Sunday, March 22, 2020

ருத்திராட்சம் யார் எப்போது அணியலாம்!?

யார் யார் ருத்திராட்சம் அணியலாம்?

ஆண், பெண் பேதமின்றி யாரும் அணியலாம். வயது வரம்பும் கிடையாது. ஆனால், ருத்திராட்சம் அணிந்தால் சில நடைமுறைகளை, பழக்கவழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும். 


\

யாரெல்லாம் ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளக் கூடாது?

மாமிசம் சாப்பிடுபவர்கள், மது அருந்துபவர்கள் ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளக் கூடாது.


ருத்திராட்சம் அணியவேண்டிய காலங்கள்:


ருத்ராட்சத்தை எல்லா சமயங்களிலும் அணிந்துகொள்ளலாம்.  அந்த இறைவனால் படைக்கப்பட்ட இயற்கையாகவே நடக்கக் கூடிய எல்லா விதமான சம்பவங்களின் போதும் நாம் ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளலாம். 

கடவுளுக்குப் பூஜை செய்யும்போது அணியலாம். பிறருக்கு கல்வி அளிக்கும்போது அணியலாம். புனித நதிகளில் குளிக்கும்போது, பிதுர் தர்ப்பணம் செய்யும்போது, வீட்டில் நடைபெறும் சுப நிகழ்வுகளின்போது அணியலாம். 

இறந்தவர்களின் வீட்டிற்கு சென்றாலும், பெண்கள் பருவம் அடைந்தாலும், தாம்பத்தியத்தின் போதும் ருத்ராட்சத்தை தாராளமாக அணிந்து கொள்ளலாம்.

எந்தவொரு செயலையும் ருத்திராட்சம் அணிந்து செய்யும் போது நமக்கு இறைவனின் அனுகூலம் கிடைப்பதால்,  நிச்சயம் வெற்றி கிட்டும்.

ருத்திராட்சம் அணியும் முன்பாக பின்பற்றவேண்டிய நடைமுறை:

ஒருவார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணெயில் ருத்திராட்சத்தை ஊறவைக்கவேண்டும்.

பின்னர் நீரால் சுத்தப்படுத்தி, ஈரம் காய்ந்த பின்னர் திருநீறில் ஒருநாள் முழுவதும் வைத்திருக்கவேண்டும்.

அடுத்ததாக, பச்சைப் பசும்பாலில் கழுவவேண்டும், பின்பு மீண்டும் நீரால் தூய்மை படுத்தவேண்டும்.

தூய்மையான ருத்திராட்சத்தை  பூஜை செய்து, மந்திரம் ஜபித்து அணியவேண்டும்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

ருத்திராட்சம் அணிவதால் உண்டாகும் பொதுவான நன்மைகள்:

புண்ணிய நதிகளில் நீராடிய நன்மை கிட்டும்.



தீய சக்திகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.

மோட்சத்தை அருளும் சக்தியை வழங்கும்.

லட்சுமி கடாட்சம் கிட்டும்.

புத்திரப் பாக்கியம் உண்டாகும்.

ருத்திராட்சத்தைப் பார்ப்பது மகா புண்ணியம். தொட்டால் கோடி புண்ணியம். அணிந்துகொண்டால் பல கோடி புண்ணியமாகும்.

நம் உடல் பிணிகளைப் போக்கக் கூடியது.

108 ருத்திராட்சம் கொண்ட மாலையை அணிந்தால், 'அசுவமேத யாகம்' செய்த புண்ணியம் உண்டாகும். பாவங்களிலிருந்து விடுதலை கிட்டும்.

ருத்ராட்சமானது நம் மனதினை எதிர்மறை சிந்தனையில் இருந்து பாதுகாக்கிறது.

