Monday, April 30, 2018

தமிழர்களின் ஐந்திணைகள்

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தாங்கள் வாழும் நிலத்தை ஐந்து வகையாக பிரித்துவிட்டார்கள்.



திணைக்கடவுள்கள் பற்றி தொல்காப்பியம்,

'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே' என்கிறது.

தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்கள் இருந்துள்ளமை தெளிவாகின்றது. 

காலப்போக்கில் முல்லையும், குறிஞ்சியும் முறைமுறை திரிந்து, நல்லியல்பு இழந்து, வெம்மையால் வளமை குன்றிப் போயுள்ள நிலத்தைப்   ‘பாலை' எனப் பெயரிட்டனர். இதன்பின்தான் நால்வகை நிலங்கள், ஐவகை நிலங்களாகவும், ஐந்திணைகளாகவும் பெயர் பெற்றன. பாலை பிறந்த கதையைச் சிலப்பதிகாரத்தில் காண்போம்.

     'முல்லையும், குறிஞ்சியும், முறைமையின் திரிந்து
      நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்துப்
      பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்.' 
                                                                           –(காடுகாண் காதை 11: 64-66)     


1. குறிஞ்சித் திணை

முதற்பொருள்

நிலம் - மலையும் மலையைச் சார்ந்த இடமும்

பொழுது -  

அ) பெரும்பொழுது - கூதிர்காலமும், முன்பனிக்காலமும்
ஆ) சிறு பொழுது - யாமம்

கருப்பொருள்கள்

1. தெய்வம் – சேயோன் (“சேயோன் மேய மைவரை உலகமும்”)

2. உணவு - ஐவன நெல் (மலை நெல்), தினை, மூங்கிலரிசி, கிழங்கு

3. விலங்கு - புலி, யானை, கரடி, பன்றி

4. மரம் - அகில், ஆரம், தேக்கு, வேங்கை

5. பறவை - கிளி, மயில்

6. பறை - முருகியம், தொண்டகப் பறை

7. தொழில் - தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், தினை விதைத்தல், வேட்டையாடுதல்

8. யாழ் - குறிஞ்சி யாழ்

9. பண் - குறிஞ்சிப் பண்

10. ஊர் - சிறுகுடி, குறிச்சி

11. நீர் - அருவி நீர், சுனை நீர்

12. மலர் - காந்தள், வேங்கை, குறிஞ்சி

உரிப்பொருள்

புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (நிமித்தம் = காரணம்)


2. முல்லைத் திணை

முதற்பொருள்

நிலம் - காடும் காட்டைச் சார்ந்த இடமும்

பொழுது -

அ) பெரும்பொழுது : கார்காலம்
ஆ) சிறுபொழுது : மாலை

கருப்பொருள்கள்

1. தெய்வம் – மாயோன் (” மாயோன் மேய காடுறை உலகமும்”)

2. உணவு - வரகு, சாமை

3. விலங்கு - மான், முயல்

4. மரம் - தோன்றி, காயா, பிடவம், குருந்தம்

5. பறவை - காட்டுக்கோழி, சேவல்

6. பறை - ஏறுகோட் பறை

7. தொழில் - ஆநிரை மேய்த்தல், ஏறு தழுவல்

8. யாழ் - முல்லை யாழ்

9. பண் - குறிஞ்சிப் பண்

10. ஊர் - பாடி, சேரி

11. நீர் - குறுஞ்சுனை, கான்யாறு

12. மலர் - முல்லை, குல்லை, தோன்றி, பிடவம்

உரிப்பொருள் 

இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.


3. மருதத் திணை

முதற்பொருள்

நிலம் - வயலும் வயல்சார்ந்த இடமும்

பொழுது -

அ) பெரும்பொழுது - ஆண்டு முழுதும்
ஆ) சிறுபொழுது - வைகறை, விடியல்

கருப்பொருள்கள்

1. தெய்வம் - இந்திரன் (வேந்தன் மேய தீம்புனல் உலகமும்)

2. உணவு - செந்நெல், கரும்பு

3. விலங்கு - எருமை, நீர்நாய்

4. மரம் - வஞ்சி, காஞ்சி, மருதம்

5. பறவை - தாரா, நீர்க்கோழி

6. பறை - மணமுழவு, நெல்லரி கிணை

7. தொழில் - விதைத்தல், விளைத்தல்

8. யாழ் - மருத யாழ்

9. பண் - மருதப் பண்

10. ஊர் - ஊர்கள்

11. நீர் - ஆற்றுநீர், பொய்கை நீர்

12. மலர் - தாமரை, கழுநீர்

உரிப்பொருள்

ஊடலும் ஊடல் நிமித்தமும்.


4. நெய்தல் திணை

முதற்பொருள்

நிலம் - கடலும் கடல் சார்ந்த இடமும்

பொழுது -

அ) பெரும்பொழுது - ஆண்டு முழுதும்
 ஆ) சிறுபொழுது – எற்பாடு

கருப்பொருள்கள்

1. தெய்வம் – வருணன் (“வருணன் மேய பெருமணல் உலகமும்”)

2. உணவு - மீன், உப்பு

3. விலங்கு - உமண்பகடு (உப்பு வாணிகனின் மூட்டை சுமக்கும் எருது), சுறா

4. மரம் - புன்னை, ஞாழல், கண்டல்

5. பறவை - அன்றில், அன்னம்

6. பறை - மீன்கோட் பறை

7. தொழில் - மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு, விளைவித்தல், நாவாய் ஓட்டல்

