கோலத்தின் மேல் ஏன் பரங்கிப் பூவை வைக்க வேண்டும்?
சூட்சுமமான தகவல் அது.
இந்த மாதத்தை நோன்பு மாதம் என்றும் சொல்வதுண்டு. பாவையர் நோன்பிலிருந்து நல்கணவனைப் பெறுவார்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முதுமொழி. மார்கழியில் பாவையர் நோன்பிருந்து வழிபட தை பிறந்தவுடன் அவர்களின் விரதத்தின் பயனாக நல்லதொரு வழி பிறந்து அவர்களின் நோக்கம் நிறைவேறும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.
அதனால்....எந்தெந்த வீடுகளில் மகனோ.. மகளோ திருமணத்திற்கு தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டுக் கோலங்களில் பரங்கிப்பூவை வைத்துவிடுவார்கள்.
ஊர்க்காரர்கள் தெருவில் பஜனை செய்தபடி வரும்போது, அந்தப் பூவைப் பார்ப்பார்கள். பூ இருக்கும் வீட்டில் பூவை இருக்கிறாள் என்று புரிந்து கொள்வார்கள்.
தை மாதம் பிறந்ததும், அந்த வீட்டிற்குப் போய் பெண்ணையோ, மாப்பிள்ளையையோ பேசி முடித்து விடுவார்கள்.
ஆனால், இப்போதோ, இந்த சூட்சுமத்தை உணராமல், எல்லா வீடுகளிலும் கோலத்தின் மேல் அழகுக்காக பூ வைக்கிற வழக்கம் வந்து விட்டது.
.அந்த பழைய வழக்கத்தில் வேறொரு அற்புதமான நிகழ்ச்சியும் உண்டு. கோலங்களின் மீது பரங்கிப் பூக்களை வைத்தார்கள் இல்லையா!
அதிலுள்ள தேனைக் குடிக்க கருத்த வண்டுகள் மலர்களைச் சுற்றி வட்டமிடும். குழந்தைகள் அந்தக் கோலத்தைச் சுற்றி அமர்ந்து, அந்த வண்டுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
சூரியன் உச்சியை அடையும் முன் சின்னஞ்சிறு கிண்ணங்களில் பாலைக் கொண்டு வந்து அந்த மலர்களுக்குள் ஊற்றி நிரப்புவார்கள்.
அதை அப்படியே சூரிய பகவானுக்கு நைவேத்யம் செய்வார்கள். கிண்ணத்தில் மீதியிருக்கும் பாலைத் தாங்களே குடித்துவிடுவார்கள்.
அந்தப்பூவை சாணத்திற்குள் அழுத்தி,பூ வரட்டி தட்டி வெயிலில் காய வைத்து விடுவார்கள்.
அதன்பிறகு அதைச் சேகரித்து வீட்டு முற்றத்தில் பொங்கலிட்டு வழிபடுவார்கள். இதனைச் சிறு வீட்டு பொங்கல் என அழைப்பர். பின்னர் சேகரித்த சாண உருண்டைகளை நீர் நிலைகளில் சேர்ப்பார்கள்.
இதெல்லாம் எவ்வளவு ஆனந்தமாயிருக்கும் தெரியுமா!அந்த ஆனந்தம் மறுபடியும் கிடைக்க, அந்த மாதவனை வேண்டுவோம்.
வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
Collected from Social Media..

No comments:
Post a Comment