Thursday, July 26, 2018

பஞ்சபூத தலங்கள் உட்பட ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்!!

இந்தியாவில் தென்பகுதியில் இருந்து வடபகுதி வரையில் அமைந்திருக்கும் பஞ்சபூத தலங்கள் உட்பட எட்டு சிவாலயங்கள் தீர்க்க ரேகையில் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது ஆச்சரியத்திலும், ஆச்சரியமாக இருக்கிறது.

எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், மேலும், மூன்று சிவாலயங்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன.

இது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்த ஆன்மீக விஷயமாகும்.

மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும்  இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது. கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது.

பஞ்சபூத ஸ்தலம்

நிலம் – காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
நெருப்பு – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
நீர் – திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்
ஆகாயம் - சிதம்பரம் நடராசர் கோயில்
காற்று – திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவனின் இந்த பஞ்சபூததலங்களும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள் ஆகும். அப்போது, எந்தவொரு தானியங்கி அல்லது செயற்கைக்கோள் உதவிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேதார்நாத்:

இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் இருக்கும் கேதார்நாத்த பனிலிங்க ஆலயமும் கூட இதே நேர்கோட்டிலான தீர்க்கரேகையில் (longitude ) அமைந்திருப்பது வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

ஏனைய சிவாலயங்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயம், கலேஸ்வரம் முக்தீஸ்வரா ஆலயம்

ஆயிரம் மைல்கள்:

கேதார்நாத்திலிருந்து இராமேஸ்வரம் வரை இடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ 2383 கிலோமீட்டர்கள் ஆகும். இவ்வளவு இடைப்பட்ட தூரத்தில் இடையிடையே அமைந்திருக்கும் இந்த சிவாலயங்கள் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருப்பது மர்மம் விலகாமலேயே நீடித்து வருகிறது.
.
தீர்க்கரேகை நிலை:

1) கேதார்நாத் – கேதார்நாத் கோயில் (30.7352° N, 79.0669)
2) காலேஷ்வரம் – காலேஷ்வரா முக்தீஷ்வரா சுவாமி கோயில் (18.8110, 79.9067)
3) ஸ்ரீ காலஹஸ்தி – ஸ்ரீ காலஹஸ்தி கோயில் (13.749802, 79.698410)
4) காஞ்சிபுரம் – ஏகாம்பரநாதர் கோயில் (12.847604, 79.699798)
5) திருவானைக்காவல் - ஜம்புகேஸ்வரர் கோயில் (10.853383, 78.705455)
6) திருவண்ணாமலை - அண்ணாமலையார் கோயில் (12.231942, 79.067694)
7) சிதம்பரம் – நடராஜர் கோவிலில் (11.399596, 79.693559)
8) ராமேஸ்வரம் – ராமநாத கோயில் (9.2881, 79.3174)

இது உண்மையில் எப்படி பல ஆண்டுகளுக்கு முன்பு அமைந்தது என்பதை அந்த இறைவன் ஒருவரே அறிவார்.
இவை அனைத்தும் 79டிகிரி தீர்க்க ரேகையிலேயே அமைந்துள்ளன.

கேதார்நாத் முதல் காலேஷ்வரம் வரை இடையே இன்னும் பல சிவாலயங்கள் இதே நேர்கோட்டில் தீர்க்கரேகையில் அமைந்திருக்கலாம் எனவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இது ஆச்சரியம் கலந்த செய்தியாக இருந்தாலும் எல்லா கோயில்களும் ஒரே காலகட்டத்தில் கட்டப்படவில்லை.
ஒரே திட்டத்தின் படியோ, ஒரே ஆட்சியின் கீழோ, ஒரே வேலையாட்களாலோ கட்டப்படவில்லை. அதனால், இது இயல்பாக அமைந்திருப்பதுதான். இதிலும் திருவானைக்காவல், திருவண்ணாமலை, கோயில்கள் நேர்க்கோட்டில் சற்று விலகியும் காணப்படுகின்றன.

ஆகமவிதிப்படி கட்டியதில் அப்படி அமைந்ததாக சொல்லமுடியாது நேர்க்கோட்டில் இல்லாத எல்லா கோயில்களும் கூட அவ்விதிப்படிதான் கட்டப்பட்டுள்ளது.
இது மனித முயற்சியை மீறி அமைந்ததுதான் இதற்கான பெருமையும் கடவுளையே
சேருவதுதான்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

Friday, July 20, 2018

கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் ஆடி மாதம் !!


தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் இறைவியை நாடிச்  சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகக் கருதப்படுகின்றது. காரணம் சந்திரன் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாகும். 

‘ஆடிச் செவ்வாய் தேடிக்குளி’ என்றும், ‘ஆடிப்பட்டம் தேடி விதை’, ‘ஆடிப்பெருக்கு கோடியாய் கிடைக்கும்’ என்பதெல்லாம் முன்னோர் வாக்கு. ஆடி மாதம் பிறந்தாலேஅனைத்து பண்டிகைகளையும் அழைத்து கொண்டு வரும்  என்று கூறுவார்கள்.

