Monday, May 28, 2018

தொப்புளில் எண்ணை போடுங்கள் !!!

சித்தர்களின் பரிசு படித்ததில்!!!

தொப்புளில் எண்ணை போடுங்கள்!

நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. 



ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.

நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்! அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.

காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது
.
நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

முழங்கால் வலி: தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?
 நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும்.

ஒரு குழந்தைக்கு வயிற்று வலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை 

Collected from Social Media...

Monday, May 21, 2018

பா(ப)ரத எல்லை!!

"இந்தியா ஒரே நாடு"... உரக்கச் சொல்லுவோம்....



இந்தியா ஒரே நாடு அல்ல, பல நாடுகளின் கூட்டமைப்பு என்று…. ஒரு சில பிரிவினைவாதிகளின் குரலை யாரும் கண்டு கொள்ளாத போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது !

எனவே தெளிவு படுத்தும் கடமை தேசபக்தனின் தோள்களில் !

மலையையும் கடலையும் காரணமாக்கிக் காலம் படைத்த *தீப கற்பம்* இது !

இந்த கற்பத்தில்தான் உலகின் ஆன்மீகக் குழந்தை அவதரித்தது !

ஆதியில்  இதனை  நாவலந் தீவென்றே நானிலம் அறியும் !

துணைக் கண்டம் என்று புவியியலார் புகழ்வதுண்டு !

தென்னாடுடைய சிவன் இமயத்திலும் இமவான் மகள் குமரியிலும் இடம் மாறி இருந்து எல்லை வகுத்தனர் !

கயிலைப் பெருமான் கல்யாணம் செய்தது மதுரைப் பாண்டியன் மகளை அல்லவா!

இதிகாசங்கள் இரண்டும் பேசாத இடங்களே இல்லை இந்தியாவில் !

வடபுலத்து இராமன் தென்கோடியில் கட்டிய கோயில் *இராமேஸ்வரம்* !

காந்தாரச் சகுனி முதல் கடலோரப் பாண்டியன் வரை பங்கெடுக்காதவர் யார்? பாரதப் போரில் !

கங்கை நீரையும் கயிலைக் கல்லையும் கொண்டு வந்து தான் பத்தினிக் கோட்டத்தைக் கட்டி முடித்தான் செங்குட்டுவன் !

ஆதி முதல் தீர்த்த யாத்திரை  காசி – இராமேஸ்வரம் என்பதாய்த் தானே காணப்படுகிறது !

கயிலையில் புறப்பட்ட அகத்தியருக்குத் தெரியும் *பாரத எல்லை* *நெல்லைக்கு அப்பால்* *இல்லை* என்று !

அதனால்தான் பொதிகையைத் தாண்டி போகவில்லை அவர் !

வடக்கே அவதரித்த பரசுராமர் அந்திமத்தில் அமைதி கொண்டது தென்னகத்துக் கேரளம் !

பாரதம் முழுவதையும் பாதத்தால் அளந்த கேரளத்துச் சங்கரர் பீடம் ஏறியது காஞ்சி நகர் !

கயிலை முனிவரே  மூலனாய் மாறி மூவாயிரம் பாடலில் திருமந்திரத்தைத்  திரட்டிக் கொடுத்தார் !

வடகயிலை சுந்தரர்தான் தென்னகத்தில் தமிழ் வளர்த்தார் !

காரைக்கால் அம்மையும் கரசேவை அப்பரும் வடகயிலை சென்று தென்தமிழில் பாடினர் !

கேரளத்துச் சேரலன் கவிதைத் தொகுதியை வெளியிட்ட இடம் வடகயிலை என்பது வருணன் தரும் செய்தி !

மெய்கண்டாருக்குச் சித்தாந்தம் சொன்னவர் வடகயிலை பரஞ்சோதி  என்பதே வரலாறு !

காசி மடத்தைக் கட்டி ஆண்டவர் கன்னித் தமிழ் நாட்டுக் குமரகுருபரர் !

ஆண்டாள் மாலை அழகு செய்யாமல் திருப்பதியில் திருவிழா ஏது ?

விவேகானந்தரின் வேதாந்த அறிவு அமெரிக்காவை ஆட்டிப் படைத்தது சேதுபதியின் செலவில்தானே !

வடக்கே பிறந்து தெற்கே புகுந்து புதுவை மண்ணை புனிமாக்கினார் அரவிந்தர் !

ஆந்திராவின் அற்புதமானார் தமிழகம் தந்த இராகவேந்தர் !

ஒருங்குடன் ஆண்ட பரதன் பெயரால் *பாரதம்* என்பதே பழம் பெயராகும் !

இந்திய எல்லையை எடுத்துக் காட்டும்  சங்க இலக்கியச் சான்றுகள் பற்பல !

