Tuesday, February 2, 2021

மூன்று வகை உணவு முறைகள்!!

ஐந்தில் அளவு முறையில் உணவு முக்கிய இடத்தை வகிக்கிறது . அந்த உணவை நமது முன்னோர்கள் மூன்று வகையாக பிரித்தனர். 

அவை 

1 ) ரஸோ உணவு வகை

2 ) சாமச உணவு வகை

3 ) சாத்வீக உணவு வகை


1 ) ரஸோ உணவு வகை

        அசைவ உணவுகள் , மசாலா மற்றும் எண்ணெய் போன்றவற்றை முக்கிய பொருளாக கொண்டு தயாரிக்க பட்ட உணவுகள் ரஸோ உணவு வகையில் அடங்கும் . இந்த வகை உணவுகளை அறவே தவிர்த்து விட வேண்டும்.


2 ) சாமச உணவு வகை

        பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்படும் கிழங்கு போன்ற உணவுகள் சாமச உணவு வகையில் அடங்கும் . இவை நமது உடலுக்கு மந்த நிலையை உண்டாக்கும் . இந்த உணவு வகைகளை மிகவும் குறைவான அளவு உட்கொள்ள வேண்டும் .


3 )சாத்வீக உணவு வகை

        அதிக சத்து நிறைந்த பழங்கள் ,காய்கறிகள் ஆகியவை இந்த சாத்வீக உணவு முறையில் அடங்கும் . இவை நமது உடலுக்கு சாத்வீக தன்மையை (அமைதியான மனோ நிலையை ) தர வல்லன. இந்த வகை உணவு பொருட்களை நாம் நமது முழு உணவு முறையாக மாற்றி கொள்வது நல்லது.

மேலும் உணவின் அளவினை நமது முன்னோர்கள் வகுத்துள்ளார்கள் . அவை 

காலை உணவை பாதசாரி போன்றும் 

மதிய உணவை அரசன் அரசி போன்றும். 

இரவு உணவை யாசகம் பெறுபவன் போன்றும் உண்ண வேண்டும் .

                     பாதசாரி நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்பதால் பாதி அளவு உணவு மட்டுமே உண்பது அந்த காலத்தைய பாதசாரிகள் வழக்கமாக இருந்தது .

 அதுபோல காலை உணவு நமது முழு கொள்ளளவில் பாதி மட்டுமே உண்ண வேண்டும் .

                    அரசன் அரசிமார்கள் பல விதமான உணவை அளவின்றி உண்பது போல நமது மத்திய உணவை அளவின்றி உண்ணலாம் 

                     யாசகம் (பிச்சை) பெறுபவன் அன்று கிடைத்தது பாதியிலும் பாதி கிடைத்தாலும் அதை முழு மனதோடு உண்பது போல இரவு உணவை பாதிக்கும் பாதியாக பெயருக்கு மட்டுமே உண்ண வேண்டும்.

Collected from Social Media.    

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...