கிரஹணம் நமது கலாச்சாரத்தில் மிக முக்கிய இடத்தை பெறும் ஒரு இயற்கை நிகழ்வு. பெளர்ணமி மற்றும் அமாவாசைகளில் நிலவின் மாற்றத்தை கண்டு உணர்ந்த மனிதன் தனது இயற்கை அறிவில் அதிக முன்னேற்றம் அடைந்தது கிரகண கோட்ப்பாடு மூலமாகத்தான்.
உலக மக்கள் கிரகணம் ஒரு பேரழிவு நிகழ்வு என பயந்து வந்த காலத்தில் நமது பாரத தேசத்தில் இருக்கும் அறிஞர்கள் கிரஹணங்களை ஆய்வு செய்து மனித மேம்பாட்டுக்கு பயன்படுத்தவும் துவங்கிவிட்டார்கள். கிரகணத்தை சிறப்பாக ஆய்வு செய்ததால் தான் நமது சாஸ்திரங்களில் பூமி சூரியனைச் சுற்றிவருகிறது என்ற விஞ்ஞான கோட்பாட்டை கூற முடிந்தது. சாஸ்திர அறிவியல் கோட்பாட்டை பின்பற்றி ஆரியபட்டர் மற்றும் பாஸ்கராச்சாரியர் முதலிய பேரறிஞர்கள் அறிவியலில் இன்றுவரை யாரும் தொட முடியாத உயரத்தை அடைந்தனர்.
கிரகணம் என்றால் என்ன என தெரிந்து கொள்வது அவசியம். ‘கிரஹண்’ எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு ஒளி இழந்த தன்மை என பொருள். மனிதன் அறியாமையாலும், சோகத்தாலும் ஒளியிழந்து காணப்படுவதை கூட கிரஹணத்தின் அடைப்படையில் “கிரஹணி” என வடமொழியில் கூறப்படுகிறது.
பல நூற்றாண்டுக்கு முன்னால் உள்ள பஞ்சாங்க கணிதத்தில் கிரஹணங்களை எப்படி கண்டறிவது அதற்காக கணிதம் எப்படி அமைப்பது என நம்மிடையே குறிப்புகள் உண்டு. இன்று பல்லாயிரம் கோடி செலவழித்து செய்யும் விஷயத்தை அன்று ஒரு சாதாரண மனிதன் இங்கே மரத்தடியில் செய்துகொண்டிருந்தான் என நினைக்கும் பொழுது நமது கலாச்சாரத்திற்கும் முன்னோர்களுக்கும் தலைவணங்காமல் இருக்க முடியவில்லை.
சூரிய மண்டலத்தில் சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்று வான் பொருட்கள் ஒரே நேர்கோட்டில் நிற்பதை கிரகணம் என்கிறோம். சூரிய சந்திரர்கள், எதன் ஒளியை பூமியிலிருந்து பார்க்க முடியாதோ, அது கிரஹணம் அடைந்ததாக கூறப்படுகிறது. சூரியன் மறைக்கப்பட்டு சூரிய ஒளி தெரியவில்லை என்றால் சூரிய கிரகணம் என்றும், சந்திரன் ஒளி பெறாமல் இருளாக இருந்தால் சந்திர கிரகணம் என்றும் கூறுகிறோம்.
இந்த கிரகணம் மனிதனை எப்படி பாதிக்கும்? இதற்கு முதலில் மனித பிறப்பை பற்றிய விழிப்புணர்வு அவசியம். அண்ட வெளியில் எத்தகைய நிகழ்வுகள் இருந்தாலும் அதே நிகழ்வுகள் நமக்குள்ளும் நடக்கும் என்பதை உணர வேண்டியது அவசியம். பூமி மனித உடலையும், சந்திரன் மனதையும், சூரியன் ஆன்மாவையும் குறிக்கும். கிரஹங்கள் நேர்க்கோட்டில் வரும் நாளில் மனிதனின் மனம்,உடல் மற்றும் ஆன்மாவும் இயற்கையாகவே ஒன்றிணைந்துவிடும்.
செயற்கையாக ஆன்மீக பயிற்சிகள் செய்து மனம், உடல், ஆன்மாவை ஒன்றிணைப்பதை யோகம் என்கிறோம். ஆனால் இயற்கையே இதற்கு ஒரு உந்துதலாக இருந்து நம்மை இணைக்கிறது. அன்று அனைத்து ஜீவராசிகளும் தங்களை உயர்நிலைக்கு அழைத்து செல்ல தகுந்த நாளாக மாறிவிடுகிறது.
இதனால் தான் கிரகஹன காலத்தில் கோவில்களுக்கு செல்லாமல் (கிரஹண நேரத்தில் கோவில் திறக்கப்படுவதில்லை..!.) நமது இருப்பை மட்டும் உணர சில தருணங்களை ஏற்படுத்தி தந்தார்கள்.
தற்காலத்தில் நவநாகரீகம் என்ற பெயரில் கிரஹணத்தை மக்கள் மதிப்பதில்லை. பறவை மற்றும் விலங்கினங்கள் கூட கிரஹணத்தன்று தன் இருப்பிடத்தை விட்டு வெளிவருவதில்லை. அப்படி இருக்க மனிதன் தனது விழிப்புணர்வால் அதை உணர வேண்டமா? மனிதன் இயற்கையிலிருந்து பிரிந்து செயற்கையாக வாழ்கிறான் என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு வேண்டுமா?
