Thursday, January 21, 2021

வவ்வால்கள் இரையை எப்படி கண்டறியும்!?

பள்ளியில் படித்தபோது வவ்வால்கள் எப்படி இரையை கண்டுபிடித்தால் நமக்கு என்ன என்று கிண்டலடித்து இருப்போம். ஆனால், அப்போது நமக்கு தெரியாது அதை எவ்வாறு நம்முடைய அன்றாட வாழ்வில் தொடர்புபடுத்திப் பார்ப்பது என்று.

விமான மற்றும் ஆம்புலன்ஸ் சைரன் ஒலி போன்றவை நம்மை நோக்கி வருகையில் அதிக ஒலியுடனும் நம்மை விட்டு விலகும் போது குறைவான ஒலியும் கேட்பதன் காரணத்தை அறிவீர்களா? 

நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பார்வையாளருக்கு ஒளி/ஒலியின் ஆதாரத்தை பொறுத்து அதிர்வெண் மாறுபடும் என்பதே "டாப்ளர்" விளைவு.

இதை எளிமையாக ஒரு (எ.கா) பார்ப்போம்.  ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலையில் கல்லை விட்டு எறிந்தால் வட்ட வடிவிலான அலைகளை உருவாகுவதை பார்த்திருப்போம்.

அப்படி உருவாகின்ற அலைகளில், இரு அலைகளுக்கு இடைப்பட்ட இடைவெளி, அலைநீளம் (wavelength) என்று சொல்லப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட புள்ளியை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அடைகின்ற அலைகளின் எண்ணிக்கை அதிர்வெண் (frequency) என்று சொல்லப்படுகிறது.

இதைப்போலவே, நிலையாக நிற்கின்ற ஒரு வாகனத்தில் உருவாகின்ற ஒலி அனைத்து திசைகளிலும் ஒரே அதிர்வெண்ணில் மற்றும் அலைநீளத்தில் பரவுகிறது. 

வவ்வால்கள் நம் காதுகளால் கேட்க முடியாத ஒரு ஒலியை எழுப்புகின்றன. 

அந்த ஒலி எதிரில் வருகின்ற இரையின் மீது பட்டு எதிரொலித்து வவ்வாலை மீண்டும் சென்றடைகிறது. எதிரொலித்த ஒலியின் அதிர்வெண்ணை (frequency) கொண்டு இரை நெருங்குகிறதா அல்லது விலகுகிறதா என்பதை வவ்வால் அறிகின்றது.

தற்போது, கன மழையை முன்கூட்டியே கண்டறிவது எப்படி, டைட்டானிக்கில் பனிப் பாறையை கண்டறிந்தது எப்படி என்று நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும். 

இவை அனைத்திற்கும் தனித்தனியே ரேடார் என்ற கருவிகள் இருக்கின்றன. அவற்றில் சிறு சிறு மாற்றம் இருந்தாலும் அவை அனைத்தும் செயல்படும் விதம் ஒலியை எழுப்பி, எதிரொலியை கொண்டு அதன் இருப்பிடத்தைக் கண்டறிவதே ஆகும்.

இது மேகங்கள், மழைத்துளிகள் மற்றும் பனிப் பாறைகளை கண்டறிவதற்கு மட்டுமல்ல. இதைக்கொண்டு கார்களை "ஆட்டோ-பைலட்" என்று சொல்லப்படும் ஓட்டுனர் இன்றி செலுத்தும் வழியை கண்டறியவும்  பயன்படுகிறது. 

ஒவ்வொரு விசயத்திலும் அறிவியல் உண்டு. அதை நாம் உணர்ந்து கற்க வேண்டும். நம் மூளையின் பகுத்தறியும் திறனை தட்டி எழுப்புவோம்!

Collected from Social Media.    

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...