பொம்மலாட்டம்
பொம்மலாட்டம் தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது கலை தழுவிய கூத்து வகையைச் சேர்ந்தது.
இது மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான கலை நிகழ்வு.
பாவைக்கூத்து, மரப்பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. தோல் பொம்மலாட்டம், மரப்பொம்மலாட்டம் என இரண்டு வகையில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது.
மிகவும் மெல்லிய நூல்களைக் பொம்மைகளில் இருந்து கட்டித் தொங்கவிட்டு அவற்றை இயக்குவதற்கு தனித் திறமை வேண்டும்.
பொம்மலாட்டத்தில் இதிகாசம் மற்றும் புராணக் கதைகள், சரித்திரக் கதைகள் அதிகம் நிகழ்த்தப்படும்.
குறிப்பாகத் தமிழகத்தில் ராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திர புராணம் அருணகிரி நாதர் வரலாறு, சிறுத்தொண்ட நாயனார் கதை, சீதா கல்யாணம், பக்த பிரகலாதன், ஆண்டாள் கல்யாணம், அரிச்சந்திரன் கதை, வள்ளி திருமணம் ஆகியன நிகழ்த்தப்படுவதுண்டு.
இக்கலை தஞ்சை, திருச்சி, இராமநாதபுரம், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.
வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
Collected from Social Media..
No comments:
Post a Comment