சொல்லவோ என்னவோ, ஆறு நாட்களையும் 'உண்ணா நோன்புடன்' அழகான விழாவாக வடிவமைத்துள்ளார்கள்.

சரி, எப்படி உண்ணா நோன்பு இருப்பது?
1 - உங்கள் ஊர் வழக்கப்படி இருக்கலாம்.
2 - சமய முறைப்படி இருக்கலாம்.
3 - ஆறு நாளும் தண்ணீர் மட்டும் குடித்து இருக்கலாம்.
4 - ஆறு நாளும் பாலும், பழமும் மட்டும் உண்டு இருக்கலாம்.
5 - ஆறு நாளும் பழங்களை மட்டும் உண்டு இருக்கலாம்.

இதில் உங்களுக்கு பழக்கம் இருக்கும் முறை எதுவோ, அந்த முறைப்படி இருக்கலாம்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரிந்துரைக்கப்படும் எளிய முறை என்னவென்றால்...

பசித்தால் தண்ணீர் மட்டும் குடித்து வாருங்கள், பசி அடங்கிவிடும். திரும்ப பசித்தால் திரும்ப தண்ணீர் குடியுங்கள், பசி அடங்கிவிடும். திரும்ப பசித்தால் திருப்ப தண்ணீர் குடியுங்கள், பசி அடங்கிவிடும்.

இது தொடரட்டும். ஒரு கட்டத்தில் பசிக்கும் போது தண்ணீரை கண்டாலே உங்களுக்கு பிடிக்காது, குடிக்கவும் முடியாது, எதாவது சாப்பிட தோன்றும் அப்பொழுது உங்களுக்கு பிடித்த பழங்களை ரசித்து ருசித்து உமிழ்நீர் கலந்து சாப்பிடுங்கள்.

திரும்ப பசிக்கும் போது பழங்களை அதேப்போல் ரசித்து ருசித்து சாப்பிடலாம். வேளை கணக்கு எல்லாம் கிடையாது. பசிக்கும் போது சாப்பிடலாம். இதேப்போல் ஆறு நாட்களும் இறைவன் சமைத்த உணவை மட்டும் சாப்பிட்டு வரலாம்.

இறைவன் சூரிய அடுப்பை கொண்டு சமைத்த உணவான பழங்களை நாம் அதிகம் சாப்பிட இந்த ஆறு நாள் நமக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைகிறது.

வேலைக்கு செல்வோருக்கு, வேறு உணவு தேவைப்பட்டால், தேங்காய், வேர்கடலை சாப்பிடலாம், இதனால் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும்.

எதையெல்லாம் நாம் சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியுமோ அதை எல்லாம் சாப்பிடலாம். பழங்கள், இளநீர், நாட்டு காய்கனிகள், தேங்காய், வேர்கடலை என பச்சையாக சாப்பிடக்கூடிய உணவுகளை மட்டும் ஆறு நாட்கள் எடுக்கலாம்.

உடலில் பல்வேறு பிரச்சனை உள்ளவர்கள், ஆங்கில மருந்து எடுப்பவர்கள், நோயாளிகள், ஆறு நாள் பழங்களை மட்டும் எடுக்க முடியாதவர்கள் எல்லாம் தேவைப்பட்டால் இதனுடன் பட்டை தீட்டப்படாத அரிசி கஞ்சி, நீராகாரம், அவல், நாட்டு பசும் பால் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

நோன்பின் போது என்ன நடக்கலாம்?
ஆண்டுக்கணக்கில் தேங்கிய நச்சுக்கழிவுகள் வெளியேறலாம்.

*சிறுநீர் அடர்த்தி நிறமாக வெளியேறலாம்.
*மலம் கருப்பாக வெளியேறலாம்.
*சளி வெளியேறலாம்.
*உடல் ஓய்வு கேட்கலாம்.
*காய்ச்சல் வரலாம் (காய்ச்சல் ஒரு கொடை)
*வலிகளை உணரலாம்.

என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?
*அதிக உடல் எடை சீராகும்
*முகம் பொழிவு பெறும்
*கண்ணில் ஒளி வீசும்
*சுறுசுறுப்பு அதிகரிக்கும்
*இரத்தம் தூய்மை பெறும்
*தோலின் நிறம் சீராகும்
*மன உளைச்சல் குறையும்
*கவலை, பயம், கோபம் குறையும்
*புத்துணர்வு கிடைக்கும்
*உடல் பலம் பெறும்
*மன அமைதி பெறும்
*ஆழ்ந்த தூக்கம் வரும்.... இன்னும் பல....