இட்டப் பொட்டும் கட்டிய புடவையும் *இந்தியப் பெண்* என எடுத்துக் காட்டும் !

இந்தியா முழுவதும் எல்லா வீட்டிலும் யாராவது ஒருவருக்கு வடமொழிப் பெயராய் !

*பாரத தேசம்* *பழம் பெரும் தேசமாம்* பாரதி புலவனும் பாடி மகிழ்ந்தான் !

வடக்கே இருக்கும்  திரிவேணி சங்கமம் தெற்கே வந்தால் முக்கூடலாகும் !

எடுத்துக் காட்டுகளை அடுக்கத் தொடங்கினால் முடிவாய்ச் சொல்ல முந்நூறு நாட்கள் முழுமையாய்த் தேவை !

பெரிய தேசத்தில் வேறுபாடுகள் இருப்பதே இயற்கை ! *வேறுபாடுகளைக்* *கூறுபடுத்தி* 

*பிரிவினைப் பேசும்* *பித்தர்கள் எத்தர்களாய்!* விரல்களின் அளவு வெவ்வேறாயினும் 

*உள்ளங்கை* *ஒன்றுதான்* என்பதை  உணர மறுக்கும் குருடர்களுக்கு 
விளக்கினாலும் விளங்காது !

*சோழநாடு* *சேரநாடு* *பாண்டியநாடு* *கொங்குநாடு* *நடுநாடு* *ஆப்ப நாடு* என்றெல்லாம் பிரிந்து கிடந்த தமிழ்நாடு ஒரே மாநிலமாய் உருப்பெற்றதற்குத் தமிழ் மொழியே அடிப்படை !

பல மாநிலங்களையும் சேர்த்து  *பாரத நாடென* பறை சாற்றுவதற்கு ஆன்மீகப் பண்பாடே அடிப்படை !

அழகான மாலையில் பல பூக்கள் இருப்பதால் அது  மாலையே இல்லை தனித்தனிப் பூக்கள் தான் என்று  அடம்பிடிப்போரிடம் அகப்பட்டு விடாதீர் !

*பிரிவினை நோய்* *பிடித்துக் கொள்ளும்* !!!

நாம் இந்தியர் என்பதில்  பெருமிதம் கொள்வோம்! இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்!

வாழ்க பாரதம்!
வந்தே மாதரம்!
ஜெய்ஹிந்த்!

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை 

Collected from Social Media...

Thursday, May 17, 2018

சித்தர்கள் சொல்லி சென்ற 8 க்குள் ஒரு யோகா !

அனைத்து நோய்களுக்கும் தீர்வு!  சித்தர்கள் சொல்லி சென்ற 8 க்குள் ஒரு யோகா ! முயற்சி செய்து பாருங்கள்!



“எட்டு” போடுகிறவனுக்கு “நோய் எட்டிப் போகும்” என்பது ஒரு பழமொழி.

நம்முடைய வீட்டில் முன்னாடி எல்லாம் நம் பெற்றோர்கள் ஒரு எட்டு போயிட்டு வா என்று சொல்லி கேள்விப் பட்டிருப்போம். அதனுடைய அர்த்தம் இதுதான் ..

சித்தர் வழி என்பது அனைத்துக்கும் தெளிவான விடைகளை தருகிறது. சித்தர்கள் :
"எட்டுப் போடு! எல்லாம் பறந்தோடும்!" என்கிறார்கள்.

மனித உடல் அவரவர் கை அளவுக்கு "எண்ஜான்" அளவுமட்டும் இருக்கும் !!

உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து, 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு அதற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள் !!

இது தெற்கு வடக்காக நீளப் பகுதி இருக்கணும். காலை அல்லது மாலை, வடக்கு நோக்கி நின்று அந்த 8 வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள்.

ஆண்கள் வலது கை பக்கமும் பெண்கள் இடது கை பக்கமும் நடக்க ஆரம்பிக்கணும். ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து 21 நிமிடம் நடக்கணும். பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று இதேபோல் 21 நிமிடம் கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் நடை பயிற்சி செய்யணும்.

இப்படி 42 நிமிடம் செய்வதால் கீழ் கண்ட நிகழ்வுகளை கண்கூடாக காணலாம்.

1. பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி கரைந்து வெளியேறுவதை காணலாம்.                   
2. இந்த பயிற்சியை இருவேளை செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள் சிவந்திருப்பதை காணலாம். அதாவது ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று அர்த்தம்.
3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை வியாதி) குறைந்து முற்றிலும் குணமாகும். (பின்னர் மாத்திரை, மருந்துகள் தேவை இல்லை).
4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,மலச்சிக்கல் போன்றவை தீரும்.
5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.
6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.
7. உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும்.
8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும். 
9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில் வரும்.
10. பாத வலி, மூட்டுவலி மறையும்.
11. சுவாசம் சீராகும் அதனால் உள் உருப்புக்கள் பலம் பெரும்.

