இன்றைய கால கட்டத்தில் போதிதர்மரைப் பற்றி அறிந்துகொள்ள தமிழ் உலகு பெரும் விருப்பம் கொண்டுள்ளது.
தமிழ் நாட்டில் வர்ம சாஸ்திரம் எனப்படும் மருத்துவ போர்க்கலையின் சீன வடிவமே டிம் மாக், அதாவது போதிதர்மர் சீன தேசத்தில் கற்பித்த வர்ம சாஸ்திரம்.
"DIM MAK - டிம் மாக்" என்பதுவே சீன மொழியில் வர்ம சாஸ்திரத்தின் பெயராகும், இதன் அர்த்தம் "மரண அடி" என்பதாகும். புருஸ் லீயின் மரணம் கூட இளக்காமல் விட்ட வர்மத்தினால் ஏற்பட்ட மரணம் என்று கூட ஒரு கருத்து உண்டு.
வர்ம மருத்துவ போர்க்கலையின் தத்துவம் என்ன?
சீன தத்துவத்தின் படி வர்மத்தின் அடிப்படை சீ (chi or ki) எனப்படுவது பிராண சக்தி.
இந்த பிராண சக்தியானது உடலில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நரம்பு மண்டலங்களினூடாக உடல் முழுவதும் பரவி உடலை வலுவூட்டுகின்றது. இவை மெரிடியன்கள் என அழைக்கப்படும்.
சீன மருத்துவ கொள்கையின் படி (நமது சித்த வைத்திய, தாந்திர யோக கொள்கையின் படியும்) நோய் என்பது இந்த பிராண ஓட்டத்தில் ஏற்படும் தடையாகும்.
இதனை சீர்செய்வதற்கு பாவிக்கப்படும் உத்திகளே அக்குபிரசர், அக்குபஞ்சர் போன்றவை. இவை இந்த அடிப்படையின் நல்வடிவங்கள்! டிம் மாக் அல்லது மரண அடி இதன் தீய வடிவமாகும்.
நவீன விஞ்ஞானத்தின்படி இந்தப்புள்ளிகள் நரம்புகளில் இணைப்பு (junction points) பகுதியாகும், அத்துடன் நரம்பியல் ரீதியாக அவை உடலின் உள் அங்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இவை சேதமுறும் போது அவற்றின் விளைவுகள் நேரடியாக அவைகளின் மூலமாக செயல்படும் அங்கங்களை பாதிக்கச் செய்து மரணத்தை ஏற்படுத்துகிறது.
பாதிப்பை ஏற்படுத்துவதற்கு குறித்த இடத்தில் ஏற்படும் அடியின் வேகத்தின் அளவு முக்கியமானதாகும், இதனை தமிழ் வர்மசாஸ்திரத்தில் மாத்திரை அளவு என்பார்கள், மாத்திரை அளவு அதிகமானால் வர்மம் மிகவும் ஆபத்தானது. மருத்துவத்தால் குணப்படுத்த முடியாமலும் போகலாம்.
இந்த முறை சீன போர்க்கலையில் இறுதி நிலையில் கற்றுக்கொடுக்கப்படும் ஒரு போர்முறையாகும்.
வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
Collected from Social Media..

No comments:
Post a Comment