இதனை ”எட்டு படிகள்” என்கிறார், யோகத்தின் பிதாமகரான பதஞ்சலி முனிவர்.
இந்த எட்டு நிலைகளும் மனிதனின் வாழ்க்கையின் நெடுகில்
ஆத்மாவுக்கு உறுதுணையாக இருப்பவை..
இந்த எட்டு நிலைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பானவை.
ஒரு நிலை முடியும் தருணத்தில் அடுத்த நிலை துவங்கும்.
எனவே ஒவ்வொரு நிலையாகவே பயில வேண்டும்.
ஒரு நிலையில் தேர்ச்சி பெறாமல் அடுத்தடுத்த நிலைகளை பழக
முடியாது.
எனவே தொடர் பயிற்ச்சிகளின் மூலமும், மனிதனை சூழ்ந்திருக்கும் எல்லா விதமான ஆசைகளில் இருந்தும் மனதை விடுவித்து வைப்பதன் மூலமும் இது சாத்தியமாகும்.
யோகத்தின் எட்டு நிலைகளையும் திருமூலரும் தனது திருமந்திரத்தில் விரிவாக குறிப்பிடுகிறார்.
"அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத்
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்
புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே"
- திருமூலர் -
"இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே"
- திருமூலர் -
இயமம்,
நியமம்,
ஆசனம்,
பிரணாயாமம்,
பிரத்தியாகாரம்,
தாரணை,
தியானம்,
சமாதி.
ஆகியவையே யோகத்தின் எட்டு நிலைகளாக கொள்ளப் படுகின்றன.
இயமம் என்பது வாழ்வியல் சார்ந்த நல்லொழுக்கத்தையும்,
நியமம் என்பது ஒழுக்கத்தின் மூலம் ஆத்ம சுத்தத்தையும்,
ஆசனம் என்பது உடற்பயிற்சி நிலைகளையும்,
பிரணாயாமம் மூச்சு கட்டுக்குள் கொணரும் பயிற்சி முறைகளையும்,
பிரத்தியாகாரம் என்பது புலனடக்கத்தையும்,
தாரணை என்பது மன ஒருமைப்பாட்டையும்,
தியானம் என்பது பரமாத்மாவை உணரும் நிலையையும்,
சமாதி பரமாத்மாவுக்கு சமனான பேரின்ப நிலையை
அடவைவதையும் குறிக்கும்.
உண்பது, உறங்குவது, உழைப்பது என வாழ்வின் அனைத்து கூறுகளையும் அளவுடனும், நிதானமாகவும் செயல்படவேண்டியது அவசியம்..
இத்தகையவர்களே யோகமார்க்கத்தில் இயல்பாக வெற்றியடையலாம்..
வரும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம்..!
யோகம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
*"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"*
No comments:
Post a Comment