மயிலாட்டம்
மயில் உருவத்தைக் கொண்டு செய்யப்பட்ட பொம்மையில் இருந்துகொண்டு மயிலைப்போல தோகையை விரித்து தாளத்திற்கு ஏற்றபடி ஆடுவது மயிலாட்டம்.
கரகாட்டத்தின் துணை யாட்டமாகவும், கரகாட்டத்தின் இடை நிகழ்ச்சியாகவும் இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகிறது.
பொய்க்கால் குதிரை செய்வது போலவே மயில் கூட்டையும் செய்கின்றனர். தலை, உடல், இறக்கைகள் முதலியவைகள் தனித்தனியே செய்யப்பட்டு அவற்றின் மீது மயிலைப் போல் வண்ணம் தீட்டுகின்றனர்.
மயில் தலையில் கம்பியாலான கொண்டைகளும், குவி லென்சு, கண்ணாடியாலான கண்களும் அமைக்கப் படும். திறந்து மூடுவதற்கேற்ப மயிலின் வாய் தகடுகளால் அமைக்கப்பட்டு இருக்கும்.
மயில் கூட்டின் அடிப்பக்கத்தில் மயிலிறகுகள் பொருத்தப்படும். மயிலாட்ட கலைஞர் மயிலாக ஒப்பனை செய்துகொள்ளும் போது மயிலின் கூம்பு போன்ற கழுத்து பகுதியைத் தன் தலையில் வைத்துக் கட்டிக்கொள்வர்.
அக்கழுத்துப் பகுதியில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள நீலத்துணி கலைஞரின் கழுத்தினை மறைத்துக் கொள்ளும். மயிலின் உடல் கூட்டினைத் தோளில் சுமக்குமாறு கட்டிக்கொள்கின்றனர்.
உடல் கூட்டிலிருந்து கட்டித் தொங்கவிடப்பட்ட பச்சை வண்ண துணி ஆட்டக் கலைஞரின் கால்களை மறைத்துக் கொள்ளும். சலங்கைகள் கட்டப்பட்ட கால்கள் மட்டுமே வெளியில் தெரியும்.
இரண்டு கைகளிலும் மயிலின் இரண்டு இறக்கைகள் கட்டப்படும். மயில் நடத்தல், ஓடுதல், தலையை அசைத்தல், தோகையை விரித்தல், அகவுதல் போன்ற செயல்கள் நுட்பமாக செய்யப்படும் விதம் தனி அழகுடன் காணப்படும்.
வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..
No comments:
Post a Comment