Monday, September 24, 2018

இயற்கை மணம் தவழும் குங்குமம் எப்படி தயாரிப்பது!!

குங்குமத்தை எளிய முறையில் நாமே தயாரிக்கலாம்..

தேவையான பொருள்கள் :-

கிழங்கு மஞ்சள் - 100 கிராம்
வெண்காரம் - 10 கிராம்
படிகாரம் - 10 கிராம்
எலுமிச்சம் பழங்கள் - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - சிறிதளவு

வெண்காரம் படிகாரம் நறுமணத் திரவியங்கள் - ஆகியன நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்.

எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும்..

கிழங்கு மஞ்சளை ஒன்றிரண்டாக உடைத்து - அவை எலுமிச்சம்
பழச்சாற்றில் மூழ்கும்படியாகக் கலந்து கொள்ளவும்..

இதனுடன் - வெண்காரம் படிகாரம் இரண்டையும் மிருதுவாக பொடி
செய்து கலந்து கொள்ளவும்..

இந்தக் கலவையை அப்படியே – சில தினங்களுக்கு ஊறவிடவும்.

அவ்வப்போது இந்தக் கலவையை மரக்கரண்டியால் கலக்கி விடவும்.

மஞ்சளில் - எலுமிச்சம் பழச்சாறு முழுமையாக சேர்வதற்குச் சில நாட்கள் ஆகும்.

மஞ்சள் துண்டுகள் குங்கும நிறத்துக்கு மாறியதும் – பெரிய தாம்பாளத்தில் இந்தக் கலவையைக் கொட்டி நிழலில் உலர வைத்து கல்லுரலில் இட்டு மெதுவாக இடித்து - சலித்துக் கொள்ளவும்..

இதனுடன் - சில துளிகள் நல்லெண்ணெய்யை நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்போது - குங்குமம் அரக்கு நிறமாக இயற்கையான மஞ்சள் வாசத்துடன் இருக்கும்.

மிகுந்த வாசம் வேண்டுமெனில் -தாழம்பூ மல்லிகை ரோஜா – இவற்றில் ஏதாவதொரு வாசனைத் திரவியத்தின் சில துளிகளைக் கலந்து கொண்டால் போதும்..நறுமணம் இல்லமெங்கும் கமழும்..

காற்று புகாத பாட்டில்களில் இறுக அடைத்துக் கொண்டால் நல்லது.. நாமும் பயன்படுத்திக் கொண்டு - கோயில்களுக்கும் வழங்கலாம்.. மதுரை மீனாட்சியின் குங்குமம் தாழம்பூ வாசத்துடன் திகழும். பக்குவத்தை மீறி வெண்காரம்

படிகாரம் அதிகமாகி விட்டால் - நெற்றியில் அரிப்பு ஏற்படும்.. கவனமும் பொறுமையும் மிக அவசியம்..

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை 

Collected from Social Media..

Wednesday, September 19, 2018

நெற்றிக் குங்குமத்தால் என்ன விசேஷம்!?..

குங்குமம் என்றாலே மங்கலம்...

நெற்றியில் - புருவ மத்தில் -மூளையின் பின்புறமாகத் தான் பீனியல் எனும் சுரப்பி (Pineal Gland) அமைந்துள்ளது..

யோக நிலைகளில் ஆக்ஞா எனக் குறிப்பிடப்படுவது – இதுவே!. 



ஞானக் கண் என்றும் மூன்றாவது கண் என சிறப்பிக்கப்படுவதும் இதுவே!..

பீனியல் சுரப்பி நமது உடல் செயல்பாட்டில் பெரும்பங்கு வகிக்கின்றது.

இது மெலட்டோனின் எனும் ஹார்மோனைச் சுரக்கின்றது.

மெலட்டோனின் தான் - உறக்கத்தையும் விழிப்பையும் கட்டுப்படுத்துகின்றது.

நல்ல தூக்கமும் விழிப்பும் தான் மனிதனை நிலைப்படுத்துவன..

மெலட்டோனின் இரவில் தான் சுரக்கின்றது..

அதிலும் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கும் போது தான் சுரக்கின்றது.

பகல்பொழுதில் – கதவுகளை அடைத்து இருட்டாக்கிக் கொண்டு உறங்கினாலும் சுரப்பதில்லை..

மெலட்டோனின் சரிவர சுரந்தால் தான் - மற்ற ஹார்மோன்களும் சரிவர சுரந்து உடல் நலமுடன் திகழும்.

