Friday, December 20, 2019

தனுர் மாதம் என்னும் மார்கழி மாத சிறப்புக்கள் !!

மார்கழி மாதப் பிறப்பன்று சூரியன் தனுசு ராசியில் பிரவேசிப்பதால் இந்த மாதத்துக்கு தனுர் மாதம் என்ற பெயரும் உண்டு.



ஆடி மாதத்தைப் போல மார்கழி மாதமும் தேவர் மாதம், அதாவது இறைவழிபாட்டுக்கு உரிய மாதம் என்று போற்றப்படுகிறது.

“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதையில் கூறியுள்ளார். அத்தகைய சிறப்பு மிக்க மாதம் இந்த மார்கழி மாதம்.

தை மாதம் முதல் ஆனி மாதம் வரை "உத்தராயணம்" என்றும் (சூரியன் வடதிசையில் பயணிக்கும் நாட்கள்)....

ஆடி முதல் மார்கழி வரை "தட்சிணாயனம்" என்றும் (சூரியன் தெற்கு திசையில் பயணிக்கும் நாட்கள்) என்றும் கூறப்படுகிறது. 

மேலும் மனித வாழ்வின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். 

அதாவது உத்தராயணம் தேவர்களுக்கு பகல் பொழுதாகவும் தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகவும் கருதப்படுகிறது. 

அந்த வகையில் ஆடி மாதம் தேவர்களுக்கான இரவுப் பொழுது துவங்குகிறது. 

மார்கழி மாதம் தேவர்களுக்கான விடியற் பொழுது துவங்குகிறது. 

எனவேதான் மார்கழி மாதத்தில் ஆலயங்களில் விடியற்காலையிலேயே பூஜைகள் செய்யப்படுகின்றன. 

திறக்காத கோவில்களுக்கு திறக்கும் மாதம் என்று மார்கழியின் சிறப்பினை முதுமொழி ஒன்று எடுத்துரைக்கிறது.

விஷ்ணு ஆலயங்களில் பொதுவாக மார்கழி மாதத்தில் சுப்ரபாதத்தி/ற்கு பதில் திருப்பாவை ஓதுவது வழக்கம்.

அறிவியல் சார்ந்து பார்க்கும்போது மார்கழி மாதத்தின் விடியலில்தான் – காலை 4.30 மணி முதல் 6 மணி வரை, ஓஸோன் படலம் பூமிக்கு வெகு அருகில் உள்ளது. 

ஓஸோனை சுவாசித்தல் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது என்ற காரணத்தாலேயே மார்கழி மாத விடியலில் பெண்கள் கோலம் போடவும் ஆண்கள் பஜனைப் பாடல்கள் பாடி வீதியில் வலம் வருகின்றனர் என்று கூறலாம்.

அனைத்துக்கும் மேலாக மார்கழி மாதத்தை சைவ, வைஷ்ணவ மாதம் என்றே கூறலாம். 

காரணம் இந்த மாதத்தில் சிவபெருமானுக்கு திருவாதிரையன்றும் விஷ்ணு பகவானுக்கு வைகுண்ட ஏகாதசி அன்றும் சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெறுகின்றன.

மேலும், வழிபாட்டு மாதம் என்பதற்கு ஏற்ப இந்த மாதத்தில் அனைத்து தெய்வங்களுக்குமே சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

திருவாதிரை கொண்டாட்டத்தில் சிவபெருமான் வணங்கப்படுகிறார்.

வைகுண்டஏகாதசியில் விரதம் கடைப்பிடித்து திருமால் போற்றப்படுகிறார்.

பாவை நோன்பு மூலம் பெண்கள் ஆதிபராசக்தியான அன்னையை வழிபடுகின்றனர்.

படி உற்சவம் என்று முருகப்பெருமானுக்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கார்த்திகை மாதம் வளர்பிறை முதல் மார்கழி வளர்பிறை வரை 21நாட்களுக்கு விநாயகர் சஷ்டி விரதம் கொண்டாடப்படுகிறது.

