Saturday, October 7, 2017

ஏன் சபரிமலைக்கு பெண்கள் போக தடை விதிக்கப்படுகின்றது?


குழந்தை பருவ பெண்களும், வயது முதிர்ந்த பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும் இல்லை. இதன் காரணம் என்ன? அதை ஆன்மீக வாதிகள் என்று சொல்லும் நாம் முதலில் உணர்தல் வேண்டும். மனித உடலில் யோக சக்தி என்பது மனிதனின் உடலில் கீழ் இருந்து மேல்நோக்கி செயல்பட வேண்டும். மேலிருந்து கீழ் நோக்கி செயல்படக் கூடாது. "மூலாதாரத்தில்" செயல்கள் இருக்கும் பொழுது ப்ராண சக்தியானது  உடலில் கீழ் நோக்கி பயணிக்கும். இந்நிலையில் ஆன்மீக எழுச்சி ஏற்படாமல் மன சிதறல்கள் ஏற்பட்டு, இது உடலையும் மனதையும் பாதிக்கும். இப் பாதிப்புகள் நமக்கு மட்டுமல்ல பிறருக்கும் பரவும்.

இதை தவிர்த்து தலைப்பகுதியான "துரியனில்" செயல்கள் (தலையின் உச்சியில் இருமுடிபை வைப்பதன் காரணம் இது தான் )இருந்தால் ப்ராணன் மேல் நோக்கி பயணித்து ஆன்மீக உயர்வுக்கு மேலும் வழிகாட்டும்...! இந்நிலையில் கருமுட்டையை தயார்படுத்துதல், கருப்பையில் அதை நிலைப்படுத்துதல் மற்றும் கருமுட்டையை உடைத்து வெளியேற்றுதல் என பெண்களின் கருப்பை மாதம் முழுவதும் செயல்படும் ஒர் புனிதமான உறுப்பு. அப்படி கருப்பை செயல்படும் சமயம் அதீதமான இறைசக்தி உள்ள இடத்திற்கு சென்றால், (அபாணன்) கீழ் நோக்கி செயல்படும் ப்ராணன் திடீரென மேல்நோக்கி செயல் படத்துவங்கும்.

இதனால் கருப்பை தன் செயல்பாட்டை இழந்து கருமுட்டையை வெளிப்படுத்தும் தன்மையை விட்டு மலட்டுத்தன்மைக்கு செல்லும் வாய்பு ஏற்படும். கோவிலுக்கு சென்றால் வளர்ச்சி என்பது தான் நடக்க வேண்டுமே தவிர அழிவு நடக்கலாமா? கருப்பை செயல்பாடுடைய பெண்கள் அனேகர் இத்தகைய இடத்திற்கு சென்றால் நம் எதிர்கால சந்ததிகள் என்ன ஆவது? இதனாலேயே நம் கோவில்களில் கூட சில இடங்களில் இளம் பெண்களை அனுமதிப்பதில்லை. சபரிமலையிலும் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் கருப்பை செயல்படும் நிலையில் அல்ல என்பதை ஏன் என்று புரிந்துகொண்டீர்களா?

சபரி மலையில் உள்ள பதினெட்டு படிகள் மிகவும் ஆன்மீக சக்தி நிறைந்த பகுதி. முழுமையான "ப்ராணன்" கொண்ட பகுதி. அதனால் தான் அந்த படிகளுக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. வேறு எந்த கோவிலிலும் படிக்கட்டுகள், கட்டிடங்களுக்கு வருடா வருடம் பூஜை செய்யமாட்டார்கள். இருமுடி கட்டி தலையில் சுமந்து அது அழுத்தம் கொடுத்தவண்ணம் தலையில் "ப்ராணன்" செயல்படும் நிலையில் அந்த படிக்கட்டுகளை அணுகினால் முழுமையான சக்திமாற்றம் ஏற்படும். இருமுடி கட்டாமல் கூட ஐயப்பனை தரிசனம் செய்யலாம். ஆனால் இருமுடிகட்டாமல் பதினெட்டாம் படியை தொட கூட அனுமதியில்லை. ஐயப்பனைவிட அந்த படிகள் அவ்வளவு உயர்ந்தவை. இவ்வாறு சபரிமலையில் பின்பற்றும் அனேக விஷயங்களில் நுட்மமான பின்புலம் உண்டு. இது புரியாமல் சபரிமலை பெண்களுக்கு எதிரானது என சில நாத்திகர்கள் வேண்டுமென்றே அறியாமையை வளர்க்கிறார்கள்.எனவே நாம் நமது மத கோட்பாடுகளையையும், ஆகம விதிகளையும் பின் பற்றி இந்த மானுட சமுதாயம் உயர் நிலையில் வாழ நாமும் பங்கு கொள்வோமாக.!
சுவாமி சரணம்! சுவாமி சரணம்!!


வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...