இரவில் நன்றாக உறங்காதவர்களின் மனோநிலையை – மறுநாள் காலையில் நாம் நிதர்சனமாகக் காணலாம்..

இளமை, ஆரோக்கியம் (நோய் எதிர்ப்பு சக்தி), பொறுமை, மன அமைதி – ஆகியவற்றுக்கு மெலட்டோனின் தான் காரணம்..

நெற்றி நடுவில் – புருவ மத்தியில் – நினைவுகளைக் குவியச் செய்வதன் மூலம் இந்த சுரப்பியை நிலைப்படுத்தலாம்..

அதனால் நமக்குக் கிடைப்பது - ஆன்மீக முன்னேற்றம்.

பீனியல் சுரப்பி செம்மையாக இருந்தால் – அமானுஷ்யத்தை உணரமுடியும் என்பது ஆன்றோர் வாக்கு..

தொலைவில் இருப்பதையும் உணர முடியும்.

எனவே தான் - மூன்றாவது கண் என சிறப்பிக்கப்பட்டது. 

மனோவசியம் பழகியவர்கள் தங்கள் பார்வையை எதிராளியின் புருவ மத்தியில் குவிய வைத்து அவர்களைத் தங்கள் கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்..

நெற்றியின் மத்தியில் திருநீறு குங்குமம் திருமண் – இவை இருந்தால் - பிறரால் வசியம் செய்ய முடிவதில்லை..

தீய எண்ணங்கள் நம்மை அணுகமுடியாது.. நம்மைக் காப்பவை சமயச் சின்னங்கள் என்றாகின்றன..

அந்த சிறப்பினைப் பேணுவதற்காகவே – குங்குமம் இட்டுக் கொள்வது..

அனைவருடைய உடலிலிருந்து மின்காந்த அலைகள் வெளியாகின்றன..

எனினும் - மின் காந்த அலைகள் புருவ மத்தியில் இருந்து தான் அதிகமாக வெளிப்படுகின்றன..

அவற்றைக் கட்டுப்படுத்தவே - நெற்றியில் குங்குமம் சந்தனம் தரிப்பது..

புருவ மத்தியில் குங்குமம் சந்தனம் தரிப்பதால் - மனதின் சக்தி வீணாகாமல் தடுக்கப்படுகின்றது.

முகத்திற்குத் தனியாக அழகு கிடைக்கின்றது. இதுதான் தேஜஸ் எனப்படுவது.

நெற்றியில் திலகம் வைப்பது அழகு அலங்காரம் - என்றாலும், ஆரோக்கியத்திற்காகவும் என்பர் பெரியோர்..

ஆண்களும் பெண்களும் குங்குமம் தரித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.. என்றாலும் - 

தற்காலத்துப் பெண்கள் ஒட்டும் பொட்டிலேயே அதிக நாட்டம் கொண்டிருக்கின்றனர்.

உடலின் சக்தி நிலைகளாகக் கருதப்படும் ஏழு சக்கரங்களுள் ஆறாவதாக விளங்குவது ஆக்ஞா சக்கரம்..

நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரம் தான் - மூளை, நரம்பு மண்டலம், நாசி , காதுகள் மற்றும் கண்களைக் கட்டுப்படுத்துவதாகக் கூறுவர்.

மனம் இங்கே நிலைப்பட்டால் - புத்தி கூர்மையும் ஆன்ம சக்தியும் விளையும் என்பது குறிப்பு..

எனவே நலம் பல நிகழ்த்தும் நெற்றியின் மத்தியில் குங்குமம் வைத்து சிறப்பு சேர்க்கின்றோம்..

ஆனால் - இன்றைக்கு களங்கமில்லாத குங்குமம் கிடைக்கின்றதா எனில் -

இல்லை!..

பெரும்பாலான கடைகளில் குங்குமம் என்ற பெயரில் கிடைப்பவை - சாயப் பொடிகளே!..

அவைகளில் இரசாயனக் கலப்பு உள்ளதால் - நெற்றியில் அரிப்பும் புண்களும் உண்டாகின்றன..

இது இப்படி என்றால் – நாகரிகமாக ஒட்டிக் கொள்ளும் பொட்டில் கூட விஷத் தன்மை இருப்பதால் அவைகளும் பாதுகாப்பு அற்றவைகளாகின்றன..