இவ்வாறு மார்கழியில் விநாயகர், முருகன், சிவபெருமான், திருமால் ஆதிபராசக்தி என்று அனைத்து தெய்வங்களும் வழிபடப்படுகின்றனர்.

இதிகாச புராணங்களிலும் மார்கழி மாதம்

மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.

தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடல் கடைந்த நிகழ்வு நடந்ததும் இந்த மாதத்தில்தான்.

கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து கோகுலத்தில் வாழ்ந்த மக்களை பகவான் கிருஷ்ணர் காப்பாற்றியது மார்கழி மாதத்தில்தான்.

எல்லாவற்றிற்கும் மேலாக, வைணவர்களால் மிகவும் போற்றப்படும் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் அந்த திருமாலையே கணவனாக அடைய வேண்டும் என்று பாவை நோன்பு இருந்தது இந்த மாதத்தில்தான்.

இப்படி பல சிறப்புகளைப் பெற்ற இந்த மார்கழி மாதத்தில் இறைவனை வணங்கி நற்பேறு பெறுவோம்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

மார்கழியில் ஏன் திருமணம் செய்யக் கூடாது?

மிகவும் விசேஷமாக பார்க்கப்படும் மார்கழி மாதத்தில் ஏன் திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகள் தவிர்க்க வேண்டும்?



மாதங்களில் உயர்ந்த மாதம் மார்கழி. இந்த மாதத்தில் எவ்வளவோ சிறப்புகள் உண்டு. 
உண்மையில், இது ஒரு தெய்வீகமான மாதமாகும்.

பொதுவாக இந்த மாதத்தில் விதை விதைக்கக் கூடாது என்பார்கள்.  இந்த காலத்தில் விதை விதைத்தால் அது சரியாக வளர்வதற்கான சூழல் இருக்காது.

ஏனெனில் இது விதை விதைப்பதற்கான காலம் அல்ல. விதை வளர்வதற்கான காலம்.

இந்த மாதத்தில் விதைத்தால், விதை சரியான உயிர் தன்மையற்று வளராமல் போய்விடும்.

இந்த காரணத்தாலே, மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது என சொல்கின்றனர்.

ஆடி மாதம் போல, மார்கழி மாதம் இறைவனுக்குரிய மாதம். இறைவனை வணங்க வேண்டிய மிக அற்புத மாதம் என்பதால் திருமணம் செய்யப்படுவதில்லை.

பொதுவாக ஆடி, புரட்டாசி,மார்கழி ஆகிய மாதங்களில் சுப நிகழ்ச்சிகள்  இருக்காது. 

அம்மாதங்களில் இறை வழிபாட்டினை மேற்கொள்வர். அதன்படி ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடும்,புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடும் நடைபெறும். ஆனால் மார்கழியில் மட்டும் அனைத்து வழிபாட்டுக்கும் உரியதாக விளங்குகிறது.

மார்கழியில் திருமண சுப காரியம் நடத்தப்படாவிட்டாலும், திருமணத்திற்கான வரன் பார்த்தல், ஜாதகம் பரிமாற்றம், கர்ப்பிணிப் பெண்களுக்கு சீமந்தம் செய்தல் போன்ற சுப காரியங்கள் செய்யலாம்.


மார்கழி மாதத்தில் புதுமனையில் குடிபுகுதல், வாடகை அல்லது ஒத்திக்கு வீடு மாறி செல்லுதல், புதிய அலுவலக கட்டடத்திற்கு மாறுதல் கூடாது.

திருமணம், நிச்சயதார்த்தம், காது குத்துதல், புதிய வீட்டிற்கான பத்திரப் பதிவு, வாகனப் பதிவு செய்தலும், வாங்குதலும் கூடாது.

