Monday, January 27, 2020

அந்த கால ஒழுக்க பாடம் !!

நீரால் கோலம் போடாதே!
நெற்றியைக் காலியாய் விடாதே!
குச்சியைக் கொளுத்தி வீசாதே!
இரவில் ஊசியை எடுக்காதே!



கால் மேல் காலைப் போடாதே!
காலையில் அதிகம் தூங்காதே!
தொடையில் தாளம் போடாதே!
தரையில் வெறுதே கிடக்காதே!

மலஜலம் அடக்கி வைக்காதே!
நகத்தை நீட்டி வளர்க்காதே!
ஆலயம் செல்லத் தவறாதே!
அதிகமாகப் பேசாதே!

எண்ணெய் தேய்க்க மறக்காதே!
சந்தியில் நீயும் உண்ணாதே!
விரிப்பைச் சுருட்ட மறக்காதே!
பகலில் படுத்து உறங்காதே!

குளிக்கும் முன்பு புசிக்காதே!
ஈரம் சொட்ட நிற்காதே!
நாமம் சொல்ல மறக்காதே!
நல்ல குடியைக் கெடுக்காதே!

தீய வார்த்தை பேசாதே!
நின்று தண்ணீர் குடிக்காதே!
எதையும் காலால் தட்டாதே!
எச்சில் பத்தை மறக்காதே!

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே!
எந்தன் குடியில் மூத்தோரே!
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே!
என்றும் வளமாய்த் தீர்வோரே!

என்ன அழகான வரிகள். இதை நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே!!

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

1 comment:

  1. தமிழ் இரண்டு அதிக அகராதியில் பிராமணர்களும் பார்ப்பனர்கள் ஆரியர்களா கிடையாது தயவு செய்து வரலாற்றை கேட்காதீர்கள் தமிழர்களும் ஆரியர்களும் ஒன்று கிடையாது

    ReplyDelete

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...