Wednesday, September 12, 2018

தோப்புக்கரணம், ஒரு மூளை பயிற்சியா !!

அனைத்து உடல் பயிற்சிகளுக்கும் முன்னோடியாக விளங்கும் தோப்புக்கரணம், இந்து தத்துவத்தில் வினைகளை வேரறுக்கும் கடவுளான விநாயகரை வழிபடும் வழிபாட்டு முறையாக தோப்புக்கரணம் இருந்துவந்துள்ளது. 
நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி உட்கார்ந்து எழுவது தோப்புக்கரணம் ஆகும்.
நரம்பு மண்டலங்கள் எவ்வாறு தூண்டப்படுகின்றன:

நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் மூளையின் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன. 

தோப்புக்கரணம் எங்கு இருந்து வருகிறது:
கோவில்களில் விநாயகரை வழிபடும் வழிபாட்டு முறையாக தோப்புக்கரணம் இருந்துவந்துள்ளது

பாடசாலைகளில் ஞாபக மறதியினால் நிகழும் சிறு குற்றங்களுக்கு தோப்புக்கரணம் தண்டனையாக வழங்கப்பட்டு வருகின்றது. 

அதைவிடவும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் ஒரு தண்டனையாக தோப்புக் கரணம் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.

வெளிநாடுகளில் இதையே சூப்பர் பிரைன் யோகா என்று சொல்லி பெரியவர்கள் முதல் சிறியவர் வரை தோப்புக்கரணம் போடுவது பிரபலமானதாக உள்ளது.

எப்போது தோப்புக்கரணம் போடலாம்:
அதிகாலையில் பல் துலக்கி, உடல் நீராடியபின் நம் முன்னோர்களின் வழி காட்டுதலின்படி உள்ளம் உடல் நலம் காக்க அதிகாலை தோப்புக்கரணம் (உக்கி போடுதல்) போடுவோம். தோப்புக்கரணம் ஒரு உன்னதமான உடற்பயிற்சி அல்லது யோகா என்றால் உண்மை.

தோப்புக்கரணம் போடுவது எப்படி?
தோப்புக்கரணம் சுத்தமான சம தலமான இடத்தில் நிமிர்ந்து நின்றபடி (மரத்தின் கீழ் என்றால் மிகவும் நன்று) செய்ய வேண்டிய பயிற்சி. ஆடைகள் தளர்வாக இருத்தல் அவசியம்.

1. இரு கால்களுக்கும் நடுவே தோள்பட்டை நீளம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.
2. இடது கையால் வலது காதுமடலை பிடிக்கவும். கட்டைவிரல் வெளியேயும் ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்குமாறு இருவிரலால் பிடிக்க வேண்டும்.
3. அதே போல் வலது கையால் இடது காதை பிடிக்க வேண்டும். வலது கை கண்டிப்பாக இடது கையின் மேல் இருக்க வேண்டும்.
4. தலை நேராய் பார்த்தபடியே முச்சு காற்றை விட்டபடியே முழுவதும் உட்கார வேண்டும். சிரமம் இருந்தால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் உட்காரலாம். 
5. மூச்சை இழுத்துக்கொண்டே எழவேண்டும். வேகமாக செய்யக் கூடாது பொறுமையாக செய்ய வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும்.

எத்தனை முறை போடலாம்:
இப்பயிற்சியினை முதலில் 5 முறையும், பின் 7, 9, 11, 21 என்று பழகியபின், அவரவரால் முடியும் எண்ணிக்கையில் தோப்புக்கரணம் பயிற்சி மேற்கொள்ளலாம்

தோப்புக்கரணத்தால் கிடைக்கும் பலன்கள்?
தோப்புகரணத்தில் காது நுனிகளில் தொடுவதன் காரணமாக, மூளையின் நரம்பு செல்கள் தூண்டப்பட்டு மனம் ஒருமுகப்படும், நினைவாற்றல், ஞாபக சக்தி அதிகரிக்கிறது. படிப்பிலும் கவனம் கூடுகிறது.

உடலின் மந்தமான மனநிலை நீங்கி, புதுவித ஊக்கமும் உற்சாகமும் கிடைக்கிறது. அதோடு உடலின் ஆற்றல் சக்தியும் தோப்புக்கரணம் செய்வதால், மூளைக்கு ரத்தோட்டம் சீராகி, மனதில் ஏற்படும் மன அழுத்தம், மனச்சோர்வு நீங்கி, உடலின் கை, கால்களின் தசைகள் வலிமையாகும்.
தோப்புக்கரணம், யோகா மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றி வந்தால், பெண்களின் பிரசவம் எளிதாகும். அதோடு அல்சைமர், ஆட்டிசம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைகின்றன. மேலும் நாடிகள் சுத்தம் பெறுகின்றன. 

முன்னோரின் உடல் அறிவியல்
கோவில்களில் போடப்படும் தோப்புக்கரணம் என்பது நம் முன்னோரின் உடல் அறிவியல் ஆகும்.இன்னும், நம்முடைய சிற்றறிவுக்கு எட்டாத எத்தனையோ விசயங்களை, கோவில்களில் 
நாம் செய்யும் நடைமுறைகளாக மாற்றி வைத்திருக்கின்றனர், நம் மூதாதையர். 

கோவிலுக்குப்போகும் பக்தர்கள் எல்லாம் திருக்கோவிலில், முதலில் உள்ள விநாயகர் சன்னதிமுன் தோப்புக்கரணம் போட்டுத்தலையில் குட்டிக்கொள்வர், அதன் பின்னே, மற்ற தெய்வச்சந்நதிகளுக்குச் செல்வர், 

ஆக, தோப்புக்கரணம், என்ற ஒற்றைப்பயிற்சியே, அனைத்துவகை உடற்பயிற்சிகளுக்கும், முன்னோடியாக விளங்குகிறது.

மேலும், உடற்பயிற்சி செய்யாவிடினும், அல்லது தெரியாவிட்டாலும், நீங்கள் தினமும், தோப்புக்கரணம் போட்டுவது சிறந்தது.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை 

Collected from Social Media..

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...