பார்வதி தேவியாரிடம் பரமேஸ்வரன் உரைத்தது:

ருத்ராக்ஷம் அணிபவரை எல்லா தீய சக்திகளிலிருந்தும் நான் காப்பாற்றுவேன். என்னால் சிருஷ்டிக்கப்பட்ட ருத்திராக்ஷங்களை அணிவோருக்கு நான் மோக்ஷத்தை கொடுக்கிறேன். புத்திர பாக்கியங்களும், லட்சுமி கடாக்ஷமும், வேதாந்த விஞ்ஞானமும், குண்டலினி சக்தியும் அருள்வேன். ஏகாதச ருத்திரனாக இருக்கும் நான் தசமஹா வித்யா ஸ்வரூபத்திலிருந்து, அதாவது உன் ரூபத்தில் பெண்மணிகளின் தோஷங்களை நீக்குகிறேன். வலிமையைப் பெருக்குவேன். ருத்திராக்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். இதற்கு எந்தத் தோக்ஷமும் கிடையாது. என்று பார்வதி தேவியாரிடம் பரிவோடு உரைத்தார் பரமேஸ்வரன் (ஆதாரம் சிவமஹா புராணம்). 

இதை எல்லோரும் பயன்படுத்திக் கொண்டு நிறைவற்ற செல்வமும், குறையற்ற வாழ்வும் பெற வேண்டும்.

தற்போது நவீன உலகின் அணிகலனாய் மாறி வருகிறது ருத்ராக்ஷம். சமயத் துறவிகள் யோகிகள் மட்tuமே அணிந்து வந்த உருத்திராட்சம் தற்போது பொன், வெள்ளி வேறு ஆபரணங்கள் போல், ஆண், பென் வேறுபாடின்றி அனைவரும் அணியும் அணிகலனாய் மாறி வருகிறது. 

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

Wednesday, March 11, 2020

ருத்திராட்சத்தின் வியக்க வைக்கும் இயற்கை குணங்கள் !!

ருத்ராக்ஷத்திற்கு என சில இயல்பு குணங்கள் உண்டு. 

சக்தியூட்டப்பட்ட ருத்ராக்ஷம் அணிந்திருப்பவர்களை மிருகம் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட உண்மை.

இதனால்தான் காடுகளில் தவம்செய்ய செல்லும் ரிஷிகள் தங்களின் உடல் முழுவதும் ருத்ராக்ஷத்தை அணிந்தார்கள்.

ருத்ராக்ஷம் என்பது நமக்கு நிகரான ஒர் உயிரின் வடிவம் என அறிந்து கொள்வது அவசியம்.

நீங்கள் ருத்ராக்ஷத்தை தொடர்ந்து அணிபவராக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் சுக-துக்கங்களின் வெளிப்பாடு ருத்ராக்ஷத்திலும் தெரியும்.

உங்களின் உடலில் அதிகமான உடலுக்கு ஒத்துக்கொள்ளாத வேதிப்பொருட்கள் இருந்தால் ருத்ராக்ஷம் தனது இயல்பு நிறத்தை மற்றிக்கொள்ளும்.

விஷபொருட்கள் உடலில் கலந்தால் ருத்ராக்ஷம் அந்த விஷப்பொருட்களைப் பிரித்தெடுத்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்.

ருத்ராக்ஷம் பயன்படுத்த எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. 

ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது. ஆண்/பெண் என இருவரும் பயன்படுத்தலாம். 

வயது மற்றும் இதர விசயங்கள் தடையாக இருக்காது.

ஆனால் ஒழுக்கமும் தூய்மையும் ருத்ராக்ஷத்திற்கு முக்கியமான ஒன்று.

தூய்மையற்ற நிலையிலும் ஒழுக்கமற்ற நிலையிலும் பயன்படுத்தும் பொழுது ருத்ராக்ஷத்தின் இயல்பு நிலையான தன்மை பாதிக்கப்படுகிறது.

மேலும் தெய்வீகமான ஒர் பொருளை எவ்வாறு பாதுகாப்போமோ அதற்குண்டான மரியாதை செலுத்துவது நல்லது.

குரு தீஷை பெற்றவர்கள் ஜெபம் செய்த பிறகு ருத்ராக்ஷ மாலையை கழுத்தில் அணிவது நல்லது.

