Sunday, June 3, 2018

ஆத்திசூடி அறிவோம்

ஆத்திச்சூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும்.

கடவுள் வாழ்த்து

"ஆத்தி சூடி அமர்ந்த தேவனை 
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே"

ஆத்தி-திருவாத்தி பூமாலையை; சூடி- அணிந்து;  அமர்ந்த-எழுந்தருளியிருக்கும்; தேவனை-விநாயகக் கடவுளை; ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்தி; தொழுவோம்-வணங்குவோம்; யாமே-நாமே.


 

உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு / Learn to love virtue.
நற்காரியங்களைச் செய்வதற்கு ஆசைப்பட வேண்டும்.
2. ஆறுவது சினம் / Control anger.
கோபத்தைத் தணியச் செய்ய வேண்டும்.
3. இயல்வது கரவேல் / Don't forget Charity. இயன்றதை ஒளிக்காமல் செய்ய வேண்டும்.
4. ஈவது விலக்கேல் / Don't prevent philanthropy.
பிறருக்கு உதவி செய்வதைத் தடுக்கப்கூடாது.
5. உடையது விளம்பேல் /  Don't betray confidence.
உன்னிடம் இருக்கும் நன்மை தீமைகளை பிறரிடம் கூறாதே.
6. ஊக்கமது கைவிடேல் /  Don't forsake motivation.
செயலில் ஈடுபடும்போது தடங்கல் ஏற்படுமானால் அதைக் கண்டு தைரியத்தைக் கைவிடக்கூடாது.
7. எண் எழுத்து இகழேல் / Don't despise learning.
கணிதம், இலக்கியம் இவற்றை இகழ்ந்து ஒதுக்கக்கூடாது.
8. ஏற்பது இகழ்ச்சி / Don't freeload.
பிறரிடம் போய் யாசிப்பது இழிவாகும்.
9. ஐயம் இட்டு உண் / Feed the hungry and then feast.
பிச்சை கேட்பவர்களுக்கு உணவு கொடுத்த பின்னர் சாப்பிட வேண்டும்.
10. ஒப்புரவு ஒழுகு / Emulate the great.
உலக அனுபவத்தை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்.
11. ஓதுவது ஒழியேல் / Discern the good and learn.
படிப்பதை விட்டுவிடக் கூடாது.
12. ஒளவியம் பேசேல் / Speak no envy.
பொறாமைக் குணத்தோடு சொல்லக் கூடாது.
13. அஃகஞ் சுருக்கேல் / Don't shortchange.
தானியங்களை எடை அளவு குறைத்து நிறுத்தக்கூடாது.

உயிர்மெய் வருக்கம்
 

14. கண்டொன்று சொல்லேல்/ Don't flip-flop.
கண்ணால் பார்த்ததைத் தவிர வேறு எதையும் கூறாதே.
15. ஙப் போல் வளை / Bend to befriend.
'ங' என்ற எழுத்தைப் போல அனைவரையும் இணைந்து செல்ல வேண்டும்.
16. சனி நீராடு / Shower regularly.
சனிக்கிழமை தோறும் எண்ணெய் தோய்த்துக் குளிப்பாயாக.
17. ஞயம்பட உரை / Sweeten your speech.
கனிவான முறையில் எதையும் கூறுவாயாக.
18. இடம்பட வீடு எடேல் / Judiciously space your home.
தேவைக்கு அதிகமாக வீட்டைப் பெரிதாக அமைக்காதே.
19. இணக்கம் அறிந்து இணங்கு / Befriend the best.
நட்பு கொள்ளுமுன் அவர் நல்லவரா என்பதைத் தீர அறிந்து, அதன் பிறகு தொடர்பு கொள்ள வேண்டும்.
20. தந்தை தாய்ப் பேண் / Protect your parents.
பெற்றோரைப் போற்றி ஆதரிக்க வேண்டும்.
21. நன்றி மறவேல் / Don't forget gratitude.
ஒருவர் செய்த உதவியை மறந்துவிடக் கூடாது.
22. பருவத்தே பயிர் செய் / Husbandry has its season.
உரிய காலத்திலே உழுது பயிரிட முற்படவேண்டும்.
23. மண் பறித்து உண்ணேல் / Don't land-grab.
மற்றவருடைய நிலத்தை அபகரித்து அதை உண்டு வாழக்கூடாது.
24. இயல்பு அலாதன செய்யேல் / Desist demeaning deeds.
வழக்கத்துக்கு மாறான காரியத்தைச் செய்யக்கூடாது.
25. அரவம் ஆட்டேல் / Don't play with snakes.
பாம்போடு விளையாடினால் ஆபத்து நேரிடும்.
26. இலவம் பஞ்சில் துயில் / Cotton bed better for comfort.
இலவம் பஞ்சு மெத்தையில் படுத்து நித்திரை செய்வது நன்மை தரும்.
27. வஞ்சகம் பேசேல் / Don't sugar-coat words.
கபடமாகப் பேசக்கூடாது.
28. அழகு அலாதன செய்யேல் / Detest the disorderly.
பிறர் இகழத்தக்கவற்றை செய்யக்கூடாது.
29. இளமையில் கல் / Learn when young.
சிறு பிராயத்திலே கல்வியைக் கற்பது சிறப்பாகும்.
30. அரனை மறவேல் / Cherish charity.
இறைவனை மறவாமல் துதித்து வணங்க வேண்டும்.
31. அனந்தல் ஆடேல் / Over sleeping is obnoxious.
கடலில் நீந்தி விளையாடினால் ஆபத்து நேரிடும்.

