Friday, July 17, 2020

குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது ஏன்?

குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது ஏன்?

நம்மில் எத்தனை பேர் குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டி இருக்கிறோம் ? நிலவை காட்டி சோறு ஊட்டும் போது குழந்தை மேல்நோக்கி பார்க்கும்போது தொண்டைக்குழல் உணவுக்குழல் விரிகிறது உணவு இலகுவாக உள்ளே இறங்கும் சின்ன உணவு குழலில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும்.

குழந்தை கருவில் உருவாகும் போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது.தொப்புள் கொடி உடலில் இருந்து பிரிந்த பின்பு தான் உணவு குழலின் விட்டம் விரிய தொடங்குகிறது இது முழுமையடைய ஐந்து வருடம் ஆகிறது.

ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு உணவை அவசர அவசரமாக திணிப்பது உடல் வளர்ச்சிக்கான கால அவகாசத்தை மறுப்பதும் குழந்தைகள் மீது நாம் செலுத்தும் ஒரு வித மறைமுக வன்முறையே ஆகும்

குழந்தை பிறப்பிலிருந்து பால்குடி மறக்கும் ஐந்து வயது வரை தாயானவள் குழந்தையின் பொருட்டும் குழந்தைக்கு சுரக்க வேண்டிய பாலின் பொருட்டும் கவனமாக உண்ண வேண்டியது ஒரு தாய்மைக்கு மிகவும் மரியாதையளிக்கும் .

நிலவை காட்டி சோறு ஊட்டுவது பண்பாடு மட்டுமல்ல அறம் சார்ந்த அறிவியல் . 

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...