Saturday, August 25, 2018

பட்டினியே சிறந்த மருந்து

முன்னோர் வாக்கு: லங்கணம் பரம ஔஷதம் –  பட்டினியே சிறந்த மருந்து  

"நோயிலே படுப்பதென்ன பெருமானே-நீ
நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"
என்று பாடுகிறான் பாரதி.

அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.

அறிவார்ந்த ஆன்மிகம்: எல்லா மதங்களிலும் உபவாச விரதம் அல்லது உண்ணா நோன்பு சிறந்ததாகச் சொல்லப்படுகின்றது.

இந்துக்கள் ஏகாதசி போன்ற குறிப்பிட்ட தினத்திலோ, வெள்ளிக்கிழமை போன்ற குறிப்பிட்ட கிழமைகளிலோ, சில விசேஷ நாட்களிலோ சாப்பிடாமல் உபவாச விரதம் இருக்கிறார்கள்.

இஸ்லாமியர்கள் ரம்ஜான் சமயத்தில் உண்ணா நோன்பு இருக்கிறார்கள். அது அவர்களுக்குக் கடமையாக்கப்பட்டிருக்கிறது.

கிறிஸ்துவர்களும் உபவாசம் இருந்து ஜெபிப்பதை விசேஷமானதாக எண்ணுகிறார்கள்.

எனவே உபவாசம் என்பது மதம், இனம் கடந்து அனைத்து தரப்பினரிடத்திலும் சிறப்பிடத்தைப் பெற்று இருப்பது தெளிவாகிறது.

சமஸ்கிருதத்தில் ’உப’ என்றால் அருகில் என்று பொருள். ’வாசம்’ வசித்தல் அல்லது இருத்தல் என்று பொருள். 

சிலர் இறையருளைப் பெறவும் , தங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளவும், புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், மனவலிமையை மேம்படுத்திக் கொள்ளவும் உபவாச விரதம் இருக்கிறார்கள்.

உண்ணா நோன்பின் நோக்கம்: நம் உடலில் உள்ள உயிர் ஆற்றல் பல்வேறு வழிகளில் நம்மால் வீணடிக்கப்படுகிறது, அதை காக்கவும், நம் உடலில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி உயிராற்றலை பெருக்கி உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் நாம் உயிர் வாழும் காலத்தை நீட்டிக்கவும், உயிராற்றலை பெருக்கவும் உள்ள பல்வேறு வழிமுறைகளில் உண்ணாவிரதம் ஒரு மிகசிறந்த உபாயம். 

கழிவுகள் அகற்றப்படும் விதம்: நாம் சாப்பிடுவதை நிறுத்திய உடன் உயிர் ஆற்றல் நம் உடலில் தேங்கியுள்ள கழிவுகளை சிறுநீரகம், தோல், மலக்குடல், மூக்கு போன்ற உறுப்புகளின் வழியே வெளியேற்றுகிறது. 

உண்ணா நோன்பினால்:
1. ஜீரண மண்டலத்திற்கு ஓய்வு கொடுக்கிறோம்.
2. எஞ்சிய அசுத்தங்கள் தானாக வெளியேற வாய்ப்பளிக்கிறது.
3. ஜீரண மண்டல உறுப்புகள் புதுப்பிக்கப்படுகின்றன.
4. உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. 
5. மனம் தூய்மையடைகிறது.
6. உடல் பொலிவடைகிறது.
7. நோய் தடுப்பாற்றல் அதிகரிக்கின்றது .
8. மனிதனுள் விழிப்புணர்வுக்கு காரணமாக இருக்கின்றது. 
9. புலன்கள் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வரப்படுகின்றன. 
10. ஆன்மீகம் அதிகரிக்கவும் செய்கின்றது.

உபவாச முறைகள்: உண்மையில் உபவாசம் என்பது முழுமையாக பட்டினி கிடத்தலே. என்றாலும் தண்ணீர் அல்லது பழச்சாறு மட்டும் குடித்து உபவாசம் இருப்பதிலிருந்து குறிப்பிட்ட உணவை மட்டும் உண்டு அல்லது குறிப்பிட்ட உணவுகளை மட்டும் தவிர்த்து உபவாசம் இருப்பது வரை பல வித உபவாசங்களும் தற்போது உபவாசமாகவே கருதப்படுகின்றன.

 உபவாச நாள் கணக்கு: ஒரு நாள், 3 நாட்கள், 7 நாட்கள், 11 நாட்கள், 21 நாட்கள் என அவரவர் உடல், மன நிலைக்கு ஏற்ப நோன்பை தொடரலாம்.

இருப்பினும், அனைவரும் 15 நாட்களுக்கு ஒருமுறையாவது உண்ணாவிரதம் கடைபிடித்தால் அதன் மகத்துவத்தை அறியலாம்.

குறிப்பு: இங்கு ஒரு நாள் என்பதை சாதாரணமாக நாம் அனைவரும் கடைபிடிக்கும் காலை முதல் மாலை வரை உணவை தவிர்த்தல் என்பதை ஒட்டியே சொல்லப்பட்டுள்ளது. ஆயினும், நம் இந்து தர்மத்தில் ஒரு நாள் என்பது காலை சூரிய உதயத்தில் ஆரம்பித்து மறுநாள் காலை சூரிய உதயம் வரை என்பதுதான், இங்கு இதை நாம் நினைவில் கொள்வது நல்லது.

யாருக்கு உண்ணா நோன்பு: முதியவர்கள், வியாதியினால் மருந்து உண்பவர்கள், கர்ப்பிணிகள், பிரம்மச்சாரிகள், சன்யாசிகள் இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும் சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு.

உண்ணாவிரத காலத்தில் தவிர்க்க வேண்டியவை: அதிக உடல் உழைப்பு பேச்சு, வீண் பேச்சு, அலைபேசி, தொலைகாட்சி உட்பட அனைத்தையும் நிறுத்தி உடலுக்கும் மனதிற்கும் முழு ஓய்வளிக்க வேண்டியது அவசியம்.

நிறைவு செய்யும் முறை: பழங்கள், பழச்சாறுகள் நீர் உணவுகள் இவைகளை அருந்தலாம்.

தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள்: திட மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகள்

ஆக, உண்ணா நோன்பே உயரிய மருந்து.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை 

Collected from Social Media..

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...