Thursday, December 21, 2017

அகரத்தில் ஓர் இராமாயணம்

*ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?*

அகரத்தில் ஓர் இராமாயணம்


இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
*இதுவே தமிழின் சிறப்பு*

அனந்தனே அசுரர்களை அழித்து, அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான். அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம். அன்று அஞ்சனை அவனுக்கு அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன்? அவனே அறிவழகன், அன்பழகன், அன்பர்களை அரவணைத்து அருளும் அருட்செல்வன்! 

அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில் அரசனின் அரியவில்லை அடக்கி, அன்பும்அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான். அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய அனந்தராமனுக்கே! 

அப்படியிருக்க அந்தோ! அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும் அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு அனுப்பினாள். அங்கேயும் அபாயம்! அரக்கர்களின் அரசன், அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான். 

அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை அரசனாக அரியணையில் அமர்த்தினர்.  அடுத்து அன்னைக்காக அவ்வானவர் அனைவரும் அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர். அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து அளந்து அக்கரையை அடைந்தான்.

அசோகமரத்தின் அடியில், அரக்கிகள் அயர்ந்திருக்க அன்னையை அடிபணிந்து அண்ணலின் அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான். அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள் அநேகமாக அணைந்தன. அன்னையின் அன்பையும் அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன். 

அடுத்து, அரக்கர்களை அலறடித்து, அவர்களின் அரண்களை, அகந்தைகளை அடியோடு அக்கினியால் அழித்த அனுமனின் அட்டகாசம், அசாத்தியமான அதிசாகசம். 

அனந்தராமன் அலைகடலின் அதிபதியை அடக்கி, அதிசயமான அணையை அமைத்து, அக்கரையை அடைந்தான். அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின் அஸ்திரத்தால் அழித்தான். 

அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள். அன்னையுடன் அயோத்தியை அடைந்து அரியணையில் அமர்ந்து அருளினான் அண்ணல். 

அனந்தராமனின் அவதார அருங்கதை அகரத்திலேய அடுக்கடுக்காக அமைந்ததும் அனுமனின் அருளாலே.


*உலகில் எந்த மொழியாலும் அசைக்க முடியாத நம் தமிழ் மொழி *...

கல் தோன்றி மண் தோன்றா  காலத்துக்கு முன் தோன்றிய மூத்த  மொழி....

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

Friday, December 15, 2017

கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில் மட்டும் தான்...

வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை இந்து மதக் கடவுளுக்கு உண்டு. ஏனெனில்,

கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில் மட்டும் தான்...

1. தாயாக = அம்மன்
2. தந்தையாக = சிவன்
3. நண்பனாக = பிள்ளையார், கிருஷ்ணன்
4. குருவாக = தட்சிணாமூர்த்தி
5. படிப்பாக = சரஸ்வதி
6. செல்வமகளாக = லக்ஷ்மி
7. செல்வமகனாக = குபேரன்
8. மழையாக = வருணன்
9. நெருப்பாக = அக்னி
10. அறிவாக = குமரன்
11. ஒரு வழிகாட்டியாக = பார்த்தசாரதி
12. உயிர் மூச்சாக = வாயு
13. காதலாக = மன்மதன்
14. மருத்துவனாக = தன்வந்திரி
15. வீரத்திற்கு = மலைமகள்
16. ஆய கலைக்கு = மயன்
17. கோபத்திற்கு = திரிபுரம்எரித்த சிவன்
18. ஊர்க்காவலுக்கு = ஐயனார்
19. வீட்டு காவலுக்கு = பைரவர்
20. வீட்டு பாலுக்கு = காமதேனு
21. கற்புக்கு = சீதை
22. நன் நடத்தைகளுக்கு = ராமன்
23. பக்திக்கு = அனுமன்
24. குறைகளை கொட்ட= வெங்கடாசலபதி
25. நன் சகோதரனுக்கு = லக்ஷ்மணன், கும்பகர்ணன்
26. வீட்டிற்கு = வாஸ்து புருஷன்
27. மொழிக்கு = முருகன்
28. கூப்பிட்ட குரலுக்கு = ஆதி மூலமான சக்கரத்தாழ்வார், மாயக் கிருஷ்ணன்
29. தர்மத்திற்கு = கர்ணன்
30. போர்ப்படைகளுக்கு = வீரபாகு
31. பரதத்திற்கு = நடராசன்
32. தாய்மைக்கு = அம்பிகை
33. அன்னத்திற்கு = அன்ன பூரணி
34. மரணத்திற்கு = யமன்
35. பாவ கணக்கிற்கு = சித்திரகுப்தன்
36. பிறப்பிற்கு = பிரம்மன்
37. சுகப் பிரசவத்திற்கு = கர்ப்ப ரட்சாம்பிகை

யானையை பிள்ளையாராய் பிடித்து
சேவலை முருகன் கொடியில் வைத்து
காளையை நந்தியாக அமர்த்தி
பசுவை கோமாதாவாக வணங்கி
சிங்கத்தை சக்தியின் வாகனமாக்கி
புலியை ஐயப்பனின் நண்பனாக்கி
பாம்பை சிவனுக்கு மாலையாக்கி
கருடனை பெருமாளின் மகிழுந்தாக்கி
எருமையை எமனின் தேராக்கி
குரங்கை அனுமனாக கும்பிட்டு
நாயை பைரவனாக பார்த்து

கும்பிடும் கூட்டமய்யா நாங்கள்  !!

இந்துவாய் பிறந்தமைக்கு பெருமைப் பட்டுக் கொள்வோம் !!!!

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

Friday, December 8, 2017

இடி இடிக்கும் போது #அர்ஜுனா_அர்ஜுனா# என்பதில், அறிவியல் காரணமா !?

நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள். 

உண்மையில், உண்மையான அறிவியல் காரணம் என்ன தெரியுமா?



இடி பலமாக இடிக்கும் போது, சிலரது காது அடைத்து ஙொய்ங் என்று சத்தம் வரும்.

இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும். காது அடைக்காது.

#அர்# என்று சொல்லும் போது, நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும்.

#ஜு# என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறும்.

#னா# என்னும் போது, வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும்.

இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது.

அதற்குத்தான் அர்ஜுனா வை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள்.

அர்ஜுனன் கிருஷ்ண பக்தன் என்பதால், அவன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்ற ஆன்மிக காரணத்துடன், காது அடைத்து விடக்கூடாது என்ற அறிவியல் காரணமும் இதில் புதைந்து கிடக்கிறது.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

Saturday, December 2, 2017

அகல் விளக்கில் நவகிரஹ தத்துவமா !!!

கோயில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம்.

இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம் .

1). அகல் விளக்கு = *சூரியன்*
2.) நெய்/எண்ணெய்-திரவம் = *சந்திரன்*
3.) திரி = *புதன்*
4). அதில் எரியும் ஜ்வாலை = *செவ்வாய்*
5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = *ராகு*
6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = *குரு*
7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = *சனி*
8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = *கேது*
9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = *சுக்கிரன்* (ஆசை);  அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம்.

இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...