Monday, April 20, 2020

நீங்க என்ன நட்சத்திரம்? எந்த ருத்திராட்சம் போடலாம்?

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த ருத்ராக்ஷங்கள் நமது அற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.



ஆனால் ருத்ராக்ஷத்தைப் பொறுத்தவரை எதை அணிந்தாலும் நிச்சயம் தீங்கு பயக்காது. மிக்க நலத்தையே நல்கும்.

ருத்ராக்ஷத்தை ஆங்கிலத்தில் Elaco Carpus Seed என்பர். ஒவ்வொருவருடைய நட்சத்திரத்திற்கும் ஏற்ற ருத்ராக்ஷங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றை நல்ல நாள் பார்த்து பாலில் நனைத்து தெய்வ சந்நிதியில் அணிவது மரபு.

ருத்ராக்ஷம் அணிய மிக உத்தமமான நட்சத்திரமாக பூசம் என்று நம் அற நூல்களில் குறிப்பிடப்படுகிறது. 

இதனுடைய அதிபதி சனி. இந்த நட்சத்திரத்தில் பிருஹஸ்பதி உச்சத்தில் இருக்கிறார். ஆகவே வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய அதி உன்னதமான நாளில் ருத்ராக்ஷம் அணிந்தால் மிக சிறப்பாகும். 

வாரம் ஒரு முறை வியாழக்கிழமையும் மாதம் ஒரு முறை பூச நட்சத்திரமும் வந்தாலும் கூட இவை இரண்டும் இணைவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான்! 

ஆகவே அந்த நாளைக் குறித்து வைத்துக் கொண்டு ருத்ராக்ஷம் அணிதல் வேண்டும்.

நட்சத்திரம் - கிரகம் - அணிய வேண்டிய ருத்ராக்ஷம்

1) அஸ்வினி - கேது - நவமுகம்
(Alpha, Beta - Aries)

2)பரணி - சுக்ரன் - ஷண்முகம்
(No 28,29,41 Taurus)

3)கார்த்திகை - சூர்யன் - ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்
(Pleiades)

4)ரோஹிணி - சந்திரன் - த்விமுகம்
(Aldebaran Hyades, Epsilon Taurus)

5)மிருகசீரிஷம் - செவ்வாய் - த்ரிமுகம்
(Lambda, Phi 1, Phi 2, Orion)

6)திருவாதிரை - ராகு - அஷ்டமுகம்
(Betelgeaux - Alpha Orion)

7)புனர்பூசம் - ப்ருஹஸ்பதி - பஞ்சமுகம்
(Castor, Pollux with Procyon Alpha, Beta, Gemini-Alpha Canis Minor respectively)

8)பூசம் - சனி - சப்தமுகம்
(Gama, Delta and Theta of Cancer)

9) ஆயில்யம் - புதன் - சதுர்முகம்
(Delta, Epsilon, Eta, Rho and Zeta Hydra)

10) மகம் - கேது - நவமுகம்
(Alpha, Ela, Gama, Zeta My and Epsilon Leonis)

11)பூரம் - சுக்ரன் - ஷண்முகம்
(Delta and Theta Leo)

12)உத்தரம் - சூர்யன் - ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்
( Beta and 93 Leo)

13)ஹஸ்தம் - சந்திரன் - த்விமுகம்
(Delta, Gama, Eta, Virgo)

14)சித்திரை - செவ்வாய் - த்ரிமுகம்
(Spica, Alpha Virgo)

15)ஸ்வாதி - ராகு - அஷ்டமுகம்
(Arcturus - Alpha Bootes)

16)விசாகம் - ப்ருஹஸ்பதி - பஞ்சமுகம்
( Alpha, Beta etc Libra)

17)அனுஷம் - சனி - சப்தமுகம்
(Beta, Delta, Pi -Scorpia)

18)கேட்டை - புதன் - சதுர்முகம்
( Antares Alpha, Sigma Tau Scorpio)

19)மூலம் - கேது - நவமுகம்
(Scorpio, tail stars)

20)பூராடம் - சுக்ரன் - ஷண்முகம்
(Delta and Epsilon Sagittarius)

21)உத்திராடம் - சூர்யன் - ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்
(Zeta and Omicron Sagittarius)