ககர வருக்கம்
 

32. கடிவது மற / Constant anger is corrosive.
பிறருக்கு கோபம் உண்டாகக் கூடிய சொற்களைக் கூறக்கூடாது.
33. காப்பது விரதம் / Saving lives superior to fasting.
பிற உயிர்களுக்கு ஆபத்து நேரிடாமல் காப்பது நோன்பு ஆகும்.
34. கிழமைப்பட வாழ் / Make wealth beneficial.
தனக்கே அன்றி மற்றவர்களுக்கும் உதவியாக வாழ வேண்டும்.
35. கீழ்மை அகற்று / Distance from the wicked.
கீழ்த்தரமான செய்கைகளை செய்யாமல் நீக்கிவிட வேண்டும்.
36. குணமது கைவிடேல் / Keep all that are useful.
நற்பண்புகளைக் கைவிடாமல் வாழவேண்டும்.
37. கூடிப் பிரியேல் / Don't forsake friends.
நற்பண்புடையவர்களோடு தொடர்பு கொண்டு பிறகு அவர்களை விட்டுப் பிரியக்கூடாது.
38. கெடுப்பது ஒழி / Abandon animosity.
ஒருவருக்கும் தீங்கு செய்யக்கூடாது.
39. கேள்வி முயல் / Learn from the learned.
அறிவாளிகள் சொற்களை ஆவலோடு கேட்டுத் தெரிந்துகொள்.
40. கைவினை கரவேல் / Don't hide knowledge.
கற்ற கைத்தொழில்களை மற்றவருக்கும் கற்றுக்கொடு.
41. கொள்ளை விரும்பேல் / Don't swindle.
ஒருவருடைய பொருளைக் கொள்ளை அடிக்க ஆசைப்படாதே.
42. கோதாட்டு ஒழி / Ban all illegal games.
ஆபத்தை உண்டாக்கக்கூடிய விளையாட்டுக்களில் ஈடுபடாதே
43. கெளவை அகற்று / Don't vilify.
வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு.

