Monday, February 25, 2019

வார்த்தையின் சக்தி !!!

ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார் ஒருவர் . ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர்.



இதைப் பார்த்த சமய குரு, நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் என கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். 

அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். 

பிறகு அந்த சமய குரு, இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும் எனக் கூறினார்.

அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். சமய குரு சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான். வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?" என கூறி சிரித்தான்.

அதற்கு அந்த சமய குரு, இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான் என சொன்னார்.

இதைக் கேட்டதும் அவன், நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையே உங்களை அடித்து விடுவேன் என்றபடி அடிக்கப் பாய்ந்தான். 

பதற்றமே இல்லாத அந்த சமய குரு, முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி? 

இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றார். இதைக் கேட்ட அந்த நாத்திகன் வெட்கித் தலை குனிந்தான்.

நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பே, *'நல்லதையே நினை. நல்லதையே பேசு'* என அழகாக நம் முன்னோர்கள், சொல்லி விட்டனர்.

நாம் இன்று என்ன நிலையில் இருக்கின்றோமோ, அந்நிலையை கொடுத்தது, நம் எண்ணங்களே!!!

*எண்ணங்கள் அழகானால்..., எல்லாம் அழகாகும்...*

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

#ஸ்ரார்த்த/#திதி #சாப்பாடு !?

ஒருமுறை தன் முன்னோர் ஸ்ரார்த்தத்துக்கு [திவஸம்/திதி] தன் குடிலுக்கு சாப்பிட வருமாறு விஸ்வாமித்ரரை வஸிஷ்டர் அழைத்தார்.


"அதற்கென்ன வந்தால் போச்சு.! ஆனால் 1008 வகை காய்கறி செய்து படைக்க வேண்டும்" என்றார்.

உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா.? அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களை சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா.? அப்படியே சமைத்துப்போட்டாலும் அதைச்சாப்பிட யாரால் முடியும்.?

விஸ்வாமித்திரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டி வைக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ இப்படிச்செய்கிறார் என்பது வஸிஷ்டருக்குத் தெரியாதா என்ன.?

இருந்தபோதிலும் விட்டுக்கொடுக்காமல், "ஆஹா.! 1008 வகை கறியமுது வேண்டுமா? அதற்கென்ன அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன்" என்றார்.

ஸ்ரார்த்தச்சாப்பாடு நாளும் வந்தது. விஸ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார்.

பாகற்காய்கறி., பலாப்பழம்., பிரண்டைத்துவையல் இவைகளோடு., ஒரு வாழை இலையில் எவ்வளவு காய்கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவு மட்டுந்தான் இலையில் இருந்தன.

1008 காய்கறிகள் இல்லை.

விஸ்வாமித்திரர் கோபத்துடன் "என்ன இது.? 1008 வகை காய்கள் எங்கே.?" என்று வஸிஷ்டரை வினவினார்.

அவரோ "நான் அருந்ததியிடம் சொல்லிவிட்டேனே! அவளையே கேட்டுக்கொள்ளுங்கள்" என்றார்.

இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த உலகம் போற்றும் உத்தமி அருந்ததி., தானே முன்வந்து ஒரு ஸ்லோகத்தை கூறிவிட்டு., "இதுதானே ஸ்ராத்தகால விதி உங்களுக்கு தெரிந்திருக்குமே.!" என்றாள்.

விஸ்வாமித்திரர் வாயடைத்துப் போனார். பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்தி விட்டுப்போனார். அருந்ததி கூறிய அந்த ஸ்லோகம் என்ன.?

காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம் பனஸம் ஷட் ஸதம்சைவ ஸ்ரார்த்தகாலே விதீயதே

कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते

"ஒரு ஸ்ராத்தத்திதியன்று சமைக்கப்படும் சமையலில்., 
பாகற்காய்கறி 100 காய்களுக்குச்சமம்., 
பிரண்டைத்துவையல் 300 காய்களுக்குச்சமம், 
பலாப்பழம் 600 காய்களுக்குச்சமம் 
என்று பாடல் கூறுகிறது.

