அகத்தியர் மனித உடலை ஆராய்ச்சி செய்த ஒரு சிறந்த சித்தராவார். பல நூற்றாண்டுகளுக்கு முந்தையவர். அவரது ஆராய்ச்சி குறித்த பல குறிப்புகளைக் கவி வடிவில் எழுதி வைத்துள்ளார். அப்படிப்பட்ட ஒரு புத்தகம் அகத்தியர் குண வாகடம் – 1500 ஆகும்.
இதன் அர்த்தம் உடல் மற்றும் நோயின் தன்மைகள் என்று கொள்ளலாம். அந்தப் புத்தகத்தில் அவர் ரத்த ஓட்டத்தைப் பற்றியும் அது எவ்வாறு உடல் முழுதும் செல்கின்றது என்றும், இதயத்தின் வடிவம் பற்றியும், நரம்பு மண்டலம், நாடி பற்றியும் தெளிவாக விளக்குகின்றார்.
இந்தக் கட்டுரை அவர் ரத்த ஓட்டத்தைப் பற்றி அந்நூலில் என்ன சொல்லியிருக்கின்றார் என்பது பற்றியதாகும்.
மார்பு பற்றிய விளக்கம்:
ஒரு மனிதனின் மார்பு என்பது மாரெலும்புகள் மற்றும் விலா எலும்புகள் முன்னால் கவசமாக இருக்க, அது முதுகுத் தண்டெலும்புடன் கோர்க்கப்பட்டு, மேலே அகலமான, கீழே குறுகிய ஒரு கூடை போல் சதை நிரப்பப்பட்டு காட்சியளிக்கின்றது. (பாடல் எண்: 846)
மார்பின் மேல் பகுதியானது பழுவெலும்பு (Sternum) மற்றும் சவ்வு (mucous membrane)ம் கொண்டு அதன் கீழே ஈரல் அமையப்பெற்றுள்ளது. அங்கே நுரையீரல், அன்னவாகி (food tract), பெருநரம்பு புப்புசம் (pulmonary trunk) ஆகியனவும் கொண்டுள்ளது. (பாடல் எண்: 847)
இதயத்தின் இடம்:
நுரையீரலும், இதயமும் வெவ்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதயமானது மார்புக்குள்ளே பாதுகாப்பாக ஒரு ஊனான பைக்குள் (Fleshy bag) ஒரு சவ்வு கொண்டு மூடப்பட்டு இரண்டு நுரையீரலுக்கும் நடுவில் இருக்கின்றது. (பாடல்: 848)
இதயகோசமானது உடலின் வெகு முக்கியமான பஞ்சகோசங்களில் (Five important functionary system) ஒன்றாகும். அது மார்பின் இடது புறம், 6வது மற்றும் 7வது பழுவெலும்பின் பின்புறம் அமைந்துள்ளது. அதன் கீழ்புறம் தட்டையாகவும், கீழ்புறம் அழுத்தத்தைத் தாங்கும் வண்ணமும் அமைந்துள்ளது. (பாடல்: 849)
இதயத்தின் அளவும், எடையும்:
இதயம் விரிவடையும் போது ஆறு விரற்கிடை உயரமும், 4 விரற்கிடை நீளமும், 3 விரற்கிடை அகலமும் உடையதாக உள்ளது. 10 பாளம் எடை ஆண்களுக்கும், 8 பாளம் பெண்களுக்கும் (1 பாளம் = ஏறக்குறைய 34 கிராம்) எடை உடையதாக இருக்கின்றது. இதயமானது, ஒரு தாமரையின் மொட்டைப் போன்றதாகவும், தசையால் உருவானதாகவும், 4 தனித்தனி அறைகள் கொண்டதாகவும், இரண்டு மேற்புறமும், இரண்டு கீழ்ப்புறமும் கொண்டதாகவும் இருக்கின்றது. (பாடல்கள் 850, 851)
இதயத்தின் அறைகள்:
மேற்புற அறைகளை சிரவங்கள் (ஆங்கிலத்தில் auricles) என்றும் கீழ்ப்புறம் இருக்கும் அறைகளை சடரங்கள் (ஆங்கிலத்தில் ventricles) என்றும் சொல்கிறார் அகத்தியர். வலதுபுறம் இருக்கும் அறைகள் அசுத்த ரத்தத்தையும், இடது புற அறைகள் சுத்த ரத்தத்தையும் கொண்டிருக்கும். (பாடல் 852) இதோ!
கணிதமுள்ள மேலறைக்குப் பேரு கேளு
கடிதான சிரவங்கள் என்று பேராம்
அணியான கீழறைக்கு சடரங்க ளென
அப்பனே அதற்குத்தான் பேருமுண்டு
மணியான வலதுபக்க ரத்தமப்பா
மாறியே கறுத்திருக்கும் மகிழ்ந்து பாரு
தனியான இடதுபாகம் ரத்தமப்பா
தப்பாமல் சிவந்திருக்கும் தன்மை தானே!
அகத்தியர் குணவாகடம் – 1500 (852)
இரத்த ஓட்டத்தில் வால்வுகளின் பணி:
மேற்கண்ட அறைகளினூடே திரை போன்று சவ்வுகள் இருக்கின்றன. அவை ஒரு கதவின் பணியினைச் செய்கின்றன. அவைகளை கபாடம் என்றழைக்கின்றார் அகத்தியர். இதைப் போன்று ஒவ்வொரு வால்விலும் மூன்று கதவுகள் இருப்பதாகச் சொல்கிறார். அவையே ஒருபுறம் செல்லும் ரத்தத்தை மீண்டும் திரும்ப வரா வண்ணம் தடுப்பதாகச் சொல்கின்றார்.
