Tuesday, December 17, 2019

மார்கழியில் அதிகாலை கோலமிட்டு வீட்டை சிறப்பு செய்வதன் ரகசியம்?

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணனே கூறியிருக்கிறார்.


இதனை பீடுடை மாதம் என்று அழைப்பார்கள். இந்த சொல் நாளடைவில் திரிந்து பீடைமாதம் என்று வழக்கில் வந்துவிட்டது. 

பீடுடை மாதம் எனில் சிறந்த, பெருமைவாய்ந்த, மதிப்புள்ள மாதம் என்று பொருள். 

அதனால் அல்லவோ பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தான் அந்த மாதமாக இருப்பதாக பறைசாற்றியுள்ளார்.

இம்மாதந்தில் அனைத்து கோயில்களும் விடியற்காலையில் திறக்கப்படும். சிறப்பு வழிபாடுகள் ஆராதனைகள் நடைபெறும்.

வீடுகளில் அதிகாலை பிரம்ம முகூர்த்தமான 4.30 மணிக்கெல்லாம் எழுந்து நீராட வேண்டும். 

அதிகாலை நேரங்களில் வீட்டில், வீட்டு வாசலில் தீபம் ஏற்றி, வீடு முழுவதும் பிரகாசமாக காட்சியளிக்க வேண்டும்.

வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடவேண்டும். அந்த கோலத்தின் நடுவில் சிறிதளவு மாட்டுச் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து அதில் பரங்கிப் பூ வைக்க வேண்டும்.

இவ்வாறு மார்கழியை வரவேற்று அனைவர் வீட்டு வாசலிலும் அழகிய கோலங்களும், தீபங்களும் அணிவகுத்து அழகுற காட்சியளிக்கும்.



வீதிகளில் ஒரு கூட்டம், இசைக்கருவிகளுடன் பஜனை செய்தபடி வரும்.

இந்த மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலை/விடியற்காலை நேரம். எந்த ஒரு காரியத்தையும் சிந்தித்து செயல்படுத்தி திட்டம் தீட்ட உகந்த  நேரம் அதிகாலை நேரம். 

மார்கழியில் மட்டும் இதெல்லாம் எதற்காக?

ஏன் அதிகாலை குளித்துவிட வேண்டும்?

ஏன் கோலமிட்டு வீட்டை சிறப்பு செய்கிறார்கள்?

ஏன் அதிகாலையில் வீதி பஜனை? 

மற்ற மாதங்களுக்கு இந்த சிறப்பு இல்லாதது ஏன்?

விஞ்ஞான ரீதியாகவே, மார்கழி மாதத்தில் மட்டும், அதுவும்  அதிகாலையில் ஏராளமான ஆக்ஸிஜன் உள்ளிட்ட சக்திகள் வெளிப்பட்டு காற்றில் தவழ்ந்துகொண்டிருக்கும். 

அதிகாலை குளியலுடன் கூடிய கோலமிடுதல், வீதி பஜனை நம் உடலுக்கு ஆண்டு முழுவதும் தேவையான சக்தியை தர வல்லது.

சூரியன் வெளிப்பட்டு வெம்மையை வீசத் தொடங்கியதும் அந்த சக்திகள் அனைத்தும் அப்படியே கரைந்து போய்விடும்.

ஆரோக்கியத்தை அளிக்கும் அந்த சக்திகளை நாம் அடைய வேண்டும்  என்பதற்காகவே, மார்கழி அதிகாலையில் குளித்தல், வீதி பஜனை, கோலமிடுதல் என்றெல்லாம் ஏற்படுத்தி வைத்தார்கள்.

நம் முன்னோரின் அழகிய வழியில், பக்தியோடு இறைவனைத் தொழுவதற்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ள இறைவனின் வடிவமாகிய இந்த மாதத்திலே யாவரும் நோன்பு இருந்து, பக்தி மார்கத்தை கடைபிடித்து, கோதைத் நாச்சியாரும், மாணிக்கவாசகரும் அருளிய பாடல்கள் அறிந்து பாடி, பூமிக்கு பாரமில்லாமல் இருப்போமாக!'

'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே யாவோம் உமக்கே யாம் ஆட்செய்வோம் மற்றை காமங்கள் மாற்று 'என வேண்டி, அவன் தாள் வணங்கி, அவன் அருள் பெற்று இன்புறுவோமாக!

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...