சரி! இதெப்படி நடக்கிறது என்று உங்களுக்குள் கேள்வி ஏழும்.

“8” வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள்..

அந்த வடிவம் “முடிவில்லாதது” மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சமநிலை படுத்துகிறது என்பதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்தனர் சித்தர்கள். விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து பலனடையுங்கள்

நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்யலாம்…

1வது 21 நாளில் ---- சர்க்கரைநோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல் , குதிவாதம் , வடகலை நாடி- இடகலை நாடி புத்துயிர் பெரும் !!!
2 வது 21 நாளில் ---- மூட்டு வலி , ஒட்டுக்கால் , பிரச்னை குறையும் ,!!!!
3 வது 21 நாளில் ---- தொடை பகுதி பலம் பெரும் ,!!!!
4 வது 21 நாளில் ---- ஆண்மை குறைபாடு , விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு , விந்து நாத அணு குறை பாடு , கல்லீரல் மண்ணீரல் குறைபாடு , கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை , மாதநாள் குறைபாடு ,ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் .!!!
5 வது 21 நாளில் ---- வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும் !!!!,
6 வது 21 நாளில் --- இரத்த அழுத்தம் , இதய நோய் , ஆஷ்துமா , காசம் ,நீர் உடம்பு , உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும் !!!!
7 வது 21 நாளில் --- தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு , முதுகில் வாய் பிடிப்பு வராது ,
8 வது 21 நாளில் --- அன்னாக்கு பகுதி விழிப்படையும் , வாய் கண் காது மூக்கு கருவிகள் நோய் தன்மை தாக்காது , 2 நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும் , மூளைப் பகுதி விழிப்படையும் , மூளைப் பகுதி நோய் தீரும் , தியானங்கள் கை கூடும்.

இதை செய்ய வயது வரம்பு இல்லை , இப்பயிற்சி நீங்கள் வாசி யோகத்திற்கு இணையானது, அதை செய்த தவப்பயனை பெறுவீர்கள் !!

இந்த 8 நிலைகளில் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உயிர் , மனம் உடல் ஒன்றாகி காலன் தள்ளி நிர்ப்பான் . மெளனமாக நடக்கணும் அல்லது ஏதாவது இறை நாமத்தை மனதில் செபித்தவாறு நடக்கணும் , வாய் வழியாக சுவாசம் கூடாது !!!!

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

Saturday, May 5, 2018

ஒரு தோசைக்கு பின்னால் ஆன்மிக, ஜோதிடமா...

#தோசை

நாம் அன்றாட உண்ணும் தோசையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மிகமும், ஜோதிடமும்...

தோசை செய்ய உபயோகிக்கும் பொருட்களுள் நவ கிரகங்கள் அடக்கம்.


அக்னி -சூரியன்
அரிசி-சந்திரன்
உளுந்து -ராகு-கேது
வெந்தயம் -புதன்
தோசை கல் (இரும்பு)-சனி
தோசையின் நிறம்-செவ்வாய்
அதை உண்பவர்கள் 
குரு(ஆண்) ,சுக்கிரன்(பெண்)


இதன் உருவம் (Galaxy) பிரபஞ்சமே

தோசையை Clock vice சுடுவது வழக்கம். பிரபஞ்சம் சுற்றுவதும் அப்படித்தானே.

இந்த தோசை ஒரு ஜோதிட பரிகாரமாக  நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.

ஆரம்ப காலத்தில் விஷேச நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படையலாக படைத்தது பின் உண்டு வந்தர்கள்

ஏன் இன்றும் கோவில்களில், பெருமாளுக்கு தோசையை படையலாக படைத்தது பிரசாதமாக  வழங்குகின்றனர்.

அப்போது இருந்த நம் முன்னோர்களுக்கு தோசை பலகார வகையாகத்தான் இருந்தது.

பின் நாளில் மக்களுக்கு வசதி வந்த பிறகு அன்றாட உணவு வகையாக மாறிவிட்டது.

தோசை, இந்தச் சொல் எப்படி வந்தது என்பதற்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், கல்லில் தோய்த்துச் செய்வது  என்னும் பொருளில்

"தோய் + செய்"

என்னும் சொற்கள் இணைந்து உருவான இச்சொல், மக்கள் வழக்கில் "தோசை" என்று ஆனது என்ற குறிப்பு தருகிறார். 

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...