Monday, May 21, 2018

பா(ப)ரத எல்லை!!

"இந்தியா ஒரே நாடு"... உரக்கச் சொல்லுவோம்....



இந்தியா ஒரே நாடு அல்ல, பல நாடுகளின் கூட்டமைப்பு என்று…. ஒரு சில பிரிவினைவாதிகளின் குரலை யாரும் கண்டு கொள்ளாத போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது !

எனவே தெளிவு படுத்தும் கடமை தேசபக்தனின் தோள்களில் !

மலையையும் கடலையும் காரணமாக்கிக் காலம் படைத்த *தீப கற்பம்* இது !

இந்த கற்பத்தில்தான் உலகின் ஆன்மீகக் குழந்தை அவதரித்தது !

ஆதியில்  இதனை  நாவலந் தீவென்றே நானிலம் அறியும் !

துணைக் கண்டம் என்று புவியியலார் புகழ்வதுண்டு !

தென்னாடுடைய சிவன் இமயத்திலும் இமவான் மகள் குமரியிலும் இடம் மாறி இருந்து எல்லை வகுத்தனர் !

கயிலைப் பெருமான் கல்யாணம் செய்தது மதுரைப் பாண்டியன் மகளை அல்லவா!

இதிகாசங்கள் இரண்டும் பேசாத இடங்களே இல்லை இந்தியாவில் !

வடபுலத்து இராமன் தென்கோடியில் கட்டிய கோயில் *இராமேஸ்வரம்* !

காந்தாரச் சகுனி முதல் கடலோரப் பாண்டியன் வரை பங்கெடுக்காதவர் யார்? பாரதப் போரில் !

கங்கை நீரையும் கயிலைக் கல்லையும் கொண்டு வந்து தான் பத்தினிக் கோட்டத்தைக் கட்டி முடித்தான் செங்குட்டுவன் !

ஆதி முதல் தீர்த்த யாத்திரை  காசி – இராமேஸ்வரம் என்பதாய்த் தானே காணப்படுகிறது !

கயிலையில் புறப்பட்ட அகத்தியருக்குத் தெரியும் *பாரத எல்லை* *நெல்லைக்கு அப்பால்* *இல்லை* என்று !

அதனால்தான் பொதிகையைத் தாண்டி போகவில்லை அவர் !

வடக்கே அவதரித்த பரசுராமர் அந்திமத்தில் அமைதி கொண்டது தென்னகத்துக் கேரளம் !

பாரதம் முழுவதையும் பாதத்தால் அளந்த கேரளத்துச் சங்கரர் பீடம் ஏறியது காஞ்சி நகர் !

கயிலை முனிவரே  மூலனாய் மாறி மூவாயிரம் பாடலில் திருமந்திரத்தைத்  திரட்டிக் கொடுத்தார் !

வடகயிலை சுந்தரர்தான் தென்னகத்தில் தமிழ் வளர்த்தார் !

காரைக்கால் அம்மையும் கரசேவை அப்பரும் வடகயிலை சென்று தென்தமிழில் பாடினர் !

கேரளத்துச் சேரலன் கவிதைத் தொகுதியை வெளியிட்ட இடம் வடகயிலை என்பது வருணன் தரும் செய்தி !

மெய்கண்டாருக்குச் சித்தாந்தம் சொன்னவர் வடகயிலை பரஞ்சோதி  என்பதே வரலாறு !

காசி மடத்தைக் கட்டி ஆண்டவர் கன்னித் தமிழ் நாட்டுக் குமரகுருபரர் !

ஆண்டாள் மாலை அழகு செய்யாமல் திருப்பதியில் திருவிழா ஏது ?

விவேகானந்தரின் வேதாந்த அறிவு அமெரிக்காவை ஆட்டிப் படைத்தது சேதுபதியின் செலவில்தானே !

வடக்கே பிறந்து தெற்கே புகுந்து புதுவை மண்ணை புனிமாக்கினார் அரவிந்தர் !

ஆந்திராவின் அற்புதமானார் தமிழகம் தந்த இராகவேந்தர் !

ஒருங்குடன் ஆண்ட பரதன் பெயரால் *பாரதம்* என்பதே பழம் பெயராகும் !

இந்திய எல்லையை எடுத்துக் காட்டும்  சங்க இலக்கியச் சான்றுகள் பற்பல !

இட்டப் பொட்டும் கட்டிய புடவையும் *இந்தியப் பெண்* என எடுத்துக் காட்டும் !

இந்தியா முழுவதும் எல்லா வீட்டிலும் யாராவது ஒருவருக்கு வடமொழிப் பெயராய் !

*பாரத தேசம்* *பழம் பெரும் தேசமாம்* பாரதி புலவனும் பாடி மகிழ்ந்தான் !

வடக்கே இருக்கும்  திரிவேணி சங்கமம் தெற்கே வந்தால் முக்கூடலாகும் !

எடுத்துக் காட்டுகளை அடுக்கத் தொடங்கினால் முடிவாய்ச் சொல்ல முந்நூறு நாட்கள் முழுமையாய்த் தேவை !

பெரிய தேசத்தில் வேறுபாடுகள் இருப்பதே இயற்கை ! *வேறுபாடுகளைக்* *கூறுபடுத்தி* 

*பிரிவினைப் பேசும்* *பித்தர்கள் எத்தர்களாய்!* விரல்களின் அளவு வெவ்வேறாயினும் 

*உள்ளங்கை* *ஒன்றுதான்* என்பதை  உணர மறுக்கும் குருடர்களுக்கு 
விளக்கினாலும் விளங்காது !

*சோழநாடு* *சேரநாடு* *பாண்டியநாடு* *கொங்குநாடு* *நடுநாடு* *ஆப்ப நாடு* என்றெல்லாம் பிரிந்து கிடந்த தமிழ்நாடு ஒரே மாநிலமாய் உருப்பெற்றதற்குத் தமிழ் மொழியே அடிப்படை !

பல மாநிலங்களையும் சேர்த்து  *பாரத நாடென* பறை சாற்றுவதற்கு ஆன்மீகப் பண்பாடே அடிப்படை !

அழகான மாலையில் பல பூக்கள் இருப்பதால் அது  மாலையே இல்லை தனித்தனிப் பூக்கள் தான் என்று  அடம்பிடிப்போரிடம் அகப்பட்டு விடாதீர் !

*பிரிவினை நோய்* *பிடித்துக் கொள்ளும்* !!!

நாம் இந்தியர் என்பதில்  பெருமிதம் கொள்வோம்! இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்!

வாழ்க பாரதம்!
வந்தே மாதரம்!
ஜெய்ஹிந்த்!

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை 

Collected from Social Media...

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...