கிரஹண காலத்தில் சந்திரன் / சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சு தற்காலிகமாக தடைசெய்யப்படுவதால், வான்வெளியிலிருந்து வரும் தீய கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்கும். அதனால் தான் கிரஹணம் அன்று நம்மை பாதுகாக்க சொன்னார்கள் நம் முன்னோர்கள். அறிவியலாளர்கள் முதலில் கதிர்வீச்சு வரும் எனும் விஷயத்தை மறுத்துவந்தார்கள், தற்சமயம் ஏற்றுக்கொண்டு அவர்களும் பாதுக்காப்பாக இருக்க பிரசாரம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்ப்பை, கம்பளி போன்ற பொருட்களுக்கு மின்கடத்தா சக்தி உண்டு. மேலும் கதிர்வீச்சை அதிகமாக கடத்தாது. அதனால் அப்பொருட்களை வைத்து நம்மை தற்காத்துக்கொள்ள சாஸ்திரங்கள் கூறுகிறது.
வருடத்திற்கு ஒரு முறை சூரிய கிரஹணம் ஏற்பட்டாலும் முழு சூரியகிரஹணம் சில வருடங்களுக்கு ஒருமுறைதான் நடைபெறும். அப்படி ஏற்படும் முழு சூரிய கிரஹணமும் நாம் இருக்கும் தேசத்தில் தெரிவது போல அமைவது அதைவிட அரிது.
கிரஹண காலத்தை ஒருவித பயத்துடன் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. இறைவன் எத்தகைய சூழலையும் நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வழிகாட்டுகிறார். அதன் அடிப்படையில் கிரஹண காலத்தில் நமது உடல்-மனம்-ஆன்மா ஓன்றுபடுவதால் அன்று இறைவனை நாமத்தை ஜபம் செய்ய மிகசிறப்பான நாளாகும்.
மந்திர சாஸ்திரத்தில் ஜபம் செய்யும் காலத்தின் தன்மை எப்படி பலன் கொடுக்கிறது என்பதை கூறுகிறது. எல்லா நேரத்திலும் ஜபம் செய்தால் ஒருமடங்கு பலன், அதை சந்தியாகாலத்தில் செய்தால் பத்துமடங்கும். பிரம்ம முஹூர்த்தத்தில் செய்தால் நூறுமடங்கும், பெளர்ணமி அமாவாசை நாளில் செய்தால் ஆயிரம் மடங்கும், கிரஹண நாட்களில் செய்தால் லட்சம் மடங்கும் பலன் ஏற்படும் என கூறுகிறது.
ஒரு முறை மந்திரத்தை உட்சரித்தால் கிரஹணத்தன்று லட்சம் முறை சொல்லுவதற்கு சமம். அன்றே லட்சம் முறை உச்சரித்தால்? யோசிக்க வேண்டும். மந்திர சித்தி பெறுபவர்கள் இந்த நாளை பயன்படுத்தி தங்களின் மந்திரத்தில் சித்தியடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் கிரஹணத்தன்று வெளியுலக விஷயங்களை செய்யக்கூடாது. உங்கள் ஆன்மீக விஷய்ங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.
முக்கியமாக கிரஹண நேரத்தில் செய்ய கூடாதது என சொன்னால் உணவருந்துவது, உணவை சமைப்பது, உடலுறவு மற்றும் உடலைவருத்தும் அனேக செயல்கள். செய்ய வேண்டியது பூஜை, தியானம், ஜபம் மற்றும் பித்ரு தர்ப்பணம்.
கிரஹண சமயத்தில் கடைபிடிக்க வேண்டியவை:
• கிரஹண நேரம் ஆரம்பிக்கும் பொழுதும் முடிந்த பிறகும் குளிக்கவும்.
• கிரஹண நேரத்திற்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்பு அல்லது பின்பு மட்டுமே உணவருந்த வேண்டும்.
• ஜீரண சக்திக்கு வேலை கொடுப்பதை தவிர்க்கவும்.
• தர்ப்பை வீட்டில் இருக்கும் நீர், தயிர் பொருட்கள், ஊறுகாய் போன்று கெட்டுப்போகும் பொருட்களில் இடவேண்டும்
• சூரிய கிரஹணம் என்பதால் கிரஹணம் ஆரம்பிக்கும் சமயம் பித்ரு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
• சூரிய கிரஹணத்தை கண்களால் பார்க்க கூடாது. நீரில் பிம்மம் விழுகவைத்து பார்க்கலாம். கண் கண்ணாடி அணிந்து பார்ப்பதையும் தவிர்க்கவும்.
• கிரஹண காலத்தில் தொடர்ந்து ஜபம் மற்றும் பாராயணம் செய்ய வேண்டும். வீண் பேச்சுக்கள் மற்றும் பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
பிரபஞ்சத்தில் நிகழும் எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்கும். எந்த ஒரு விஷயமும் காரண காரியம் இல்லாமல் நடைபெறாது. அது போல சூரிய கிரஹணம் என்பது எதிர்காலத்தில் உலகில் நடக்க இருக்கும் சில சம்பவங்களை முன் கூறும் ஒரு நிகழ்வாக இருக்கிறது.
உலகின் எந்த பகுதியில் கிரஹணம் ஏற்படுகிறதோ அதற்கு நேர் எதிர்பகுதியில் இயற்கை சிற்றங்கள் நிகழும் என்கிறது சாஸ்த்திரம். எடுத்துக்காட்டாக சூரிய கிரஹணம் நம் நாட்டில் நடக்கிறது என்றால், இதற்கு எதிர் பூமி பகுதியில் இயற்கையின் சீற்றங்கள் நடைபெறலாம். அங்கே வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு நடக்காத வண்ணம் காக்க இறைவனை கிரஹணத்தின் தினத்தில் வேண்டுவோம். அன்று வேண்டுவது லட்சம் மடங்கு பலன் அல்லவா? மனம், உடல், ஆன்மாவை ஒன்றிணைப்போம்.
வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
Collected from Social Media...
Source: http://vediceye.blogspot.in/search/label/கிரகணம்