ஆக மொத்தத்தில், உடலில் ஆரோக்கியமும்! எண்ணத்தில் அழகும்! மனதில் நிம்மதியும்! கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்காத இன்னும் பல எண்ணிலடங்கா அதிசயங்கள் நிகழலாம்.
கந்தன், அரக்கனை அழிப்பது போல், உடல், உங்கள் அனைத்து பிரச்சனைகளை அழித்துவிடும்.

நமது பண்பாட்டையும், உடல், மன ஆரோக்கியத்தையும் பிரித்தே பார்க்க முடியாது. இவை இரண்டும் ஒன்றிற்கொண்டு பின்னிபினைந்தவை. பினைக்கப்பட்டவை.

உடலின் பேராற்றலை புரிந்து, அதன் அற்புத புதையல் கொண்ட அறிவியல் உண்மைகளை, அழகான திருவிழாவாக நமக்கு வடிவமைத்து தந்த நமது முன்னோர்களுக்கு கோடி நன்றிகளை சொல்ல நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

உலகில் மிகச்சிறந்த மருந்துவர் - உங்கள் உடல்.

உலகில் மிகச்சிறந்த மருத்துவம் - உண்ணாநோன்பு.

*உண்ணாநோன்பு இருப்போம் – ஆரோக்கியமாக வாழ்வோம்*

கந்த சஷ்டி தின வாழ்த்துக்கள்!!!

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

Friday, October 20, 2017

சித்திரை 1, ஆடி1, தை1 எல்லாம் விழாவாக கொண்டாடுறது ஏன்!!!

சித்திரை 1, ஆடி1, தை1 எல்லாம் விழாவாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்...

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியல் வச்சிறுக்காங்க....!!!
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" னு school பசங்களுக்கு சொல்லிதறோம்....

என்னைக்காச்சும் ஒரு #compass வச்சு சூரியன் உதிக்குறப்போ check பன்னி இருக்கோமா???!!! கண்டிபாக இல்ல...

நம்ம education system அ design பன்னினவன், நம்ம கிட்ட இருந்த அறிவியல் அ அழிச்சிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்திட்டு போயிறுக்கான்றதுக்கு இதுவும் ஒரு சான்று....

ஆமாங்க சூரியன் ஒரு குறிப்பிட்ட நாள்ல மட்டும் தான் exact ah கிழக்கே உதிக்கும்.... 

அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு extreme point la, மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்... அப்பறம் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி correct ஆ கிழக்கு ல ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் correct ஆ கிழக்குக்கு வர ஆகிற time., Correct ah "1 year"...!!!!

சரி... இதுக்கும் தமிழ் மாததுக்கும் என்ன சம்பந்தம் னு தானே யோசிக்குறீங்க....

சூரியன் correct ah கிழக்கு ல start ஆகுற நாள் தான் #சித்திரை1.., புத்தாண்டு...!!! (In science it is called Equinox)

அப்புறம் extreme வடகிழக்கு point தான் #ஆடி1 .... (solstice)

மறுபடியும் கிழக்குக்கு வரது #ஐப்பசி1 (equinox)

Going to extreme தென்கிழக்கு is #தை1 (solistice)

இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

சித்திரை (equinox) - புத்தாண்டு
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு, ஆடிப்பெருக்கு
ஐப்பசி (equinox)- தீபாவளி
தை (winter solstice) - பொங்கல்


நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...


Thursday, October 12, 2017

தலையாட்டி பொம்மையும்..!! தஞ்சை பெரியகோவிலும்..!!

தலையாட்டி பொம்மைக்கும் தஞ்சை பெரியகோவிலுக்கும், தஞ்சாவூர்ல அந்த பொம்மை தயாரிக்கப்படுதுங்குறத விட வேற என்ன தொடர்பு??

இருக்கு... இந்த சாதாரண தலையாட்டி பொம்மைக்குள்ள ஒரு தத்துவத்தையே ஒளிச்சு வச்சிருக்காங்க!

களிமண்ணை வைத்து செய்யப்படும் இந்த தஞ்சாவூர் பொம்மைகள் மிகவும் பாரம்பரியமானவை!