22)திருவோணம் - சந்திரன் - த்விமுகம்
(Altair - Alpha Aquila)

23)அவிட்டம் - செவ்வாய் - த்ரிமுகம்
(Delphinus)

24) சதயம் - ராகு - அஷ்டமுகம்
(Lambda Aquarius)

25)பூரட்டாதி - சனி - பஞ்சமுகம்
(Alpha and Beta Pegasus)

26)உத்திரட்டாதி - சனி - சப்தமுகம்
(Gama Pagasus and Alpha Andromeda)

27)ரேவதி - புதன் - சதுர்முகம்
(Zeta Piscum)

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

ருத்திராட்சம் தரம் சோதனை பண்ணுவது எப்படி !?

ருத்ராஷம் எனும் இயற்கையில் விளையும் இந்த காய் (விதை) கனி வடிவம் பெருவதில்லை.

அத்தி பூக்காது விதை அளிப்பது போல ருத்ராஷம் விதை தன்மை கொண்டது.



மித வெப்பமும் மிதமான குளிரும் கொண்ட பகுதிகளில் ருத்ராஷம் விளைகிறது.

இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில், ருத்திராட்சம் என்பது புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது.

மருத்துவ குணம் கொண்ட ருத்திராட்ச காய்களை அணிவதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை கிடைப்பதாக தொன்று தொட்டு நம்பப்படுகிறது.

பொதுவாக, மலைப் பகுதிகளில் மட்டுமே இந்த மரங்கள் வளரும். தமிழகத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலையின், பல பகுதிகளில் ருத்திராட்ச மரங்கள் காணப்படுகின்றன. 

ருத்திராட்ச பழங்களை காய வைக்கின்றனர்.அதில் இருந்து ருத்திராட்ச காய்களை பிரித்தெடுக்கின்றனர். 

வனப்பகுதிகளில் மரக் குச்சிகளை பொறுக்குவதற்காக ஆதிவாசி இன மக்களுக்கு அனுமதி தரப்படுகிறது. 

அவர்கள், ருத்திராட்ச பழங்களை பொறுக்கி வந்து, மாலைகளாக தயார் செய்து விற்கின்றனர். 

ஆண்டு முழுவதும் ருத்திராட்ச மரத்தில் காய்கள் காய்க்கும் என்பது தான் தனிச்சிறப்பு.
ருத்ராக்ஷத்தில் போலியான மணிகள் வருவதுண்டு. 

இதை எவ்வாறு கண்டறிவது என குழப்பம் அனைவருக்கும் உண்டு.

ருத்ராக்ஷம் தனக்கெனசில தனித் தன்மைகளைக் கொண்டது. தாவர வகையாக இருந்தாலும் நீரில் மூழ்கிவிடும்.

மரவகைகள் நீரில் மிதப்பதைப் போல மிதக்காது. ருத்ராக்ஷத்தில் செயற்கையாக எதையும் இணைக்க முடியாது.

ருத்ராக்ஷ மணியின் துளைகளுக்கு அருகே செப்பு நாணயங்களை வைத்தால் ருத்ராக்ஷம் காந்தப்புலம் விலகுவதை போல வேறு திசைக்கு மாற்றமடையும்.

ருத்ராக்ஷம் போன்ற உருவத்தில் இருக்கும் சில மரவகைகள் உண்டு.

இதை" பத்ராட்சம் " என அழைப்பார்கள்.

இதில் சாயத்தைக் கொடுத்து ருத்ராக்ஷம் போல விற்பனை செய்வார்கள். 

தகுந்த பரிசோதனைக்குப் பிறகு வாங்குவது நல்லது.

சாணைக்கல்லில் உரைத்தால் மஞ்சளாக தங்கம்போல் பிரகாசிப்பதும், நல்ல வர்ணமுள்ளதுமானது தான் ருத்திராட்சம்.

தண்ணீரில் போட்டால் மூழ்குவதும், இரு செப்புத் தகட்டுக்கு இடையில் வைத்து சோதனை செய்தால் சுற்றக்கூடியது மான ருத்திராட்சம் ஆகியவை மிகவும் விசேஷமானவை.


வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

Sunday, April 12, 2020

ருத்திராட்சத்தின் மருத்துவ குணங்கள் !!