அப்படியானால் நல்ல குங்குமம் கிடைப்பதேயில்லையா?.. கிடைக்கின்றது..

எங்கே! வீட்டிலேயே தரமான இயற்கை முறை குங்குமம் தயாரித்துக் கொள்ளலாமே !

குங்குமம் தரிப்பதால் சகல நன்மைகளும் விளையும் என்பர் பெரியோர்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை 

Collected from Social Media..

Wednesday, September 12, 2018

தோப்புக்கரணம், ஒரு மூளை பயிற்சியா !!

அனைத்து உடல் பயிற்சிகளுக்கும் முன்னோடியாக விளங்கும் தோப்புக்கரணம், இந்து தத்துவத்தில் வினைகளை வேரறுக்கும் கடவுளான விநாயகரை வழிபடும் வழிபாட்டு முறையாக தோப்புக்கரணம் இருந்துவந்துள்ளது. 
நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி உட்கார்ந்து எழுவது தோப்புக்கரணம் ஆகும்.
நரம்பு மண்டலங்கள் எவ்வாறு தூண்டப்படுகின்றன:

நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் மூளையின் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன. 

தோப்புக்கரணம் எங்கு இருந்து வருகிறது:
கோவில்களில் விநாயகரை வழிபடும் வழிபாட்டு முறையாக தோப்புக்கரணம் இருந்துவந்துள்ளது

பாடசாலைகளில் ஞாபக மறதியினால் நிகழும் சிறு குற்றங்களுக்கு தோப்புக்கரணம் தண்டனையாக வழங்கப்பட்டு வருகின்றது. 

அதைவிடவும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் ஒரு தண்டனையாக தோப்புக் கரணம் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.

வெளிநாடுகளில் இதையே சூப்பர் பிரைன் யோகா என்று சொல்லி பெரியவர்கள் முதல் சிறியவர் வரை தோப்புக்கரணம் போடுவது பிரபலமானதாக உள்ளது.

எப்போது தோப்புக்கரணம் போடலாம்:
அதிகாலையில் பல் துலக்கி, உடல் நீராடியபின் நம் முன்னோர்களின் வழி காட்டுதலின்படி உள்ளம் உடல் நலம் காக்க அதிகாலை தோப்புக்கரணம் (உக்கி போடுதல்) போடுவோம். தோப்புக்கரணம் ஒரு உன்னதமான உடற்பயிற்சி அல்லது யோகா என்றால் உண்மை.

தோப்புக்கரணம் போடுவது எப்படி?
தோப்புக்கரணம் சுத்தமான சம தலமான இடத்தில் நிமிர்ந்து நின்றபடி (மரத்தின் கீழ் என்றால் மிகவும் நன்று) செய்ய வேண்டிய பயிற்சி. ஆடைகள் தளர்வாக இருத்தல் அவசியம்.

1. இரு கால்களுக்கும் நடுவே தோள்பட்டை நீளம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.
2. இடது கையால் வலது காதுமடலை பிடிக்கவும். கட்டைவிரல் வெளியேயும் ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்குமாறு இருவிரலால் பிடிக்க வேண்டும்.
3. அதே போல் வலது கையால் இடது காதை பிடிக்க வேண்டும். வலது கை கண்டிப்பாக இடது கையின் மேல் இருக்க வேண்டும்.
4. தலை நேராய் பார்த்தபடியே முச்சு காற்றை விட்டபடியே முழுவதும் உட்கார வேண்டும். சிரமம் இருந்தால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் உட்காரலாம். 
5. மூச்சை இழுத்துக்கொண்டே எழவேண்டும். வேகமாக செய்யக் கூடாது பொறுமையாக செய்ய வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும்.

எத்தனை முறை போடலாம்:
இப்பயிற்சியினை முதலில் 5 முறையும், பின் 7, 9, 11, 21 என்று பழகியபின், அவரவரால் முடியும் எண்ணிக்கையில் தோப்புக்கரணம் பயிற்சி மேற்கொள்ளலாம்

தோப்புக்கரணத்தால் கிடைக்கும் பலன்கள்?
தோப்புகரணத்தில் காது நுனிகளில் தொடுவதன் காரணமாக, மூளையின் நரம்பு செல்கள் தூண்டப்பட்டு மனம் ஒருமுகப்படும், நினைவாற்றல், ஞாபக சக்தி அதிகரிக்கிறது. படிப்பிலும் கவனம் கூடுகிறது.