கொட்டங்கச்சி  எனப்படும் தேங்காயின் பாதி சிரட்டையின் மேல் களிமண்ணால் செய்யப்பட்ட ராஜா ராணியின் உருவ பொம்மைகளை வைத்து செய்யப்படுகிறது

அந்த பொம்மையோட அடிப்பகுதி கொட்டாங்கச்சியால் செய்யப்பட்டு களிமண்ணால் நிரப்பியிருப்பார்கள் அப்படி செய்யப்பட்டுள்ள பொம்மையை தரையில் வைத்து எந்த பக்கம் சாய்த்தாலும் அது திரும்பவும் ஆடி ஆடி கடைசியாக நேராகிவிடும். !

இதுக்கும் பெரிய கோவிலுக்கும் என்ன சம்மந்தம் தெரியுமா.!

நம்ம பெரிய கோவிலில் சமீபத்தில் தண்ணீர் பற்றாக்குறைக்காக போர் போடுவதற்காக ஆழ்துளை கிணறு தோண்டிருக்காங்க...!

தோண்ட தோண்ட களிமண்ணோ, செம்மண்னோ வரவில்லை ஒருவகையான மணல் வந்திருக்கிறது.

அந்த மணல் காட்டாறுகளில் காணப்பட கூடிய மணல். சாதரண ஆற்று மணலுக்கும் அந்த மணலுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கு.

சாதாரண ஆற்று மணலை விட, காட்டாறுகளில் காணப்படும் மணல் பாறைத்துகள்கள் அதிகம் நிறைந்தது, மேலும் சாதாரண மணலை காட்டிலும் கடினமானது.

கோவிலை கட்டுவதற்குமுன் அந்த மணலை கொண்டு அடியில் நிரப்பியிருக்கிறார்கள். இந்த தகவலை அறிந்த அதிகாரிகள் போர் போடும் வேலையை உடனடியக நிறுத்திவிட்டார்கள்!

ஏனென்றால் ஆயிரம் வருடங்களாக இந்த பூமியில் ஏற்படும் அழுத்தங்களை தாங்கி, நான்கு புறமும் அகலிகளால் சூழப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் அந்த உலக அதிசயத்தின் அஸ்திவாரமே அதுதான்!

இவ்ளோ பெரிய கோவிலுக்கு மணலை கொண்டு அஸ்திவாரம் அமைக்க சோழ தேச பொறியாளர்கள் என்ன முட்டாளா?

அந்த அதி அற்புத தத்துவமும், சோழர்களின் அறிவின் உச்சமும் அங்குதான் வெளிப்படுகிறது!

அகலிகளால் சூழப்பட்டுள்ள தீவுபோன்ற அமைப்பில் காட்டாற்று மணல் அஸ்திவாரம் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் அந்த மாபெரும் கற்றளியானது எத்தகைய பூகம்பங்கள் வந்தாலும் அந்த மணல்பரப்பின் மீது அமைக்கப்பட்டிருப்பதால் தன்னுடைய நிலை தடுமாறினாலும் தானே தன்னை நேராகிக்கொள்ளும் ஆற்றலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது!

இப்போது அந்த தலையாட்டி பொம்மையை நினைவில் கொள்ளுங்கள்.

அந்த பொம்மையை சாய்த்துவிட்டால் எப்படி கீழே உள்ள கனமான அடிப்பரப்பால் ஆடி ஆடி நேராகி விடுகிறதோ அதே போல பெரிய கோவிலும் எவ்வளவு பெரிய  பூகம்பத்தால் அசைய நேரிட்டாலும்  தானாகவே சமநிலைக்கு வந்துவிடும்!

சோழ தேச விஞ்ஞானிகளின் அறிவிற்கு உலகில் வேறு எவரும் ஈடாகார் என்பதற்கு இது ஒன்று மட்டுமே சான்று!

பைசாவின் சாய்ந்த கோபுரம் உலகின் அதிசயமான கட்டிடமாக கருதப்படும் இந்த உலகில், தன்னை தானே நேராக்கி கொள்ளும் தஞ்சை பெரியகோவில் தமிழர்களின் அடையாளம்...

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை



Collected from Social Media...

Saturday, October 7, 2017

ஏன் சபரிமலைக்கு பெண்கள் போக தடை விதிக்கப்படுகின்றது?