சகர வருக்கம்


44. சக்கர நெறி நில் / Honor your Lands Constitution.
அரச ஆணைகளை மதித்து நடக்க வேண்டும்.
45. சான்றோர் இனத்து இரு / Associate with the noble.
அறிஞர்களின் குழுவிலே சேர்ந்து இருப்பது மேன்மை அளிக்கும்.
46. சித்திரம் பேசேல் / Stop being paradoxical.
பொய்யை அலங்காரமாக உண்மை போல பேசக்கூடாது.
47. சீர்மை மறவேல் / Remember to be righteous.
சிறப்பான செயல்களை மறந்துவிட வேண்டாம்.
48. சுளிக்கச் சொல்லேல் / Don't hurt others feelings.
மற்றவர் முகம் கோணும்படியான சொற்களைக் கூறக்கூடாது.
49. சூது விரும்பேல் / Don't gamble.
சூதாட்டங்களினால் பொருள் நஷ்டமும் மனக்கஷ்டமும் உண்டாகும்.
50. செய்வன திருந்தச் செய் / Action with perfection.
செய்யும் காரியங்களைச் செவ்வையாகச் செய்யவேண்டும்.
51. சேரிடம் அறிந்து சேர் / Seek out good friends.
சேரத்தக்கவர்களை நன்கு அறிந்து சேரவேண்டும்.
52. சையெனத் திரியேல் / Avoid being insulted.
மற்றவர் இகழும்படி நடந்துகொள்ளக் கூடாது.
53. சொற் சோர்வு படேல் / Don't show fatigue in conversation.
மற்றவருடன் பேசும்பொழுது மனம் தளர்ந்து பேசக்கூடாது.
54. சோம்பித் திரியேல் / Don't be a lazybones.
முயற்சி இன்றி சோம்பேறித்தனமாக ஊர் சுற்றக்கூடாது.
55. தக்கோன் எனத் திரி / Be trustworthy.
கௌரவமானவன் என்று பிறர் கருதும்படி நடக்க வேண்டும்.
56. தானமது விரும்பு / Be kind to the unfortunate.
ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
57. திருமாலுக்கு அடிமை செய் / Serve the protector.
மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்தால் புண்ணியம் கிடைக்கும்.
58. தீவினை அகற்று / Don't sin.
பிறருக்குத் தீமை உண்டாகும் செயல்களைச் செய்யக்கூடாது.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / Don't attract suffering.
மனம் வருந்தும்படி நடந்து கொள்ளக்கூடாது.
60. தூக்கி வினை செய் / Deliberate every action.
எந்தக் காரியத்தையும் நன்கு ஆராய்ந்து தெளிந்து செய்ய வேண்டும்.
61. தெய்வம் இகழேல் / Don't defame the divine.
கடவுளை இகழ்ச்சியாகப் பேசக்கூடாது.
62. தேசத்தோடு ஒத்து வாழ் / Live in unison with your countrymen.
தன் நாட்டு மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழவேண்டும்.
63. தையல் சொல் கேளேல் / Don't listen to the designing.
மனைவியின் இழிந்த சொற்களைக் கேட்டு அதன்படி நடக்கக்கூடாது.
64. தொன்மை மறவேல் / Don't forget your past glory.
பழமையான காரியங்களை மறந்து விடக்கூடாது.
65. தோற்பன தொடரேல் / Don't compete if sure of defeat.
தோல்வி உண்டாகும் எனத்தெரிந்தும் அதில் ஈடுபடக்கூடாது.

நகர வருக்கம்


66. நன்மை கடைப்பிடி / Adhere to the beneficial.
நற்காரியங்களை உறுதியாகச் செய்து வரவேண்டும்.
67. நாடு ஒப்பன செய் / Do nationally agreeables.
நாட்டு மக்கள் ஒப்புக்கொள்ளத்தக்க காரியங்களைச் செய்ய வேண்டும்.
68. நிலையில் பிரியேல் / Don't depart from good standing.
மதிப்போடு இருந்து விட்டுக் கேவலமாக நடந்து கொள்ளக் கூடாது.
69. நீர் விளையாடேல் /  Don't jump into a watery grave.
ஆபத்தான் வெள்ளத்தில் நீந்தி விளையாடக்கூடாது.
70. நுண்மை நுகரேல் / Don't over snack.
நோயைத் தரக்கூடிய ஆகாரங்களை உண்ணக் கூடாது.
71. நூல் பல கல் / Read variety of materials.
அறிவு வளர்ச்சிக்கான நூல்களை அதிகமாகப் படிக்க வேண்டும்.
72. நெற்பயிர் விளைவு செய் / Grow your own staple.
நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
73. நேர்பட ஒழுகு / Exhibit good manners always.
நேர்மையான வழியில் நடந்து கொள்ள வேண்டும்.
74. நைவினை நணுகேல் / Don't involve in destruction.
இகழ்ச்சியான காரியங்களைச் செய்யக்கூடாது.
75. நொய்ய உரையேல் / Don't dabble in sleaze.
பிறர் மனம் புண்படும் படியான வார்த்தைகளைக் கூறவேண்டாம்.
76. நோய்க்கு இடம் கொடேல் / Avoid unhealthy lifestyle.
நோய் உடலில் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பகர வருக்கம்
 

