Monday, January 15, 2018

குடிநீரை இயற்கையாக சுத்திகரிக்கும் ஆரோக்கிய முறைகள் தான் என்ன!!?

சாதாரணமாக ஆறு, எரி, கிணறு, குளம், மழை நீர் போன்ற இயற்கையிலிருந்து கிடைக்கும் தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது. ஆர்.ஓ (R.O) செய்யக் கூடாது  பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை ( மினரல் வாட்டர் ) பயன்படுத்தக் கூடாது. (ஏன் பயன்படுத்தக் கூடாது? முந்தய பதிவில் காண்க....)
வேறு எப்படித் தான் தண்ணீரை பயன்படுத்துவது என்று கேட்டால், சாதாரணமாக  குடிநீர் குழாய்கள் மூலம் வீட்டிற்கு வழங்கப்படும், இரசாயனம் கலக்கப்படாத இயற்கையில் கிடைக்கும் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம். உண்மையிலேயே குழாய் தண்ணீர் குடித்தால் ஒன்றும் ஆகாது.

அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச்சிறந்த தடுப்பூசி இயற்கையில் கிடைக்கும் தண்ணீர் மட்டுமே.  

யார் ஒருவர் இயற்கையில் கிடைக்கும் தண்ணீரை நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க்கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்.

இருப்பினும் மாசு மற்றும் இரசாயனம் கலந்த நீரை கீழ்க்கண்ட இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

1. மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி.

மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. பிராண சக்தியும் அதிகரிக்கும்.

எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த WATER FILTER, மண் பானை ஆகும்.,

2. வெள்ளை நிற பருத்தித் துணியால் வடிகட்டலாம்.

வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால் தண்ணீரை (பில்டர் செய்தால்) வடி கட்டும் பொழுது, அதிலுள்ள மாசுக்கள் நீக்கப்படுகின்றன. இந்த முறையிலும் தண்ணீரைச் சுத்தப்படுத்தலாம்.

3. வாழைப்பழத் தோல் மூலம் சுத்தம் செய்யலாம்

நாம் சாப்பிடும் சாதாரண வாழை பழத் தோலை மண் பானைக்குள் இருக்கும் தண்ணீரில் இட்டு அரை மணி நேரத்திற்கு பிறகுவெளியே எடுத்து விட்டால் இந்த வாழைபழத் தோல் மண் பானையில் உள்ள நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும், கெட்ட பொருள்களையும் உறிஞ்சி எடுத்து விடுகிறது.

ஆனால் வாழைபழத் தோலை அதிக நேரம் தண்ணீரில் வைத்திருந்தால் அதுவே ஒரு குப்பையாக மாறி விடும். எனவே அரை மணி நேரத்திற்குள் எடுத்து விட வேண்டும். இந்தச் சுலபமான, நீரை சுத்திகரிக்கும் முறையையும் பயன்படுத்தலாம்.

4. செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலம் சுத்தப்படுத்தலாம்

செம்பு என்ற உலோக பாத்திரத்தின் மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான சக்தி கிடைக்கிறது. அதில் உள்ள கெட்டப் பொருள் அழிக்கப்படுகிறது. எனவே செம்பு என்ற உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க பயன்படுத்தலாம். 

அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும். பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு இருப்பார்கள். 

செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப்படுத்த முடியும்.

எனவே, தண்ணீரை சுத்தப்படுத்துவதற்கு, மேலே கூறப்பட்டுள்ள வகையில், மண்பானை, வெள்ளை பருத்தித் துணி, வாழைப் பழத்தோல், செம்பு என்ற உலோகம் மற்றும் பல இயற்கை உத்திகள் இருக்கும் பொழுது, நாம் ஏன், நம் முன்னோர்கள் வழியில், இயற்கை  சுத்திகரிப்புக்கு திரும்பக்கூடாது? 

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்க்காதே எனும் முன்னோர் வாக்கை நம்புங்கள்.

சிந்திப்போம்... ஆரோக்கியமாக வாழ்வோம்!!

வாழ்க....   நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...