உடலின் மந்தமான மனநிலை நீங்கி, புதுவித ஊக்கமும் உற்சாகமும் கிடைக்கிறது. அதோடு உடலின் ஆற்றல் சக்தியும் தோப்புக்கரணம் செய்வதால், மூளைக்கு ரத்தோட்டம் சீராகி, மனதில் ஏற்படும் மன அழுத்தம், மனச்சோர்வு நீங்கி, உடலின் கை, கால்களின் தசைகள் வலிமையாகும்.
தோப்புக்கரணம், யோகா மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றி வந்தால், பெண்களின் பிரசவம் எளிதாகும். அதோடு அல்சைமர், ஆட்டிசம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைகின்றன. மேலும் நாடிகள் சுத்தம் பெறுகின்றன. 

முன்னோரின் உடல் அறிவியல்
கோவில்களில் போடப்படும் தோப்புக்கரணம் என்பது நம் முன்னோரின் உடல் அறிவியல் ஆகும்.இன்னும், நம்முடைய சிற்றறிவுக்கு எட்டாத எத்தனையோ விசயங்களை, கோவில்களில் 
நாம் செய்யும் நடைமுறைகளாக மாற்றி வைத்திருக்கின்றனர், நம் மூதாதையர். 

கோவிலுக்குப்போகும் பக்தர்கள் எல்லாம் திருக்கோவிலில், முதலில் உள்ள விநாயகர் சன்னதிமுன் தோப்புக்கரணம் போட்டுத்தலையில் குட்டிக்கொள்வர், அதன் பின்னே, மற்ற தெய்வச்சந்நதிகளுக்குச் செல்வர், 

ஆக, தோப்புக்கரணம், என்ற ஒற்றைப்பயிற்சியே, அனைத்துவகை உடற்பயிற்சிகளுக்கும், முன்னோடியாக விளங்குகிறது.

மேலும், உடற்பயிற்சி செய்யாவிடினும், அல்லது தெரியாவிட்டாலும், நீங்கள் தினமும், தோப்புக்கரணம் போட்டுவது சிறந்தது.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை 

Collected from Social Media..

Sunday, September 2, 2018

சாப்பிடும் போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்!!!

1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள் வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது
2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது.
3. அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் . ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.
4. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.
5. நொறுங்க தின்றால் நூறு வயது.
6. தாகத்திற்கு மட்டும் நீர் பருக வேண்டும்.
7. மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.
8. உணவில் சீரகம் (சீர் அகம்) சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.
9. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.
10. கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.
11. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம் தலை சுற்றல் வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.
12. உணவு உண்பதற்கு முன்பு கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.
13. காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.
14. உணவு உண்ணும் போது பேசக் கூடாது. படிக்கக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது
15. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.
16. காலணி அணிந்துக் கொண்டு உண்ணக் கூடாது.
17. சூரிய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
18. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
19. நிலவின் ஒளியில் உண்ணக் கூடாது. பௌர்ணமியில் நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடக் கூடாது. பலருடன் சேர்ந்து சாப்பிடலாம்.
20. இருட்டிலோ நிழற்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.
21. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது.
22. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.
23. சாப்பிடும் போது  கையில் ஏந்திக் கொண்டோ, மடியில் வைத்துக் கொண்டோ, படுத்துக் கொண்டோ உண்ணக் கூடாது.
24. பிறருடன் பேசிக் கொண்டோ, வேறு வேளைகளில் மனதை செலுத்திக் கொண்டோ உண்ணக் கூடாது.
25. உண்ணும் உணவில் மட்டுமே முழுக் கவனம் செலுத்த வேண்டும்.
26. வாழை இலை சாப்பாடு மிகவும் சிறந்தது.
27. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.
28. வெங்கலம் அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.
29. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி உண்ணக் கூடாது. .
30. வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு அறிவு மன ஒருமைப்பாடு குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.
31. நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவுப் பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.
32. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், தயிர், நெல்லிக்காய், முள்ளங்கி ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.
33. உண்ணும் இலையில் முதலில் காய்கறிகளோ அப்பளமோ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.
34. அதே போல் முதலில் கீரையோ வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.
35. மண் பாண்ட சமையலே என்றும் ஆரோக்கியமானது.

வாழ்க வளமுடன்....

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை 

Collected from Social Media..

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...