ஆயிரம் காய்கள் ஆயிற்றா.?

மீதி இலையில் எண்ணிப்பாருங்கள்., எட்டுகாய் கறிகள் வைத்திருக்கிறேன். 
ஆக மொத்தம் 1008.! " என்றாள்.

சாஸ்த்திரப்படி விளக்கம் சொன்ன அருந்ததியின் பதில் ஞாயம் தானே.?

ஸமயோசித புத்தியும்., இல்லற தர்மமும் அறிந்தவர்களாக., நம் பாரதத்தில் அன்றைய பெண்கள் இருந்திருக்கிறார்கள்.!


இதைப்போன்ற நாம் தெரிந்து கொள்ளவேண்டிய நல்ல விஷயங்கள் ஏராளமாக உள்ளது.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

பூரி ஜெகநாதர் கோவிலில் உள்ள ஆச்சர்யமூட்டும் ரகசியங்கள்!?

*அறிவியல் கூட இங்கு நடக்கும் விசித்திரமான சம்பவங்களுக்கு பதில் கூற தடுமாறுகிறது.*


கோவிலில் இருக்கும் மடப்பள்ளி உலகிலேயே பெரிய மடப்பள்ளியாக விளங்குகிறது. இந்த கோவிலில் சமைக்கும் பிரசாதம் எப்போதும் ஒரே அளவில் தான்  இருக்கும்.

ஆனால், பக்தர்களின்   வருகை கூடினாலும், குறைந்தாலும் தயாராகும் பிரசாதம் ஒருபோதும் பக்தர்களுக்கு பற்றாமல் போனதில்லை; அது போல மீதமும் ஆவதில்லை. *இந்த அதிசயம் யாருக்கும் விளங்கவில்லை*.

இந்த கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள சுதர்சன சக்கரம், நகரின் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் உங்களை நோக்கி பார்ப்பது போலவே காட்சி அளிக்கும். *அப்படி ஏன் தெரிகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது*.

அதே போல் அந்த சக்கரத்தின் மேலே ஒரு கொடி பறந்து கொண்டு இருக்கும். *உயரம் 214 அடி*.  அபரிமிதமான  மழை என்றாலும், குளிர் என்றாலும், வெயில் என்றாலும், மூன்று பேர் கொண்ட குழு எவ்வித கஷ்டமும் இன்றி உச்சிக்குச் சென்று தினமும் கொடி ஏற்றுவர்.

இது சாதரணக்கொடி அல்ல, ஏன் என்றால் இந்த கொடியானது காற்று எந்த பக்கம் வீசுகிறதோ, அதற்கு எதிர் திசையில் பறக்கும். *அது ஏன் என்று இன்று வரை மிகப்பெரிய விஞ்ஞானிகளால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை*.

இந்த ஜகன்நாதர் கோபுரத்தின் நிழல் எந்த நேரத்திலும் தரையில் படுவதில்லை.

இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு மேல் விமானங்களோ, பறவைகளோ பறப்பதில்லை.

சாதாரணமாக பறவைகள் கோவில் கோபுரங்களில் கூடு கட்டி வாழும், பல பறவைகள் கோவில் கோபுரத்தில் அமரும் , ஆனால் இந்த கோவிலில் எதிர்மறையாக ஒரு பறவையை கூட பார்க்க முடியாது. *அப்படி ஏன் பறவைகள் கோவில் பகுதியில் பறப்பதில்லை என்பது இதுவரை அறியப்படாத அமானுஷ்யமாகும்*.

பொதுவாக காற்றானது, காலையில் இருந்து மாலை வரையான நேரங்களில், கடலில் இருந்து நிலத்தை நோக்கியும், மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும்.

சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் உட்புறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது, கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்குக் கேட்காது. ஆனால், அதே சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் வெளிப்புறமாக நுழையும் போது, கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்குக் கேட்கும். இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும். 