ஜெபிக்கப்பட்ட மந்திரமானது ருத்ரக்ஷ மாலையில் தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தி, அதை அணிந்து வந்தால் அன்று முழுவதும் அவர்களை ஆனந்திக்கச் செய்யும்.


வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

ருத்திராட்சம் தோன்றியது எப்படி !?

ருத்ராட்சம் என்பது சிவன் முதல் சித்தர்கள், வரை அணியக்கூடிய ஒரு மிக அற்புதமான, மிக சக்தி வாய்ந்த ஒரு பொருளாக பார்க்கப்படுகின்றது. 

சிவ பெருமான் தன்னை பொன்னால் அலங்கரிக்காமல் ருத்ராட்சம் கொண்டு அலங்கரித்துள்ளார் என்றால் அதன் மகத்துவம் அதிகமாகத் தானே இருக்கும்.

ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே ருத்திராட்சம் ஆகும். இது சிவனின் கண் என போற்றப்படுகின்றது.

ருத்திரன் என்பது சிவபெருமானையும், அட்சம் என்பது கண்களையும் குறிப்பதாகும் சிவனின் முக்கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் சொட்டுகளே 'ருத்திராட்சம்'. 




ருத்ரானான சிவனின் அருளை நமக்கு கொண்டுவருவதற்காக ருத்ராட்சம் அணியப்படுகின்றது.

ருத்திராட்சத்தை அக்குமணி என்றும், கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர்.

சிவபெருமானின் முக்கண்களிலிருந்தும் தெறித்த  ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளே ருத்திராட்சங்களாகின. மொத்தம் முப்பத்தெட்டு விதமான ருத்திராட்சங்கள்  தோன்றின.

வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற ருத்திராட்சங்கள் பன்னிரண்டும், இடது கண்ணில் இருந்து பதினாறு  வெண்ணிற ருத்திராட்சங்களும் தோன்றின. 

நெற்றிக் கண்ணிலிருந்து கருப்பு வண்ணத்தில் பத்து ருத்திராட்சங்கள்  வெளிப்பட்டன.

ஒரு முகம் முதல் 21 முகம் வரை கொண்ட இருப்பத்தொன்று வகை ருத்திராட்சங்கள் உண்டு. 

ருத்திராட்சத்தின் மேல் உள்ள  கோட்டின் எண்ணிக்கையைக் கொண்டு ருத்திராட்சம் எத்தனை முகம் கொண்டது என்பதை அறியலாம்.

கழுத்தில் மாலையாக 32 ருத்திராட்சங்களும், கை மணிக்கட்டுகளில் 12 ருத்திராட்சங்களும், மேல் கையில் பதினாறும்,  மார்பில் நூற்றியெட்டும் தரிக்கலாம்.

சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும். 

சூரியன் எவ்வாறு தன்னுடைய ஆற்றல் மூலம் எவ்வாறு சூரிய மண்டலத்தை உருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில் வைக்கும் சக்தி கொண்டது.

ருத்ராட்சத்தைப் பார்ப்பதும், அணிவதும் மிகப்பெரிய புண்ணியமாக நம்பப்படுகின்றது. ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே புண்ணியம் செய்திருந்தால் தான் வரும் என கூறப்படுகின்றது.

ருத்திராட்சத்தால் ஜபம் செய்கிறவருக்கு அனைத்து மந்திர சித்திகளும் எளிதில் கைவரப்பெறும்.

ருத்திராட்சம் தாம் அணியாவிட்டாலும், அப்படி ருத்திராட்சம் அணிந்தவருக்கு அன்னமளிப்பவர்களும், ருத்திராட்சமரத்தைப் பராமரிக்கிறவர்களும், புதிய ருத்திராட்சத்தை தானம் செய்பவர்களும்,  சிவபெருமானுக்கு ருத்திராட்ச ஆபரணம் அணிவிப்பவர்களும் பல சிறப்பு நலன்களைப் பெற்று வாழ்வாங்கு  வாழ்வார்கள்.


வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...