வலது சடரத்தில் மூன்று கதவுகள் (முப்பிரிவாய் ரூபம் காட்டும்) (Anterior, Septal and Posterior என்று ஆங்கிலத்தில் பெயர்) இதைத் திரிகபாடம் (Tricupid valve) என்கின்றார். இந்த வால்வு ரத்தம் வலது சிடரத்திலிருந்து வலது சடரத்துக்குச் செல்லாமல் பாதுகாக்கின்றது.
இதே போல் இரண்டு கதவுகள் கொண்ட (இரண்டான கவாடங்கள்) (Anterior, Commissural cusp) இடது சடரத்தில் இருப்பதையும் குறிப்பிடுகின்றார். இதைத் துறைகவாடம் (Mitral Valve) என்றும் அழைக்கின்றார். இதனால் இதயமானது ஒரு சிறந்த கருவி என்கின்றார் அகத்தியர். (பாடல்கள் 853 & 854)
பெருநாடி:
இடது சடரத்திலிருந்து ஒரு பெரு நாடி வெளியேறுகின்றது. (Aorta) இதுவே முக்கியமான நாடியாகும். இதிலிருந்தே உடலெங்கும் இரத்தம் செலுத்தப்படுகின்றது.
வலது சடரத்திலிருந்து இது போலவே ஒரு நரம்பு வெளியேறுகின்றது. இந்த நரம்பு நுரையீரலைச் சுற்றி வளைத்த வண்ணம் இருக்கின்றது. இது புப்புச நாடியாகும். (pulmonary trunk).
பெருநாடியும் புப்புச நாடியும் அதன் துவக்கத்தில் ஒரு வால்வைக் கொண்டுள்ளன.
ஒவ்வொன்றும் மூன்று கதவுகளைக் கொண்டு பிறை போன்று காட்சியளிப்பதால் பிறைகபாடங்கள் என்றழைக்கப்படுகின்றன. (பாடல்: 855, 856)
பெருநாடியானது இதயத்தின் இடது பாகத்திலிருந்து வெளியேறி, இடது நரம்பு மண்டலத்தின் வழியாக, முதுகுத் தண்டின் பின்புறமாகச் சென்று, இடுப்பெலும்பின் துவாரம் வழியாக வெளியேறி இரண்டாகப் பிரிந்து பின்னர் உடலெங்கும் ஊடுருவுகின்றது. இதன் பிறைக் கதவின் பணி சுத்த ரத்தத்தை வெளியேற்றுகின்றதாகும். கீழிருந்து ரத்தம் அழுத்தமாக வந்தால் கதவு மூடி ரத்தம் திரும்பா வண்ணம் மூடிக் கொள்ளும். (பாடல்: 819-821)
வால்வுகள் பற்றி அகத்தியரின் குணவாகடப் பாடல் இதோ!
கூறடா பெருநாடிக் காரம்பத்தில்,
கொப்பனவே மூன்று கதவுக ளுண்டு;
பேரடா அவைகட்கு பிறைக்கதவு என்று,
பின்பதன் செய்தொழில் தன்னைப் பகரக்கேளு;
சீரடா பெருநாடி தன்னில் ஓடும்
சிறப்பான ரத்தத்தை வெளியோட்டுந் தானே!
தானான ரத்தத்தை வரவொட் டாமல்
தடுத்துமே காத்துகொண் டிருக்கும் பாரு!
ஊனான ரத்தம் பின்னோடும் போது,
உத்தமனே கதவுகள் விரிந்து கொண்டு
தேனான வாயில்தனை அடைத்துக் கொள்ளும்!
(அகத்தியர் குண வாகடம் – 1500 (820-821)
அகத்தியர் மேலும் பெருநாடி பற்றி விளக்குகின்றார். பெருநாடி மூன்று கிளைகள் கொண்டதாகவும், இது எவ்வாறு 72000 நரம்புகள் கொண்ட நரம்பு மண்டலத்தில் செல்கின்றது என்றும் சொல்கின்றார். கீழ்க்கண்ட பாடலைப் பாருங்கள்:
சினமான பெருநாடி தன்னிலப்பா
சிறப்பான எழுபத்திராயந்தான்
இனமான திரேகமெங்கும் பிரிந்துகொண்டு
இன்பத்தை விளைவித்து எங்குந்தானே!
(அகத்தியர் குணவாகடம் – 1500 (816 பகுதி)
இது ஏதோ அறுவை சிகிச்சை மையத்தில் அமர்ந்து கொண்டு சொன்னதைப் போல் இருக்கிறதல்லவா?
இரத்தத்தில் பிராண வாயுவானது வாயு ரூபத்தில் இல்லை என்பதையும் சொல்கின்றார். ரத்தம் மட்டுமே நரம்பில் செல்கின்றது என்றும் சொல்கின்றார். (பாடல்: 815)
கேளடா அக்குழலில் பிராணவாய்வு
பிரியமுடன் இருக்கிறதென்று நினைத்திடாதே!
கேளடா அக்குழலில் ரத்தந் தானும்
திறமாக ஓடுதென்று மனதில் வையே!
அகத்தியர் குணவாகடம் – 1500 (815 பகுதி)
இவ்வாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் இதயத்தைப் பற்றியும், இரத்த ஓட்டத்தைப் பற்றியும் அறிந்திருந்தனர்.
வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
Collected from Social Media...

No comments:
Post a Comment