Thursday, March 21, 2019

அணுவும் தொல் தமிழனும் !

பழந்தமிழர்கள் அணுவை பற்றி ஆராய்ந்துள்ளனர். ஒவ்வொரு புலவரும் அணுவைப்பற்றி பலவாராக எழுதி உள்ளனர். 

ஒவ்வொருவரையும் தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள் என கூறுதல் பொருத்தமே. சிவனின் அடிப்படை தாத்பர்யமே அணு என்று சொல்கிறார்கள். 


அணுவை விளங்கிக்கொள்ள உருவாக்கிய வரைபடம் லிங்க உருவம் என்று சொல்லுவதும் மிகையில்லை.

தமிழில் அணுவை குறித்து பல பதங்கள் காணக்கிடைக்கிறது. இதிலிருந்தே அணுவை பகுத்து பெயரிட்டது விளங்கும். 

பல வார்தைகள் இருந்தாலும் மூன்று வார்த்தைகளை எடுத்துக்கொள்வோம் கோண், பரமாணு, இம்மி .

கோண் என்பது மிக நுண்ணிய அளவு. இதை விடச்சிறிய அளவு பரமாணு இதை விடச்சிறிய அளவு இம்மி.

இப்பிரபஞ்சம் முழுமையும் அணுக்களால் நிரம்பியது என்று அன்றே சொன்னார்கள். 

வெளிப்படையான குறியீடுகளையும் சமன்பாடுகளையும் வகுக்காமல் விட்டுவிட்டார்கள்.

திருமூலர் எழுதிய திருமந்திரப் பாடல்களிலிருந்து தமிழர்கள் எந்த அளவு அணு குறித்த ஞானம் உடையவர்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலு மாமே
– திருமந்திரம் 2008 [ திருமூலர் ]

இதன் சுருக்கமான பொருள் “நுண்மையான சீவனுக்குள்ளேயும், அதி நுண்மையான அணுவுக்குள்ளும் அணுவாக ஆண்டவன் விளங்குகிறான்”

திருவாசகத்தின் இன்னொரு சான்றையும் உங்கள் முன் வைக்கிறேன்.

அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப் பெருந்தன்மை வளப் பெருங்காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரின் துண்ணனுப் புரையலச்
சிறியவாகப் பெரியோன் தெரியின்
திருவாசகம் – திருவண்டப்பகுதி [மாணிக்க வாசகர் ]

இதன் சுருக்கமான பொருள் ” அண்டங்கள் பலவாக உள்ளன அவைகளை எல்லாம் கணக்கிட்டுப் பார்த்தாலோ நூற்றொரு கோடிக்கு மேற்பட்டு நிற்பனவல்லாமல், ஒன்றை விட ஒன்று அளவிட்டறிய முடியாதபடி அழகு பொருந்தியவாகவும் உள்ளது இவ்வண்டங்கள் அணைத்தும் இறைவனின் முன்பு வீட்டின் கூரையில் உள்ள மிகச்சிறிய துவாரத்தின் விழியாக நுழையும் சூரிய கிரணத்தில் தோன்றித் தெரியும் சிறு துகள்களுக்கு ஒப்பாகும் தன்மையதே”

திருவள்ளுவர் 2025 ஆண்டுகளுக்கு முன் இருந்தவர்.

திருமூலர் 4525 ஆண்டுகளுக்கு முன் இருந்தவர். 18 சித்தர்களில் முதன்மையானவர். திருமூலர் இறுதியாக தில்லை சிதம்பரத்தில் ஜீவ சமாதி எய்தினார். 3000 ஆண்டுகள் வாழ்ந்த அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...