Saturday, February 8, 2020

பதினாறுவகை செல்வங்கள்!!

பதினாறு செல்வங்கள்


1. கல்வி
2. புகழ்
3. வலிமை
4. வெற்றி
5. நன் மக்கள்
6. பொன்
7. நெல்
8. நல்லூழ்
9. நுகர்ச்சி
10. அறிவு
11. அழகு
12. பெருமை
13. இளமை
14. துணிவு
15. நோயின்மை
16. வாழ்நாள்

'பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க' என்று வாழ்த்துவது தமிழர் மரபு.

குறிப்பாக, திருமணத்தின் போது மணமக்களை, பெரியவர்கள் இங்ஙனம் வாழ்த்துவர்.

அபிராமி அந்தாதி பதிகப் பாடலொன்று இந்தப் பதினாறு செல்வங்கள் என்னென்ன என்பதை அழகாகக் கூறுகின்றது இப்படி:-

அகிலமதில் நோயின்மை கல்வி தனதானியம் 
அழகு புகழ் பெருமை இளமை 
அறிவுசந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி 
ஆகுநல்லூழ்  நுகர்ச்சி 
தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளிநீ 
சுகானந்த வாழ்வளிப்பாய் -(அபிராமி அந்தாதி பதிகம்)

1.உலகில் நோயின்மை, 2.நல்ல கல்வி, 3.தீதற்ற செல்வம், 4.நிறைந்த தானியம், 5.ஒப்பற்ற அழகு, 6.அழியாப் புகழ், 7.சிறந்த பெருமை, 8.சீரான இளமை, 9.நுண்ணிய அறிவு, 10.குழந்தைச் செல்வம், 11.நல்ல வலிமை, 12.மனத்தில் துணிவு, 13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்), 14.எடுத்தக் காரியத்தில் வெற்றி, 15.நல்ல ஊழ்(விதி), 16.இன்ப நுகர்ச்சி

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...