அதிகாலை எழுந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடுவது அல்லது கேட்பது, பஜனை பாடுதல் புண்ணியமாகும்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

Tuesday, December 17, 2019

மார்கழி மாத கோலத்தின் மேல் பரங்கிப் பூ வைப்பதன் சூட்சுமமான தகவல்!!

கோலத்தின் மேல் ஏன் பரங்கிப் பூவை வைக்க வேண்டும்? 



சூட்சுமமான தகவல் அது. 

இந்த மாதத்தை நோன்பு மாதம் என்றும் சொல்வதுண்டு. பாவையர் நோன்பிலிருந்து நல்கணவனைப் பெறுவார். 

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முதுமொழி. மார்கழியில் பாவையர் நோன்பிருந்து வழிபட தை பிறந்தவுடன் அவர்களின் விரதத்தின் பயனாக நல்லதொரு வழி பிறந்து அவர்களின் நோக்கம் நிறைவேறும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

அதனால்....எந்தெந்த வீடுகளில் மகனோ.. மகளோ திருமணத்திற்கு தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டுக் கோலங்களில் பரங்கிப்பூவை வைத்துவிடுவார்கள்.  

ஊர்க்காரர்கள் தெருவில் பஜனை செய்தபடி வரும்போது, அந்தப் பூவைப் பார்ப்பார்கள். பூ இருக்கும் வீட்டில் பூவை இருக்கிறாள் என்று புரிந்து கொள்வார்கள்.  

தை மாதம் பிறந்ததும், அந்த வீட்டிற்குப் போய் பெண்ணையோ, மாப்பிள்ளையையோ பேசி முடித்து விடுவார்கள்.

ஆனால், இப்போதோ, இந்த சூட்சுமத்தை  உணராமல், எல்லா வீடுகளிலும் கோலத்தின் மேல் அழகுக்காக பூ வைக்கிற வழக்கம் வந்து விட்டது.

.அந்த பழைய வழக்கத்தில் வேறொரு அற்புதமான நிகழ்ச்சியும் உண்டு.  கோலங்களின் மீது பரங்கிப் பூக்களை வைத்தார்கள் இல்லையா! 

அதிலுள்ள தேனைக் குடிக்க கருத்த வண்டுகள் மலர்களைச் சுற்றி வட்டமிடும். குழந்தைகள் அந்தக்  கோலத்தைச் சுற்றி அமர்ந்து, அந்த வண்டுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். 

சூரியன் உச்சியை அடையும் முன் சின்னஞ்சிறு கிண்ணங்களில்  பாலைக் கொண்டு வந்து அந்த மலர்களுக்குள் ஊற்றி நிரப்புவார்கள். 

அதை அப்படியே சூரிய பகவானுக்கு நைவேத்யம் செய்வார்கள். கிண்ணத்தில் மீதியிருக்கும்  பாலைத் தாங்களே குடித்துவிடுவார்கள்.

அந்தப்பூவை சாணத்திற்குள் அழுத்தி,பூ வரட்டி தட்டி  வெயிலில் காய வைத்து விடுவார்கள். 

அதன்பிறகு அதைச் சேகரித்து வீட்டு முற்றத்தில் பொங்கலிட்டு வழிபடுவார்கள். இதனைச் சிறு வீட்டு பொங்கல் என அழைப்பர். பின்னர் சேகரித்த சாண உருண்டைகளை நீர் நிலைகளில் சேர்ப்பார்கள்.

இதெல்லாம் எவ்வளவு ஆனந்தமாயிருக்கும் தெரியுமா!அந்த ஆனந்தம் மறுபடியும் கிடைக்க, அந்த மாதவனை வேண்டுவோம்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

மார்கழியில் அதிகாலை கோலமிட்டு வீட்டை சிறப்பு செய்வதன் ரகசியம்?

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணனே கூறியிருக்கிறார்.


இதனை பீடுடை மாதம் என்று அழைப்பார்கள். இந்த சொல் நாளடைவில் திரிந்து பீடைமாதம் என்று வழக்கில் வந்துவிட்டது. 

