ருத்ராட்சம் என்பது சிவன் முதல் சித்தர்கள், வரை அணியக்கூடிய ஒரு மிக அற்புதமான, மிக சக்தி வாய்ந்த ஒரு பொருளாக பார்க்கப்படுகின்றது.
சிவ பெருமான் தன்னை பொன்னால் அலங்கரிக்காமல் ருத்ராட்சம் கொண்டு அலங்கரித்துள்ளார் என்றால் அதன் மகத்துவம் அதிகமாகத் தானே இருக்கும்.
ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே ருத்திராட்சம் ஆகும். இது சிவனின் கண் என போற்றப்படுகின்றது.
ருத்திரன் என்பது சிவபெருமானையும், அட்சம் என்பது கண்களையும் குறிப்பதாகும் சிவனின் முக்கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் சொட்டுகளே 'ருத்திராட்சம்'.
ருத்ரானான சிவனின் அருளை நமக்கு கொண்டுவருவதற்காக ருத்ராட்சம் அணியப்படுகின்றது.
ருத்திராட்சத்தை அக்குமணி என்றும், கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர்.
சிவபெருமானின் முக்கண்களிலிருந்தும் தெறித்த ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளே ருத்திராட்சங்களாகின. மொத்தம் முப்பத்தெட்டு விதமான ருத்திராட்சங்கள் தோன்றின.
வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற ருத்திராட்சங்கள் பன்னிரண்டும், இடது கண்ணில் இருந்து பதினாறு வெண்ணிற ருத்திராட்சங்களும் தோன்றின.
நெற்றிக் கண்ணிலிருந்து கருப்பு வண்ணத்தில் பத்து ருத்திராட்சங்கள் வெளிப்பட்டன.
ஒரு முகம் முதல் 21 முகம் வரை கொண்ட இருப்பத்தொன்று வகை ருத்திராட்சங்கள் உண்டு.
ருத்திராட்சத்தின் மேல் உள்ள கோட்டின் எண்ணிக்கையைக் கொண்டு ருத்திராட்சம் எத்தனை முகம் கொண்டது என்பதை அறியலாம்.
கழுத்தில் மாலையாக 32 ருத்திராட்சங்களும், கை மணிக்கட்டுகளில் 12 ருத்திராட்சங்களும், மேல் கையில் பதினாறும், மார்பில் நூற்றியெட்டும் தரிக்கலாம்.
சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும்.
சூரியன் எவ்வாறு தன்னுடைய ஆற்றல் மூலம் எவ்வாறு சூரிய மண்டலத்தை உருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில் வைக்கும் சக்தி கொண்டது.
ருத்ராட்சத்தைப் பார்ப்பதும், அணிவதும் மிகப்பெரிய புண்ணியமாக நம்பப்படுகின்றது. ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே புண்ணியம் செய்திருந்தால் தான் வரும் என கூறப்படுகின்றது.
ருத்திராட்சத்தால் ஜபம் செய்கிறவருக்கு அனைத்து மந்திர சித்திகளும் எளிதில் கைவரப்பெறும்.
ருத்திராட்சம் தாம் அணியாவிட்டாலும், அப்படி ருத்திராட்சம் அணிந்தவருக்கு அன்னமளிப்பவர்களும், ருத்திராட்சமரத்தைப் பராமரிக்கிறவர்களும், புதிய ருத்திராட்சத்தை தானம் செய்பவர்களும், சிவபெருமானுக்கு ருத்திராட்ச ஆபரணம் அணிவிப்பவர்களும் பல சிறப்பு நலன்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
Collected from Social Media..
No comments:
Post a Comment