ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தாங்கள் வாழும் நிலத்தை ஐந்து வகையாக பிரித்துவிட்டார்கள்.
திணைக்கடவுள்கள் பற்றி தொல்காப்பியம்,
'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே' என்கிறது.
தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்கள் இருந்துள்ளமை தெளிவாகின்றது.
காலப்போக்கில் முல்லையும், குறிஞ்சியும் முறைமுறை திரிந்து, நல்லியல்பு இழந்து, வெம்மையால் வளமை குன்றிப் போயுள்ள நிலத்தைப் ‘பாலை' எனப் பெயரிட்டனர். இதன்பின்தான் நால்வகை நிலங்கள், ஐவகை நிலங்களாகவும், ஐந்திணைகளாகவும் பெயர் பெற்றன. பாலை பிறந்த கதையைச் சிலப்பதிகாரத்தில் காண்போம்.
'முல்லையும், குறிஞ்சியும், முறைமையின் திரிந்து
நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்.'
–(காடுகாண் காதை 11: 64-66)
1. குறிஞ்சித் திணை
முதற்பொருள்
நிலம் - மலையும் மலையைச் சார்ந்த இடமும்
பொழுது -
அ) பெரும்பொழுது - கூதிர்காலமும், முன்பனிக்காலமும்
ஆ) சிறு பொழுது - யாமம்
கருப்பொருள்கள்
1. தெய்வம் – சேயோன் (“சேயோன் மேய மைவரை உலகமும்”)
2. உணவு - ஐவன நெல் (மலை நெல்), தினை, மூங்கிலரிசி, கிழங்கு
3. விலங்கு - புலி, யானை, கரடி, பன்றி
4. மரம் - அகில், ஆரம், தேக்கு, வேங்கை
5. பறவை - கிளி, மயில்
6. பறை - முருகியம், தொண்டகப் பறை
7. தொழில் - தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், தினை விதைத்தல், வேட்டையாடுதல்
8. யாழ் - குறிஞ்சி யாழ்
9. பண் - குறிஞ்சிப் பண்
10. ஊர் - சிறுகுடி, குறிச்சி
11. நீர் - அருவி நீர், சுனை நீர்
12. மலர் - காந்தள், வேங்கை, குறிஞ்சி
உரிப்பொருள்
புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (நிமித்தம் = காரணம்)
2. முல்லைத் திணை
முதற்பொருள்
நிலம் - காடும் காட்டைச் சார்ந்த இடமும்
பொழுது -
அ) பெரும்பொழுது : கார்காலம்
ஆ) சிறுபொழுது : மாலை
கருப்பொருள்கள்
1. தெய்வம் – மாயோன் (” மாயோன் மேய காடுறை உலகமும்”)
2. உணவு - வரகு, சாமை
3. விலங்கு - மான், முயல்
4. மரம் - தோன்றி, காயா, பிடவம், குருந்தம்
5. பறவை - காட்டுக்கோழி, சேவல்
6. பறை - ஏறுகோட் பறை
7. தொழில் - ஆநிரை மேய்த்தல், ஏறு தழுவல்
8. யாழ் - முல்லை யாழ்
9. பண் - குறிஞ்சிப் பண்
10. ஊர் - பாடி, சேரி
11. நீர் - குறுஞ்சுனை, கான்யாறு
12. மலர் - முல்லை, குல்லை, தோன்றி, பிடவம்
உரிப்பொருள்
இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.