8. யாழ் - நெய்தல் யாழ்

9. பண் - நெய்தல் பண்

10. ஊர் - பட்டினம், பாக்கம்

11. நீர் - உவர்க்குழி (ஊற்றுநீர்), மணற்கிணறு

12. மலர் - நெய்தல், கைதை (தாழை)

உரிப்பொருள்

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்


5.பாலைத் திணை

முதற்பொருள்

நிலம் - பாலை நிலம்

பொழுது -

அ) பெரும்பொழுது - வேனிற் காலம், பின்பனிக் காலம்
ஆ) சிறுபொழுது - நண்பகல்

கருப்பொருள்கள்

1. தெய்வம் - கொற்றவை

2. உணவு -  வழிப்போக்கரிடம் திருடிய உணவு

3. விலங்கு - யானை, புலி, செந்நாய்

4. மரம் - இருப்பை, உழிஞை

5. பறவை - கழுகு, பருந்து, புறா

6. பறை - சூறை கோட் பறை

7. தொழில் - வழிப்பறி, சூறையாடல்

8. யாழ் - பாலை யாழ்

9. பண் - பாலைப் பண்

10. ஊர் - பறந்தலை

11. நீர் - கூவல் (கிணறு, குழி)

12. மலர் - மரா, குரா

உரிப்பொருள்

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.


கண்களுக்கு எட்டிய தூரம் பரந்த சமவெளி நிலத்தையும் அந்த நிலத்தை நம்பியே தங்களுடைய வாழ்வாதாரமும் இருந்தால் அந்த பரந்த சமவெளி நிலத்தை மருத நிலம் என்றார்கள்.

கண்களுக்கு எட்டிய தூரம் சுற்றி சூழ்ந்திருக்கும் மலை பிரதேசத்தையும் அந்த மலையை நம்பி தங்களுடைய வாழ்வாதாரம் இருந்தால் அந்த இடத்தை குறிஞ்சி நிலம் என்றார்கள்.

இப்படியே மலை பிரதேசத்தை ஒட்டியிருக்கும் நிலத்தை முல்லை நிலம் என்றார்கள்.

பரந்து விரிந்த கடலையும் தங்களுடைய வாழ்வாதாரம் கடலை நம்பியிருப்பதால் அதை நெய்தல் நிலம் என்றார்கள்.

கோடை காலத்தில் முல்லை நிலம் வெப்பத்தால் வரண்டு இருப்பதால் அதை பாலை என்றார்கள்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

Saturday, April 28, 2018

ஆண் மற்றும் பெண்ணுக்குரிய சப்த பருவங்கள்

ஆண் மற்றும் பெண்ணுக்கு சப்த பருவங்கள் உண்டு. இந்த 7 பருவங்களுக்கும் நமது தாய்மொழியாம் தமிழ் மொழியில் இனிமையான பெயர்கள் உண்டு. அந்த பெயர்களை வயதிற்கேற்ப கீழே காணலாம்.

பெண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 8 வயது வரை – பேதை 
*  9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை 
* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை 
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை 
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை 
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்

ஆண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 7 வயது  வரையிலான பருவம் –  பாலன்
* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி 
* 11 வயது  முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன் 
*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
*16 வயதிற்குண்டான பருவம் – விடலை 
*17 வயது முதல் 30 வரையிலான பருவம் –  காளை 
* 30 வயதுக்கு மேலான பருவம் –  முதுமகன்

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

Friday, April 20, 2018

12 இராசி மண்டலங்களும் 108 நற்பண்புகளும்

27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12 வகைகளாக பிரிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும். 

அவை :
             
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்

ரிஷபம் :
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்

மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடகராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.

சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.

கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.

துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.

விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.

தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

Sunday, April 8, 2018

பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா...!!?

இனிமே தினமும் பூ வைத்து கொள்ளுங்கள்...!!?

உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன.

ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன.

அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. 

பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

பூக்களைச் சூடும் கால அளவு

முல்லைப்பூ - 18 மணி நேரம்
அல்லிப்பூ - 3 நாள்கள் வரை
தாழம்பூ - 5 நாள்கள் வரை
ரோஜாப்பூ - 2 நாள்கள் வரை
மல்லிகைப்பூ - அரை நாள்கள் வரை
செண்பகப்பூ - 15 நாள்கள் வரை
சந்தனப்பூ - 1 நாள்கள் மட்டும்

மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ - சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.

மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ - இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.

பூக்களின் பயன்கள்:

ரோஜாப்பூ - தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

மல்லிகைப்பூ – மன அமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.

செண்பகப்பூ - வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.

பாதிரிப்பூ - காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.

செம்பருத்திப் பூ - தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

மகிழம்பூ - தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.

வில்வப்பூ - சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.

சித்தகத்திப்பூ - தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

தாழம்பூ - நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.

தாமரைப்பூ - தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மன உளைச்சலை நீக்கி மன அமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.

கனகாம்பரம்பூ - தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.

தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.

பூக்களைச் சூடும் முறை:

பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும். 

உச்சந்தலையிலோ, கழுத்துப் பின் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது. 

மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.

ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.

மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும். 

மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும். 

முல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பு சூடலாம். 

உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.

பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:
.
பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.

இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.

தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவும். 

ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.

மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது.

பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது.

மனமாற்றத்துக்கு உதவுகிறது. 

மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

#சும்மாவா சொன்னாங்க பெரியவங்க பெண்களை  பூவைன்னு#

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...