Friday, May 31, 2019

நாட்டுப்புற கலைகள் பகுதி 3 - ஒயிலாட்டம்

ஒயிலாட்டம்


ஒயில் என்ற சொல்லுக்கு அழகு, எடுப்பு, கம்பீரம், அலங்காரம் என்று பொருள். 



ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டமாக ஒயிலாட்டம் இருப்பதால் கம்பீரமும் எடுப்பும் மிக்க ஆட்டம் என்று ஒயிலாட்டம் பார்க்கப்படுகிறது. 

ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான குழு ஆட்டம் இது. 

ஒயிலாட்டத்தில் கலந்து கொள்ளும் ஆட்டக்காரர்களுக்கு வயது வரையறை இல்லை. 

ஒயிலாட்டத்திற்கென்று தனித்த ஒப்பனை முறைகள் உள்ளன. 

ஒழுங்காகத் தலை வாரியிருப்பார்கள். கால்களில் சலங்கை கட்டிக்கொண்டு, வலது கையில் ஒரே வண்ணத்திலான கைக்குட்டை பிடித்திருப்பதும், தலையில் ஒரே வண்ணத்தில் துணிகளைக் கட்டியிருப்பதும் அவசியம். 

ஆட்டத்தின் வேகத்தைத் தீர்மானிக்க ஆட்ட இலக்கணங்களும் உண்டு. ஆட்டத்தின் வேகத்தைப் பொறுத்தும் அடவுகளின் வேகத்தைப் பொறுத்தும் இதை வகைப்படுத்தியுள்ளனர். 

மெதுவான ஆட்டத்திற்கு தக்கு என்றும் வேகமான அடவுகளுக்கு காலம் என்று பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. 

இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் போன்ற பகுதிகளில் இந்த நடனம் பெரிதும் ஆடப்படுகிறது. 

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை


Collected from Social Media..

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...