Friday, August 14, 2020

திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன்?

திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன்?

திருமணமான பெண்கள் நெற்றி உச்சியில் குங்குமம் இட்டும், கால் விரலில் மெட்டியும் அணிகின்றனர். ஆரம்ப காலத்தில் திருமணமான ஆண்கள்தான் மெட்டியை அணிந்தனர். காலப் போக்கில் இப்பழக்கம் பெண்களுக்கு உரியதாக மாறிவிட்டது.

கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. இம்மெட்டி நடக்கும் போது  அழுத்தப்படுவதால் கருப்பை வளர்ச்சிக்கு இந்த அழுத்தம் பெரிதும் உதவுகின்றது, அதனால்தான் திருமணத்தில் பெண்கள் காலில் மெட்டியை அணிகின்றனர். காலில் கீழ்ப்பகுதியில் இதயம் முதல் மூளை நரம்புகள் வரை எல்லாவற்றையும்  கட்டுப்படுத்தும் மிக நுண்ணிய நரம்பு ஸ்தானம் உள்ளன.

 மெட்டி தேய்ந்த பிறகு தூக்கி எறியக் கூடாது. அதை அப்படியே கடையில் கொடுத்து உருக்கி வரும் புது வெள்ளியால் தான்  மறுபடியும் மெட்டி செய்ய வேண்டும். எந்த காரணம் கொண்டும் மெட்டியை காலிலிருந்து நீக்கலாகாது என்பர் பெரியோர்கள்.  அக்காலத்தில் மணமகனுக்கும் மெட்டி உண்டு என்று திருமங்கை ஆழ்வாரின் வரலாற்றிலிருந்து தெரிய வருகிறது. இப்பொழுதும் கூட திருமணத்தின் போது ஆண்களுக்கும் மெட்டி அணியும் பழக்கம் உண்டு.


No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...