தட்சிணாயன புண்ணிய காலம், தமிழ்  மாதத்தில் நான்காவது மாதமான ஆடி மாதத்தில் தான் தொடங்குகிறது. இப்புண்ணிய காலத்தின் போது சூட்சும சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும். அந்த சமயத்தில் பூஜைகள், வேத பாராயணங்கள், ஜபங்கள், நீத்தார் வழிபாடுகள் செய்தால் பலன் அதிகமாக கிடைக்கும். 

பிராண வாயு அதிகமாக கிடைக்கும் மாதமும் இது தான். இந்த சமயத்தில் ஜீவாதார சக்தி மிகுந்து காணப்படுவதால் தான், விவசாயத்தில் விதை தெளிப்புக்கு ஏற்ற மாதமாக கருதப்பட்டு ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழி வந்தது.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதன்படி பார்த்தால் ஆடி மாதத்தில் தேவர்களின் மாலை நேரம் தொடங்குகிறது. 

சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் கால அளவான 31 நாட்கள், 28 நாழிகை, 12 விநாடி கால அளவை கொண்டது ஆடி மாதம். எனவே இதை ‘கற்கடக’ மாதம் என்றும் சொல்வதுண்டு. 

கடக ராசி சந்திரனுக்குரியது. சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனின் ஆட்சி வீட்டில் இருப்பதால் (ஒன்று சேருவதால்), ஆளுமை பலம் அடைகிறது. அதாவது சக்தியின் பலம் அதிகரிக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார். 
எனவே சிவனை விட அம்மனுக்கு ஆடி மாதத்தில் ஆற்றல் அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். அதனாலேயே இந்த மாதம் அம்மன் வழிபாட்டுக்குரிய மாதமாக திகழ்கிறது.

ஆடி மாதம் வந்தவுடன் அம்மன் கோவில்கள், குறிப்பாக மாரியம்மன் கோவில்கள் அனைத்தும் புத்துணர்வு பெற்று காணப்படும். கூழ் வார்த்தலும், பூக்குழி இறங்குதலுமாக ஆலயமே களை கட்டி விடும். விளக்கு பூஜைகள், கூட்டு வழிபாடுகளுக்கும் ஏற்ற மாதம் இது. இந்த மாதத்தில் வேம்பும், எலுமிச்சையும் கொண்டு வழிபடுவது மிகவும் சிறப்பு.

ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?  பக்திப்பூர்வமான இந்த செயல்களுக்கு அறிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது? 

ஆடி மாதம் மழைக் காலத்தின் ஆரம்பம். தொற்று நோய்கள் பல இந்த கால கட்டத்தில் பரவும் வாய்ப்புண்டு. வேம்பும், எலுமிச்சையும் இயற்கையாகவே சிறந்த கிருமி நாசினி. பலர் கூடும் கோவில் திருவிழாக்களில் அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக இவை தரப்படுவதால் நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. 

வெப்பம் குறைவான இந்த நாட்களில் எளிதில் செரிக்க கூடிய உணவான கூழ் படைக்கப்பட்டு, பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அதனால் தான் ‘ஆடிக்கூழ் அமிர்தமாகும்’ என்று சொல்லப்படுகிறது. 

ஆடிமாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளோடு, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம், ஆடிப்பவுர்ணமி என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன. 

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

Saturday, July 14, 2018

எந்த உணவுகள் அதிகமானால் எந்த நோய் தோன்றும்!?

சில உணவுளை அதிகமாக உண்ணும் போது ஏற்படும் நோய்கள்

பச்சரிசி அதிகமானால் - சோகை நோய். 

அச்சுவெல்லம் அதிகமானால் - அஜீரணம்.

பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி.

இஞ்சி அதிகமானால் – மென் குரலும் இறுக்கமாகும்.

பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்.

தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்.

மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்பு வலிவரும். பித்தம் அதிகமாகும்.

கோதுமையை சூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்.

பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.

முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும்.

எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும்.

மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.

மிளகாய் அதிகமானால் - வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.

காபி அதிகமானால் – கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.

டீ அதிகமானால் – உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும். 

எலுமிச்சை அதிகமானால் - பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.

எள்ளு அதிகமானால் – பித்தம் செரியாமை உண்டாகும்.

உப்பு அதிகமானால் – எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்.

வெங்காயம் அதிகமானால் - தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்.

குங்குமப்பூ அதிகமானால் - மதியழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.

வெள்ளை பூண்டு அதிகமானால்- ரத்தம் கொதித்து பொங்கும், கரு அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும். 

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு...

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

Sunday, July 8, 2018

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்!!

அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.

கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.

புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.

முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.

முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.

தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.

முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.

முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.

பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச 
நோய்களை விலக்கும்.

தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக்கீரை- இருமலை போக்கும்.

சாணக்கீரை- காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.

விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.

கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.

துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.

நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...