பீடுடை மாதம் எனில் சிறந்த, பெருமைவாய்ந்த, மதிப்புள்ள மாதம் என்று பொருள். 

அதனால் அல்லவோ பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தான் அந்த மாதமாக இருப்பதாக பறைசாற்றியுள்ளார்.

இம்மாதந்தில் அனைத்து கோயில்களும் விடியற்காலையில் திறக்கப்படும். சிறப்பு வழிபாடுகள் ஆராதனைகள் நடைபெறும்.

வீடுகளில் அதிகாலை பிரம்ம முகூர்த்தமான 4.30 மணிக்கெல்லாம் எழுந்து நீராட வேண்டும். 

அதிகாலை நேரங்களில் வீட்டில், வீட்டு வாசலில் தீபம் ஏற்றி, வீடு முழுவதும் பிரகாசமாக காட்சியளிக்க வேண்டும்.

வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடவேண்டும். அந்த கோலத்தின் நடுவில் சிறிதளவு மாட்டுச் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து அதில் பரங்கிப் பூ வைக்க வேண்டும்.

இவ்வாறு மார்கழியை வரவேற்று அனைவர் வீட்டு வாசலிலும் அழகிய கோலங்களும், தீபங்களும் அணிவகுத்து அழகுற காட்சியளிக்கும்.



வீதிகளில் ஒரு கூட்டம், இசைக்கருவிகளுடன் பஜனை செய்தபடி வரும்.

இந்த மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலை/விடியற்காலை நேரம். எந்த ஒரு காரியத்தையும் சிந்தித்து செயல்படுத்தி திட்டம் தீட்ட உகந்த  நேரம் அதிகாலை நேரம். 

மார்கழியில் மட்டும் இதெல்லாம் எதற்காக?

ஏன் அதிகாலை குளித்துவிட வேண்டும்?

ஏன் கோலமிட்டு வீட்டை சிறப்பு செய்கிறார்கள்?

ஏன் அதிகாலையில் வீதி பஜனை? 

மற்ற மாதங்களுக்கு இந்த சிறப்பு இல்லாதது ஏன்?

விஞ்ஞான ரீதியாகவே, மார்கழி மாதத்தில் மட்டும், அதுவும்  அதிகாலையில் ஏராளமான ஆக்ஸிஜன் உள்ளிட்ட சக்திகள் வெளிப்பட்டு காற்றில் தவழ்ந்துகொண்டிருக்கும். 

அதிகாலை குளியலுடன் கூடிய கோலமிடுதல், வீதி பஜனை நம் உடலுக்கு ஆண்டு முழுவதும் தேவையான சக்தியை தர வல்லது.

சூரியன் வெளிப்பட்டு வெம்மையை வீசத் தொடங்கியதும் அந்த சக்திகள் அனைத்தும் அப்படியே கரைந்து போய்விடும்.

ஆரோக்கியத்தை அளிக்கும் அந்த சக்திகளை நாம் அடைய வேண்டும்  என்பதற்காகவே, மார்கழி அதிகாலையில் குளித்தல், வீதி பஜனை, கோலமிடுதல் என்றெல்லாம் ஏற்படுத்தி வைத்தார்கள்.

நம் முன்னோரின் அழகிய வழியில், பக்தியோடு இறைவனைத் தொழுவதற்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ள இறைவனின் வடிவமாகிய இந்த மாதத்திலே யாவரும் நோன்பு இருந்து, பக்தி மார்கத்தை கடைபிடித்து, கோதைத் நாச்சியாரும், மாணிக்கவாசகரும் அருளிய பாடல்கள் அறிந்து பாடி, பூமிக்கு பாரமில்லாமல் இருப்போமாக!'

'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே யாவோம் உமக்கே யாம் ஆட்செய்வோம் மற்றை காமங்கள் மாற்று 'என வேண்டி, அவன் தாள் வணங்கி, அவன் அருள் பெற்று இன்புறுவோமாக!

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...