Friday, May 31, 2019

நாட்டுப்புற கலைகள் பகுதி 2 - கரகாட்டம்

கரகாட்டம்

அலங்கரிக்கப்பட்ட செம்பு அல்லது பித்தளை குடத்தைத் தலையில் வைத்துக்கொண்டு நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கு ஏற்றவாறு குடம் கீழே விழாதவாறு பெண்கள் மற்றும் ஆண்கள் ஆடும் ஆட்டம் கரகாட்டம் எனப்படும்.



கரகாட்டம் தமிழ் நாட்டின் தலை சிறந்த நாட்டுப்புற நடனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

கரகம் என்ற சொல் நூல்களில் இடம் பெறுகிறது. தொல்காப்பியத்தில், நூலே கரகம் முக்கோல் மனையே (தொல், பொருள், இளம், நூற்பா, 615) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, கரகம் என்ற சொல் பல நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருந்தது தெரிகிறது. கரகம் இரண்டு விதமாக இருக்கிறது.

ஒன்று "சக்தி கரகம்".

மற்றொன்று "ஆட்டக்கரகம்".

கோவில் திருவிழாவின் பொழுது, பூசாரி கரகத்தை அலங்கரித்துத் தன் தலையில் சுமந்து வருதல் சக்திக் கரகம் எனப்படும்.

பொது நிகழ்வுகளில் அலங்கரிக்கப்பட்ட சொம்பை தலையில் வைத்து ஆடுவது ஆட்டக் கரகம்.

சொம்பின் வாய் பகுதியில் தேங்காயை வைத்து, அதன் மேல் குடை போன்ற அலங்காரமும் இதில் வைக்கப்படுகிறது.

அதன் மேல் ஒரு கிளிப் பொம்மை செருகி இருக்கும். கரகத்தைத் தலையில் சுமந்து சுழன்று ஆடும்பொழுது கிளி பறப்பது போல அழகாக இருக்கும்.

மதுரைப் பகுதியில் பழமை மாறாமல் கரகாட்டம் ஆடப்பட்டு வருகிறது.

தஞ்சை, சென்னை, சேலம் போன்ற பகுதிகளில் கரகத்தைத் தலையில் சுமந்து கொண்டு, ஏணி மேல் ஏறுதல் போன்ற பல விளையாட்டை கையாளுகின்றனர்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை


Collected from Social Media..

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...