3. மருதத் திணை
முதற்பொருள்
நிலம் - வயலும் வயல்சார்ந்த இடமும்
பொழுது -
அ) பெரும்பொழுது - ஆண்டு முழுதும்
ஆ) சிறுபொழுது - வைகறை, விடியல்
கருப்பொருள்கள்
1. தெய்வம் - இந்திரன் (வேந்தன் மேய தீம்புனல் உலகமும்)
2. உணவு - செந்நெல், கரும்பு
3. விலங்கு - எருமை, நீர்நாய்
4. மரம் - வஞ்சி, காஞ்சி, மருதம்
5. பறவை - தாரா, நீர்க்கோழி
6. பறை - மணமுழவு, நெல்லரி கிணை
7. தொழில் - விதைத்தல், விளைத்தல்
8. யாழ் - மருத யாழ்
9. பண் - மருதப் பண்
10. ஊர் - ஊர்கள்
11. நீர் - ஆற்றுநீர், பொய்கை நீர்
12. மலர் - தாமரை, கழுநீர்
உரிப்பொருள்
ஊடலும் ஊடல் நிமித்தமும்.
4. நெய்தல் திணை
முதற்பொருள்
நிலம் - கடலும் கடல் சார்ந்த இடமும்
பொழுது -
அ) பெரும்பொழுது - ஆண்டு முழுதும்
ஆ) சிறுபொழுது – எற்பாடு
கருப்பொருள்கள்
1. தெய்வம் – வருணன் (“வருணன் மேய பெருமணல் உலகமும்”)
2. உணவு - மீன், உப்பு
3. விலங்கு - உமண்பகடு (உப்பு வாணிகனின் மூட்டை சுமக்கும் எருது), சுறா
4. மரம் - புன்னை, ஞாழல், கண்டல்
5. பறவை - அன்றில், அன்னம்
6. பறை - மீன்கோட் பறை
7. தொழில் - மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு, விளைவித்தல், நாவாய் ஓட்டல்
8. யாழ் - நெய்தல் யாழ்
9. பண் - நெய்தல் பண்
10. ஊர் - பட்டினம், பாக்கம்
11. நீர் - உவர்க்குழி (ஊற்றுநீர்), மணற்கிணறு
12. மலர் - நெய்தல், கைதை (தாழை)
உரிப்பொருள்
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
5.பாலைத் திணை
முதற்பொருள்
நிலம் - பாலை நிலம்
பொழுது -
அ) பெரும்பொழுது - வேனிற் காலம், பின்பனிக் காலம்
ஆ) சிறுபொழுது - நண்பகல்
கருப்பொருள்கள்
1. தெய்வம் - கொற்றவை
2. உணவு - வழிப்போக்கரிடம் திருடிய உணவு
3. விலங்கு - யானை, புலி, செந்நாய்
4. மரம் - இருப்பை, உழிஞை
5. பறவை - கழுகு, பருந்து, புறா
6. பறை - சூறை கோட் பறை
7. தொழில் - வழிப்பறி, சூறையாடல்
8. யாழ் - பாலை யாழ்
9. பண் - பாலைப் பண்
10. ஊர் - பறந்தலை
11. நீர் - கூவல் (கிணறு, குழி)
12. மலர் - மரா, குரா
உரிப்பொருள்
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.
கண்களுக்கு எட்டிய தூரம் பரந்த சமவெளி நிலத்தையும் அந்த நிலத்தை நம்பியே தங்களுடைய வாழ்வாதாரமும் இருந்தால் அந்த பரந்த சமவெளி நிலத்தை மருத நிலம் என்றார்கள்.
கண்களுக்கு எட்டிய தூரம் சுற்றி சூழ்ந்திருக்கும் மலை பிரதேசத்தையும் அந்த மலையை நம்பி தங்களுடைய வாழ்வாதாரம் இருந்தால் அந்த இடத்தை குறிஞ்சி நிலம் என்றார்கள்.
இப்படியே மலை பிரதேசத்தை ஒட்டியிருக்கும் நிலத்தை முல்லை நிலம் என்றார்கள்.
பரந்து விரிந்த கடலையும் தங்களுடைய வாழ்வாதாரம் கடலை நம்பியிருப்பதால் அதை நெய்தல் நிலம் என்றார்கள்.
கோடை காலத்தில் முல்லை நிலம் வெப்பத்தால் வரண்டு இருப்பதால் அதை பாலை என்றார்கள்.
வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
Collected from Social Media...

No comments:
Post a Comment