மடப்பள்ளியில் இன்று வரை விறகு அடுப்பு வைத்து, மண் பானைகளை கொண்டு தான் சமைக்கிறார்கள். இந்த மண் பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு அடுக்குகள் வைத்து கீழே தீ மூட்டுகிறார்கள்.

*இதில் என்ன ஆச்சர்யம் என்றால் கீழ் பானையில் உள்ள அரிசி கடைசியாகவும் மேல் பானையில் உள்ள அரிசி முதலாவதாகவும் வேகும். இது எப்படி சாத்தியம் என்றால் பதில் அந்த ஜகன்னதருக்கு தான் தெரியும்*.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

Monday, February 4, 2019

போதிதர்மரின் போர்க்கலை - சீன வர்மம்

இன்றைய கால கட்டத்தில் போதிதர்மரைப் பற்றி அறிந்துகொள்ள தமிழ் உலகு பெரும் விருப்பம் கொண்டுள்ளது.



தமிழ் நாட்டில் வர்ம சாஸ்திரம் எனப்படும் மருத்துவ போர்க்கலையின் சீன வடிவமே டிம் மாக், அதாவது போதிதர்மர் சீன தேசத்தில் கற்பித்த வர்ம சாஸ்திரம்.

"DIM MAK - டிம் மாக்" என்பதுவே சீன மொழியில் வர்ம சாஸ்திரத்தின் பெயராகும், இதன் அர்த்தம் "மரண அடி" என்பதாகும். புருஸ் லீயின் மரணம் கூட இளக்காமல் விட்ட வர்மத்தினால் ஏற்பட்ட மரணம் என்று கூட ஒரு கருத்து உண்டு.

வர்ம மருத்துவ போர்க்கலையின் தத்துவம் என்ன?

சீன தத்துவத்தின் படி வர்மத்தின் அடிப்படை சீ (chi or ki) எனப்படுவது பிராண சக்தி. 

இந்த பிராண சக்தியானது உடலில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நரம்பு மண்டலங்களினூடாக உடல் முழுவதும் பரவி உடலை வலுவூட்டுகின்றது. இவை மெரிடியன்கள் என அழைக்கப்படும். 

சீன மருத்துவ கொள்கையின் படி (நமது சித்த வைத்திய, தாந்திர யோக கொள்கையின் படியும்) நோய் என்பது இந்த பிராண ஓட்டத்தில் ஏற்படும் தடையாகும். 

இதனை சீர்செய்வதற்கு பாவிக்கப்படும் உத்திகளே அக்குபிரசர், அக்குபஞ்சர் போன்றவை. இவை இந்த அடிப்படையின் நல்வடிவங்கள்! டிம் மாக் அல்லது மரண அடி இதன் தீய வடிவமாகும்.

நவீன விஞ்ஞானத்தின்படி இந்தப்புள்ளிகள் நரம்புகளில் இணைப்பு (junction points) பகுதியாகும், அத்துடன் நரம்பியல் ரீதியாக அவை உடலின் உள் அங்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. 

இவை சேதமுறும் போது அவற்றின் விளைவுகள் நேரடியாக அவைகளின் மூலமாக செயல்படும் அங்கங்களை பாதிக்கச் செய்து மரணத்தை ஏற்படுத்துகிறது.

பாதிப்பை ஏற்படுத்துவதற்கு குறித்த இடத்தில் ஏற்படும் அடியின் வேகத்தின் அளவு முக்கியமானதாகும், இதனை தமிழ் வர்மசாஸ்திரத்தில் மாத்திரை அளவு என்பார்கள், மாத்திரை அளவு அதிகமானால் வர்மம் மிகவும் ஆபத்தானது. மருத்துவத்தால் குணப்படுத்த முடியாமலும் போகலாம்.

இந்த முறை சீன போர்க்கலையில் இறுதி நிலையில் கற்றுக்கொடுக்கப்படும் ஒரு போர்முறையாகும்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...