ஐந்து முக ருத்திராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறுவிட்டு இழைத்து, அந்த சாற்றை தேள் கொட்டிய  இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். 



இந்த ருத்திராட்சம் தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல  நிவாரணி.

இதை பால்விட்டு இழைத்து அந்த சாந்தை கண் இமைகள் மீது தடவிக்கொண்டால் நிம்மதியான உறக்கம்  வரும். 

இந்த ருத்திராட்சத்தைத் தூளாக்கி, துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும். 

தண்ணீரில் இதைப் போட்டு சில மணிநேரம் ஊற வைத்து பிறகு ருத்திராட்சத்தை நீக்கிவிட்டு தண்ணீரை உட் கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணமாகும்.

சிரசு,உரசு,புஜம் என்பவற்றில் ருத்திராட்சை அணிந்தால் சிவனுக்கு சமமாக மாறலாம் என்றும் எல்லா முயற்சிகளும் சாதனைகளாக்கலாம் என்றும்,அவர்வசிக்கும் பிரதேசமே புண்ணிய பூமியாகுமென்றும் கூறுகின்றார்.

புராணங்கள் எடுத்துரைப்பதற்கு மேல் மருத்துவத்துறை இதன் நற்குணங்களை மிகவும் புகழ்கின்றது. 

ருத்திராட்சை கழுத்திலணிவதால் புற்று நோய்முதலிய நோய்கள் கூட தணியும் என்று அண்மையில் வெளிவந்துள்ள சில ஆராய்ச்சிக்குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

பித்தம்,தாகம் விக்கல் போன்றவை மாறுவதற்கு ருத்திராட்சை நல்லது என்று ஆயுர் வேதம் உறுதிகூறுகின்றது. 

கபம்,வாதம்,தலைவலி முதலிய பல நோய்களுக்கும் துன்பங்களுக்கும் ருத்திராட்சம் மருந்தாகும் என்று ஆயுர் வேதம் கூறுகின்றது.

ருசியை விருத்தியடையச் செய்யும் என்று ருத்திராட்சையைச் சிறப்பித்து நிரூபித்திள்ளனர். 

இது சில மன நோய்களுக்கும் சாந்தமளிக்கும் என்று கண்டுள்ளனர்.

மேலும் பல மருந்துகளிலும் ருத்திராட்சை ஒரு சேர்வைப் பொருளாகும். 

ருத்திராட்சம் வறுத்து நாவில் பூசினால் பேச்சுத்திறனை மறுபடியும் பெற்றுள்ளதாக பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

ருத்திராட்சை பசுவின் சிறுநீர்,துளசிநீர்,இளநீர்,பிரம்மி என்பவை சேர்த்து பிரம்ம முகூர்த்தத்தில் அருந்துவது புத்தி விருத்தியடைய உதவும் எனக் கண்டறிந்துள்ளனர்.

கண்டகாரி, திப்பலி என்பவையுடன் ருத்திராட்சை சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும். 

பார்க்கப் போனால் ருத்திராட்சையின் ஒளடத குணங்கள் ஏராளம் ஏராளம்.

இதனால் தான் ருத்திராட்சை அணிவதிலும் நம் முன்னோர்கள் மிகமுக்கியத்துவம் அளித்திருந்தனர்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

ருத்திராட்சத்தின் முகங்களும் அதன் அதிதேவதைகளும் !!

சிவனின் வடிவமான ருத்திராட்சத்தின் முகங்களையும் அதன் அதிதேவதைகளையும் காண்போம். 

முகம் என்பது ருத்ரக்ஷ மணிகள் மேல் உள்ள செங்குத்தான கோடுகள் ஆகும். 

நெல்லிக்காய் அளவுள்ள ருத்திராட்சம் உத்தமம். இலந்தைப்பழ அளவு மத்யமம். கடலை அளவு அதமம். 

ஒரே அளவுள்ளதும், உறுதியானதும், சம முத்துகள் போன்றதுமான ருத்திராட்சங்களைப் பட்டுக் கயிறு, தங்கம், தாமிரம் அல்லது பருத்தி நூலில் மாலையாக அணிவது நல்லது. 