77. பழிப்பன பகரேல் / Speak no vulgarity.
பிறர் பழிக்கும்படியான இழிவான சொற்களைக் கூற வேண்டாம்.
78. பாம்பொடு பழகேல் / Keep away from the vicious.
பாம்போடு விளையாடுவது உயிருக்கு ஆபத்து.
79. பிழைபடச் சொல்லேல் / Watch out for self incrimination.
தவறான கருத்து ஏற்படும் சொற்களைச் சொல்ல வேண்டாம்.
80. பீடு பெற நில் / Follow path of honor.
பெருமைப்படத்தக்க முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / Protectyour benefactor.
புகழ்மிக்க பெரியார்களை வணங்கி, அவர்களைப் பின்பற்றி வாழ வேண்டும்.
82. பூமி திருத்தி உண் / Cultivate the land and feed.
நிலத்தைப் பயிர் செய்து, விளைந்த நெல்லைக் கொண்டு உண்ண வேண்டும்.
83. பெரியாரைத் துணைக் கொள் / Seek help from the old and wise.
அறிவு மிகுந்த ஒழுக்க சீலர்களை அணுகி, அவர்களின் அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும்.
84. பேதைமை அகற்று / Eradicate ignorance.
மூடத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது.
85. பையலோடு இணங்கேல் / Don't comply with idiots.
அறிவற்ற சிறுவனோடு பழகக் கூடாது.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / Protect and enhance your wealth.
பொருள்களையும், செல்வத்தையும் கவனமாகப் பாதுகாத்து வைத்துக் கொண்டு வாழ வேண்டும்.
87. போர்த் தொழில் புரியேல் / Don't encourage war.
வீணாக சண்டை சச்சரவுகளில் தலையிட வேண்டாம்.

மகர வருக்கம்
 

88. மனம் தடுமாறேல் / Don't vacillate.
மனம் கலங்கி, செய்வது அறியாது தடுமாற வேண்டாம்.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / Don't accommodate your enemy.
பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.
90. மிகைபடச் சொல்லேல் / Don't over dramatize.
அளவுக்கு மீறிய சொற்களைச் சொல்லக் கூடாது.
91. மீதூண் விரும்பேல் / Don't be a glutton.
அளவுக்கு அதிகமான உணவை உண்ண வேண்டாம்.
92. முனைமுகத்து நில்லேல் / Don't join an unjust fight.
போர் முனையில் ஆயுதம் இல்லாமல் நிற்கக்கூடாது.
93. மூர்க்கரோடு இணங்கேல் / Don't agree with the stubborn.
அறிவு இல்லாத மூடர்களோடு சேரக்கூடாது.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / Stick with your exemplary wife.
நல்ல மனைவியோடு இணைந்து வாழவேண்டும்.
95. மேன்மக்கள் சொல் கேள் / Listen to men of quality.
உயர் குணமிக்க பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு நடந்தால் நன்மை உண்டாகும்.
96. மை விழியார் மனை அகல் / Dissociate from the jealous.
மயக்கும் விலை மாதர் வீட்டுக்குப் போக வேண்டாம்.
97. மொழிவது அற மொழி / Speak with clarity.
சொல்லக் கூடியதை சந்தேகமின்றி தெளிவாகக் கூற வேண்டும்.
98. மோகத்தை முனி / Hate any desire for lust.
ஆசையை வெறுத்து அடக்க வேண்டும்.

வகர வருக்கம்
 

99. வல்லமை பேசேல் / Don't self praise.
உன்னுடைய திறமையை நீயே புகழ்ந்து கொள்ளக் கூடாது.
100. வாது முற்கூறேல் / Don't gossip or spread rumor.
வலியச் சென்று யாரையும் விவாதங்களுக்குக் கூப்பிடக் கூடாது.
101. வித்தை விரும்பு / Long to learn.
கல்வி முதலான கலைகளை ஆசையோடு கற்றுக் கொள்ள வேண்டும்.
102. வீடு பெற நில் / Work for a peaceful life.
முக்திக்கான வழியை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
103. உத்தமனாய் இரு / Lead exemplary life.
நற்குணம் உள்ளவனாக வாழ வேண்டும்.
104. ஊருடன் கூடி வாழ் / Live amicably.
ஊர் மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழ வேண்டும்.
105. வெட்டெனப் பேசேல் / Don't be harsh with words and deeds.
யாரிடமும் கடுமையான சொற்களைக் கூறக்கூடாது.
106. வேண்டி வினை செயேல்/ Don't premeditate harm.
வேண்டும் என்றே எவருக்கும் தீமை செய்யக் கூடாது.
107. வைகறைத் துயில் எழு / Be an early-riser.
அதிகாலையில் விழித்து எழுவது சிறப்புடையதாகும்.
108. ஒன்னாரைத் தேறேல் / Never join your enemy.
எதிரிகளிடம் நம்பிக்கை கொள்ளக் கூடாது.
109. ஓரம் சொல்லேல் / Be impartial in judgement.
ஒருதலைப் பட்சமாகக் கூறக் கூடாது
                                                    - ஔவையார் / Avvaiyaar.


வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை  

Collected from Social Media...

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...