குழந்தை பருவ பெண்களும், வயது முதிர்ந்த பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும் இல்லை. இதன் காரணம் என்ன? அதை ஆன்மீக வாதிகள் என்று சொல்லும் நாம் முதலில் உணர்தல் வேண்டும். மனித உடலில் யோக சக்தி என்பது மனிதனின் உடலில் கீழ் இருந்து மேல்நோக்கி செயல்பட வேண்டும். மேலிருந்து கீழ் நோக்கி செயல்படக் கூடாது. "மூலாதாரத்தில்" செயல்கள் இருக்கும் பொழுது ப்ராண சக்தியானது  உடலில் கீழ் நோக்கி பயணிக்கும். இந்நிலையில் ஆன்மீக எழுச்சி ஏற்படாமல் மன சிதறல்கள் ஏற்பட்டு, இது உடலையும் மனதையும் பாதிக்கும். இப் பாதிப்புகள் நமக்கு மட்டுமல்ல பிறருக்கும் பரவும்.

இதை தவிர்த்து தலைப்பகுதியான "துரியனில்" செயல்கள் (தலையின் உச்சியில் இருமுடிபை வைப்பதன் காரணம் இது தான் )இருந்தால் ப்ராணன் மேல் நோக்கி பயணித்து ஆன்மீக உயர்வுக்கு மேலும் வழிகாட்டும்...! இந்நிலையில் கருமுட்டையை தயார்படுத்துதல், கருப்பையில் அதை நிலைப்படுத்துதல் மற்றும் கருமுட்டையை உடைத்து வெளியேற்றுதல் என பெண்களின் கருப்பை மாதம் முழுவதும் செயல்படும் ஒர் புனிதமான உறுப்பு. அப்படி கருப்பை செயல்படும் சமயம் அதீதமான இறைசக்தி உள்ள இடத்திற்கு சென்றால், (அபாணன்) கீழ் நோக்கி செயல்படும் ப்ராணன் திடீரென மேல்நோக்கி செயல் படத்துவங்கும்.

இதனால் கருப்பை தன் செயல்பாட்டை இழந்து கருமுட்டையை வெளிப்படுத்தும் தன்மையை விட்டு மலட்டுத்தன்மைக்கு செல்லும் வாய்பு ஏற்படும். கோவிலுக்கு சென்றால் வளர்ச்சி என்பது தான் நடக்க வேண்டுமே தவிர அழிவு நடக்கலாமா? கருப்பை செயல்பாடுடைய பெண்கள் அனேகர் இத்தகைய இடத்திற்கு சென்றால் நம் எதிர்கால சந்ததிகள் என்ன ஆவது? இதனாலேயே நம் கோவில்களில் கூட சில இடங்களில் இளம் பெண்களை அனுமதிப்பதில்லை. சபரிமலையிலும் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் கருப்பை செயல்படும் நிலையில் அல்ல என்பதை ஏன் என்று புரிந்துகொண்டீர்களா?

சபரி மலையில் உள்ள பதினெட்டு படிகள் மிகவும் ஆன்மீக சக்தி நிறைந்த பகுதி. முழுமையான "ப்ராணன்" கொண்ட பகுதி. அதனால் தான் அந்த படிகளுக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. வேறு எந்த கோவிலிலும் படிக்கட்டுகள், கட்டிடங்களுக்கு வருடா வருடம் பூஜை செய்யமாட்டார்கள். இருமுடி கட்டி தலையில் சுமந்து அது அழுத்தம் கொடுத்தவண்ணம் தலையில் "ப்ராணன்" செயல்படும் நிலையில் அந்த படிக்கட்டுகளை அணுகினால் முழுமையான சக்திமாற்றம் ஏற்படும். இருமுடி கட்டாமல் கூட ஐயப்பனை தரிசனம் செய்யலாம். ஆனால் இருமுடிகட்டாமல் பதினெட்டாம் படியை தொட கூட அனுமதியில்லை. ஐயப்பனைவிட அந்த படிகள் அவ்வளவு உயர்ந்தவை. இவ்வாறு சபரிமலையில் பின்பற்றும் அனேக விஷயங்களில் நுட்மமான பின்புலம் உண்டு. இது புரியாமல் சபரிமலை பெண்களுக்கு எதிரானது என சில நாத்திகர்கள் வேண்டுமென்றே அறியாமையை வளர்க்கிறார்கள்.எனவே நாம் நமது மத கோட்பாடுகளையையும், ஆகம விதிகளையும் பின் பற்றி இந்த மானுட சமுதாயம் உயர் நிலையில் வாழ நாமும் பங்கு கொள்வோமாக.!
சுவாமி சரணம்! சுவாமி சரணம்!!


வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...