அணியக்கூடாத ருத்திராட்சங்கள்:
புழுக்கள் குடைந்ததும், நசுக்கியதும், நோயுற்றதும்.

ஒவ்வொரு முக தன்மைக்கு ஏற்ப ருத்ராக்ஷம் ஆற்றலை வேறுபடுத்துகிறது என்றும் அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் வேறுபடுகிறது என்றும் கூறுகிறார்கள். 

ஏக முக ருத்திராட்சம்:
பரத்துவ சொரூபம். மிகவும் அரிதாக ஒரு முக ருத்ராட்சம் (ஏக முகம் ருத்ராட்சம்) காணப்படுகின்றது. இதை அணிந்தால் பரத்துவத்தை அடையலாம்.

இருமுக ருத்திராட்சம்:
அர்த்தநரீஸ்வரன் உருவம் உடையது. இதனை அணிந்தால் சிவசக்தி ப்ரீதி ஏற்பட்டும்.

மும்முக ருத்திராட்சம் :
மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது. இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.

நான்கு முக ருத்திராட்சம்:
பிரம்மனின் சொரூபம். இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.

ஐந்து முக ருத்திராட்சம்:
பிரம்ம சொரூபம் கொண்டது. இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.

ஆறுமுக ருத்திராட்சம்: 
அதிதேவதை சுப்ரமண்யர். இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன், பக்தியும், அறிவும், செல்வமும், சுத்தியும் எய்தும்.

ஏழு முக ருத்திராட்சம்:  
அதிதேவதை சப்தமாதா. இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கும்.

எட்டு முக ருத்திராட்சம்:  
அஷ்ட கணபதியின் அம்சம். அஷ்ட வசுக்களும், கங்கையும் ப்ரீதி அடையும். அதிதேவதை அஷ்டவசு.

ஒன்பது முக ருத்திராட்சம்:  
நவசக்திகளும் இன்பமடையும். இதன் அதிதேவதை நவசக்தி.

பத்துமுக ருத்திராட்சம்:  
அதிதேவதை விஷ்ணு. இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் முக்தி ஏற்படும்.

பதினொரு முக ருத்திராட்சம்:  
அதிதெய்வம் பதினொரு உருத்திரர். இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.

பன்னிரண்டு முக ருத்திராட்சம் :
மகாவிஷ்ணுவின் சொரூபம். இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.

பதின்மூன்று முக ருத்திராட்சம்:
போகத்தையும், சித்தியையும், சுகத்தையும் கொடுக்கிறது. இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.

பதினான்கு முக ருத்திராட்சம்:
உருத்திர நேத்திரத்தில் உண்டாகியது.  சகலவிதமான நோய்களையும் நீக்கி என்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.

கெளரி சங்கர் ருத்ராட்சம் :
இரண்டு ருத்ராட்சங்கள் இணைந்து இருக்கும் கெளரி சங்கர் ருத்ராட்சம் அணிவதன் மூலம் , அம்மை, அப்பனை சேர்த்து இருக்கக் கூடிய பலனை தரும்.


12 முதல் 21 வரை ருத்ராட்சங்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கின்றன. மொத்தம் 38 வகை ருத்ராட்சங்கள் இந்த பூமியில் தோன்றியது. தற்போது 1, 11, 7, 8, 9 முக ருத்ராட்சம் இவை எல்லாமல் அபூர்வமாகக் கிடைக்கின்றன. மிக அதிக விலை கொண்டதாக உள்ளது.

108 ருத்திராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவன் அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகிறான்.

ருத்திராட்சத்தின் அடி பிரம்மா. நாளம் விஷ்ணு. முகம் உருத்திரர். 

அர்ச்சனை, ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணிந்தால் அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.

எளிதாகக் கிடைக்கும் ருத்ராட்சம் :
பொதுவாக 5 முகம், 6 முகம் கொண்ட ருத்ராட்சம் அதிகளவில் கிடைக்கின்றன. விலை உயர்வாக சொல்லப்படும் ருத்ராட்சங்களை வாங்க முடிந்தவர்கள் குறைவான விலையில் கிடைக்கும் 5 அல்லது 6 முக ருத்ராட்சத்தை அணிந்து ஈசனின் அருள் பெறலாம்.


வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...